Other News

வித்தியா கொலை விவகாரம்: மரபணு அறிக்கை தாக்கல்

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை தொடர்பான மரபணு அறிக்கை, யாழ். மேல் நீதிமன்ற சிறப்பு அமர்வில் பாரப்படுத்தப்பட்டுள்ளது. ட்ரயல் அட் பார் தீர்ப்பாயம் முன்னிலையில் நடைபெற்று வரும் குறித்த சாட்சியப் பதிவின் நான்காவது நாளான நேற்றைய தினம், மொறட்டுவ பல்கலைக்கழக கணினி விஞ்ஞான பீடத்தால் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட மரபணு அறிக்கை உட்பட வழக்குடன் தொடர்புடைய ஆவணங்கள் யாவும் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றினால் பாரப்படுத்தப்பட்டது. நேற்றைய தின சாட்சியப் பதிவுகள் இரவு 7 […]

அமெரிக்காவுடனான உறவு வலுப்பெற்றுள்ளது: ஜனாதிபதி மைத்திரி

இலங்கைக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மேலும் வலுவடையும் என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அமெரிக்கா இன்று (செவ்வாய்க்கிழமை) தமது சுதந்திர தினத்தை கொண்டாடுகின்ற நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேலும் உத்வேகம் பெறும் என குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி, அரசியலமைப்பு அங்கீகரிக்கப்பட்ட காலத்திற்கு முன்பிருந்தே அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு […]

ஜனாதிபதி செயலாளராக ஒஸ்டின் பதவிப்பிரமாணம்

ஜனாதிபதியின் செயலாளராக, இலங்கையின் மூத்த அரச உத்தியோகத்தர் ஒஸ்டின் பெர்ணான்டோ பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. புதிய செயலாளரின் பணி, அரச சேவைக்கு பலம் சேர்க்கும் வகையில் அமையுமென ஜனாதிபதி தமது டுவிட்டர் வலைப்பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் செயலாளராக பதவி வகித்து வந்து பீ.பி.அபேகோன் கடந்த மாதம் 30ஆம் திகதி […]

தடுமாறாத தமிழர்களுக்கு தலைமை ஏற்பது யார்? – யாழில் கலந்துரையாடல்

‘தடுமாறாத தமிழர்களிற்கு தலைமை ஏற்பது யார்?’ எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 9ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கருத்துப்பகிர்வு கலந்துரையாடலொன்று நடைபெறவுள்ளது. மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கலைத்தூது மண்டபத்தில் இந்த கருத்துப் பகிர்வு இடம்பெறவுள்ளதாக மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்தார். குறித்த கருத்துப்பகிர்வு குறித்து அவர் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்- ”இன விடுதலைக்கான அரசியல் பயணத்தில் தமிழ் மக்கள் பல்வேறு விதமான […]

கிழக்கு ஆளுநர் நியமனம் இன ஒற்றுமைக்கு வழிவகுக்க வேண்டும்: முதலமைச்சர் நஸீர்

நாட்டின் ஏனைய பகுதிகளைப் போல கிழக்கு மாகாணத்திலும் இன முறுகலை ஏற்படுத்த சில தீய சக்திகள் முயற்சிப்பதாக தெரிவித்துள்ள கிழக்கு முதலமைச்சர் நஸீர் அஹமட், கிழக்கின் புதிய ஆளுநர் நியமனமானது இன ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் வலுப்படுத்த வழிவகுக்குமென நம்புவதாக குறிப்பிட்டுள்ளார். கிழக்கு மாகாண ஆளுநராக ரோஹித்த போகொல்லாகம இன்று (செவ்வாய்க்கிழமை) ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், புதிய ஆளுநருக்கு வாழ்த்து தெரிவித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கிழக்கின் […]

சவூதி மன்னர் இலங்கைக்கு திடீர் விஜயம்

சவூதி மன்னர் அப்துல் அஸீஸ் இலங்கைக்கு இன்று திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். இன்றைய தினம் காலை 11.20 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக வெளிவிவாகர அமைச்சின் தகவல் வட்டாரங்களில் அறிய முடிகிறது. இவரின் இந்த விஜயத்தில், ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது அறிய முடிகிறது. முதல் சந்திப்பு இன்று பிற்பகல் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுடன் இடம்பெறவுள்ளது. இன்று இரவு […]

மட்டக்களப்பில் ஆயிரம் இளைஞர்களுக்கு உற்பத்தித் தொழிற்துறைக்கான பயிற்சி: ஸ்ரீபத்மநாதன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஒரு வருட காலப்பகுதியில் சுமார் ஆயிரம் இளைஞர்களுக்கு உற்பத்தித் தொழிற்துறைக்காக பயிற்சியளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி வறுமை ஒழிப்புப் பிரிவின் குழுத் தலைவர் ஆர். ஸ்ரீபத்மநாதன் தெரிவித்தார். இலங்கை மத்திய வங்கி வறுமை ஒழிப்புப் பிரிவினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கான தொழில் வழிகாட்டல் பயிற்சி நெறிகள் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே இன்று (செவ்வாய்க்கிழமை) இதனைத் தெரிவித்துள்ளார். […]

விண்ணில் செலுத்திய சீன ராக்கெட் வெடித்து சிதறி விபத்து

ஷிஜியான்-18 என்னும் செயற்கைகோளுடன் ‘லாங் மார்ச்-5 ஒய் 2’ என்ற நவீன தொழில் நுட்பம் கொண்ட சீன ராக்கெட் விண்ணில் பாய்ந்த சிறிது நேரத்திலேயே வெடித்து சிதறியது. அதிக எடை கொண்ட அதி நவீன ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்துவதற்கான சோதனைகளை சீனா அவ்வப்போது நடத்தி வருகிறது. அந்நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் நேற்று காலை ஷிஜியான்-18 என்னும் செயற்கைகோளுடன் ‘லாங் மார்ச்-5 ஒய் 2’ என்ற நவீன தொழில் நுட்பம் […]

சிக்கிம் மாநில இந்திய பகுதியை சீனாவுடன் சேர்த்து வரைபடம்: மத்திய அரசு கடும் அதிர்ச்சி

சீனா புதிதாக ஒரு வரை படத்தை வெளியிட்டுள்ளது. அதில், டோகாலா பகுதி சீனாவின் உள்ளடங்கிய பகுதி போல குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வரை படம் மத்திய அரசுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியா, சீனா, பூட்டான் ஆகிய 3 நாடுகளின் எல்லை பகுதி ஒன்றிணையும் இடம் சிக்கிம் மாநிலத்தில் உள்ளது. டோகாலா என்று அழைக்கப்படும் இந்த இடம் சிக்கிம் மாநிலத்தின் உள்ளடக்கிய பகுதியாக இருக்கிறது. இங்கு இந்திய ராணுவம் பாதுகாப்பு […]

சீன ஆக்கிரமிப்பு கடற்பகுதியில் அமெரிக்க போர்க்கப்பல்

தென்சீன கடற்பகுதியில் அமைந்துள்ள சீன ஆக்கிரமிப்பு தீவை நெருங்கியபடி அமெரிக்க போர்க்கப்பல் பயணம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்சீன கடற்பகுதியில் உள்ள தீவு கூட்டங்களுக்கு பல்வேறு நாடுகளும் சொந்தம் கொண்டாடி வருகின்றன. இந்நிலையில், பராசெல் தீவு கூட்டங்களில் ஒன்றான சிறிய பரப்பளவு கொண்ட டிரைடன் தீவை சீனா ஆக்கிரமித்துள்ளது. இந்த தீவு தங்களுக்கு சொந்தமென தைவான் மற்றும் வியட்நாம் நாடுகளும் கூறி வருகின்றன. தென்சீன கடல் பகுதி முக்கிய […]