Other News

பத்து வருடங்களாகத் தடுப்பிலிருந்த அரசியல் கைதி ஒருவர் விடுவிப்பு!

சுமார் 10 வருடங்களுக்கு மேலாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதி கொழும்பு சிறப்பு மேல் நீதிமன்றால் விடுவிக்கப்பட்டார். கிளிநொச்சியைச் சேர்ந்த ஜெயஇராம் இராமநாதன் 2007ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இரகசியப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார். அன்றிலிருந்து அவர் தடுத்துவைக்கப்பட்டிருந்தார். கொழும்பிலிருந்து கட்டுநாயக்கா செல்லும் ரயில் பாதையை வெடிகுண்டு வைத்து தகர்க்க சதித் திட்டம் தீட்டியமை, இராணுவத்தின் உயர் அதிகாரியின் நடவடிக்கைகளை வேவு பார்த்து விடுதலைப்புலிகள் […]

வாக்காளர் இடாப்பில் பெயரைப் பதிவது ஒவ்வொரு தமிழரினதும் பிறப்புரிமை! – சண். குகவரதன் தெரிவிப்பு

“வாக்குப் பலத்தால் இனவாதத்தை தூக்கியெறியலாம் என்பதைக் கடந்த தேர்தலில் தமிழ் மக்கள் தெளிவாக எடுத்துக்காட்டினார்கள். எனவே, இம்முறை வாக்காளர் பட்டியலில் ஒவ்வொரு தமிழனும் தனது பெயரைப் பதிய வேண்டும்.” – இவ்வாறு வலியுறுத்தியுள்ளார் ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதி பொதுச் செயலாளரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான சண். குகவரதன். இதுதொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- “வாக்குப்பலம் என்பது தமிழ் மக்களின் ஜனநாயகப் பலம். ஜனநாயக உரிமை. […]

பெருந்திரளான பக்தர்களுக்குத் தேரேறி அருட்காட்சியளித்தார் நயினை அம்மன்!

வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்தத்  தேர்த்திருவிழா நேற்று சிறப்பாக இடம்பெற்றது. அதிகாலை மூன்று மணிக்கு ஆரம்பமான அபிஷேகம் மற்றும்  சிறப்புப் பூஜைகளைத் தொடர்ந்து காலை ஏழு மணிக்கு வசந்த மண்டபப்பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பெருந்திரளான பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் அம்மன்  வீதி உலா வந்து பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.

எத்தகைய எதிர்ப்புக்கள் வந்தாலும் புதிய அரசமைப்பு உருவாக்கப்படும்! – பிரதமர் ரணில் திட்டவட்டம்

நாட்டில் எத்தகைய எதிர்ப்புக்கள் வந்தாலும் புதிய அரசமைப்பை உருவாக்கும் பணிகள் தொடரும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். மன்னாரில் உலர் வலய நீர் வழங்கல் திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “புதிய அரசமைப்புக் குறித்து யாருமே அச்சப்படத் தேவையில்லை. இதனை அமைப்பதற்கு மக்கள் அரசுக்கு ஆணை வழங்கியுள்ளதால் இந்த விடயத்தை அரசால் உதாசீனம் செய்ய முடியாது. புதிய அரசமைப்பில் பௌத்த […]

ஐந்து அமைச்சுக்களின் செயற்பாடுகளை ஆராய வடக்கு மாகாண சபையின் சிறப்பு அமர்வு 21 இல்!

வடக்கு மாகாண சபையின் ஐந்து அமைச்சுக்களினதும் கடந்த மூன்றரை வருடகால செயற்பாடுகள் தொடர்பாக ஆராய்வதற்கான சிறப்பு அமர்வு எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறும் என அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் அறிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா விடுத்த கோரிக்கைக்கு அமையவே இந்தச் சிறப்பு அமர்வு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபையின் 98 ஆவது அமர்வு கடந்த வியாழக்கிழமை மாகாண சபையின் பேரவைச் செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது, எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா […]

அரசின் பாதகமான நடவடிக்கைகளைத் தட்டிக்கேட்பதற்குப் பின்வாங்கமாட்டோம்! – அமைச்சர் ரிஷாத்

“சிக்கல்களுக்கும் குழப்பங்களுக்கும் மத்தியில் ஆட்சி செய்யும் இந்த அரசின் நடவடிக்கைகளால் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள அநீதிகள், பாதிப்புக்களை மிகவும் பக்குவமாகவும் இறுக்கமாகவும் தட்டிக்கேட்டு அவற்றை சரிசெய்யும் முயற்சிகளில் நேர்மையுடன் ஈடுபட்டு வருகின்றோம்.” – இவ்வாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். முசலி தேசிய பாடசாலையின் மூன்று மாடிக்கட்டடத்துக்கான அடிக்கல் நடும் விழா நேற்று நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். […]

இந்தோனேசியாவில் 73 வயது பெண்ணை மணந்த 15 வயது சிறுவன்

இந்தோனேசியாவில் 73 வயது பெண்ணை 15 வயது சிறுவன் மணந்த சம்பவம் அப்பகுதியில் சமீப கால பரபரப்பு பேச்சாக உள்ளது. 75 வயது மூதாட்டி ரொகாயா பின்டியுடன் சிறுவன் செலாமெட் ரியாடி. ஜகர்த்தா: இந்தோனேசியாவில் சுமத்ரா தீவில் காராங் என்டா கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் செலாமெட் ரியாடி (15). சமீபத்தில் இவன் மலேரியா காய்ச்சலால் கடும் அவதிப்பட்டான். அப்போது அவனை அண்டை வீட்டில் வசிக்கும் 75 வயது […]

2040-ம் ஆண்டில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்க பிரான்ஸ் முடிவு

சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் விதமாக வரும் 2040-ம் ஆண்டு முதல் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்க பிரான்ஸ் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெட்ரோல், டீசல் உள்ளிட்ட சுற்றுச்சூழல்களை மாசுபடுத்தும் வாகனங்களை படிப்படியாக குறைத்து மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் விதமாக இந்த நடவடிக்கையை பிரான்ஸ் மேற்கொள்ள உள்ளது. தற்போதைய நிலவரப்படி மொத்த வாகனப் பயன்பாட்டில் வெறும் 1.2 சதவிகிதம் அளவுக்கே அந்நாட்டில் மின்சார வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு […]

தீவிரவாதிகள் என தவறாக நினைத்து நைஜரில் ராணுவம் சுட்டதில் 14 பொதுமக்கள் பலி

நைஜீரியா எல்லையில் உள்ள அபாடம் கிராமத்தில ரோந்து சுற்றிய ராணுவ வீரர்கள் 14 பேரை சுட்டுக்கொன்றனர். அதன்பின்னர் தான் அவர்கள் தீவிரவாதிகள் அல்ல. அனைவரும் அப்பாவி பொதுமக்கள் என தெரியவந்தது. நைஜீரியாவில் போகோ ஹாரம் தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். தற்போது எல்லை தாண்டிச் சென்ற அண்டை நாடான நைஜரில் தாக்குதல்கள் நடத்துகின்றன. அவர்களை ஒடுக்கும் நடவடிக்கையில் நைஜர் ராணுவம் தீவிரமாக உள்ளது. ராணுவ வீரர்கள் வாகனங்களில் ரோந்து சுற்றி […]

மஹிந்தவின் ஆட்சிக்கு மீண்டும் இடம் இல்லை – மைத்திரி திட்டவட்டம்

“2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி இந்த நாட்டிலிருந்து ஏகாதிபத்திய ஆட்சிக்கு நான் முடிவுகட்டினேன். அத்தகைய ஆட்சிக்கு இந்த நாட்டில் மீண்டும் இடம் கிடையாது.” இவ்வாறு திட்டவட்டமாகத் தெரிவித்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. ”முகமூடியைப் போட்டுக்கொண்டு மக்களுக்கு அழகானதொரு உலகைக் காட்டி மீண்டும் அதிகாரத்துக்கு வருவதற்கு சிலர் (மஹிந்த தரப்பினர்) மேற்கொண்டுவரும் சதித்திட்டங்கள் குறித்து இன்று நாட்டு மக்கள் தெளிவுடன் இருக்கின்றனர்” என்றும் அவர் குறிப்பிட்டார். கல்கமுவ பிரதேசத்தில் […]