Other News

கஜேந்திரகுமாரின் சில்லறைக் கருத்துக்கு தேர்தலில் தக்க பாடம் புகட்டுவர் தமிழர்! – சம்பந்தன்

“கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறிவருகின்ற சில்லறைத்தனமான கருத்துகளுக்கு தமிழ் மக்கள் அடுத்த தேர்தலில் அவருக்கு தக்க பாடம் புகட்டுவார்கள். கடந்த காலங்களில் தமிழ் மக்கள் அவருக்குப் புகட்டிய பாடங்களை மறக்காமல் இருந்தால் சரி.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுக் கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். “தமிழீழ விடுதலைப்புலிகளிடம் நீங்கள் (இரா.சம்பந்தன்) புனர்வாழ்வு பெற்ற பின்னரே தேர்தலில் போட்டியிட்டு […]

மகாநாயக்கர்களிடம் சரணடைந்தார் சிறிலங்கா அதிபர்

ஒற்றையாட்சித் தன்மைக்கோ, பௌத்த மதத்துக்கான முன்னுரிமைக்கோ பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் எந்தவொரு அரசியலமைப்பு மறுசீரமைப்பும் மேற்கொள்ளப்படாது. மகாசங்கத்துடன் கலந்துரையாடப்பட்டே புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என்று மகாநாயக்க தேரர்களிடம், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உறுதி அளித்துள்ளார். கண்டியில் உள்ள அதிபர் செயலகத்தில் நேற்று மாலை நடந்த சந்திப்பின் போதே, மகாநாயக்க தேரர்களிடம், சிறிலங்கா அதிபர் இந்த வாக்குறுதியை அளித்துள்ளார். இன்னமும் புதிய அரசியலமைப்பு வரைவு இடம்பெறவில்லை. புதிய அரசியலமைப்பு வரைவு […]

பௌத்த மதத்துக்கு உரிய இடம் வழங்கப்படாவிட்டால் அரசில் இருக்கமாட்டேன்! – அமைச்சர் அர்ஜுன ரணதுங்க திட்டவட்டம்

இந்த நாட்டில் பௌத்த மதத்துக்கு உரிய இடம் வழங்கப்படாவிட்டால் தான் அரசில் தொடர்ந்து இருக்கப்போவதில்லையென பெற்றோலிய அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். புதிய அரசமைப்பால் பௌத்த மதம் இந்நாட்டில் வகித்துவரும் இடத்துக்குப் பங்கம் எதுவும் ஏற்படுமா? என்று சிங்கள ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “புதிய அரசமைப்புத் திட்டத்தால் பௌத்த மதத்துக்குப் பாதிப்பு ஏற்படுமென நாங்கள் எந்த இடத்திலும் கூறவில்லை. அவ்வாறு கூறப்போவதும் […]

சுகாதார அமைச்சின் தகவல்கள் பொய்! மூன்று இலட்சம் பேருக்கு டெங்கு!! – மஹிந்த அணி விளக்கம்

இலங்கையில் இப்போது சுமார் 71 ஆயிரம் டெங்கு நோயாளிகளே இருப்பதாக சுகாதார அமைச்சு வெளியிட்டிருக்கும் தகவல்கள் அப்பட்டமான பொய் எனவும், மூன்று இலட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு இந்த நோய் தொற்றியுள்ளது என்பதே உண்மை எனவும் மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற வளவில் நேற்று ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோது இவ்வாறு தெரிவித்த பிரசன்ன ரணதுங்க எம்.பி. மேலும் கூறியுள்ளவை வருமாறு:- “அரசின் மிகப் பலவீனமான நடவடிக்கைகளால் டெங்கு நோய் […]

அரசியல் பழிவாங்கலை இலக்குவைத்தே காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சட்டமூலம்! – மஹிந்த தெரிவிப்பு

பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்பட்டோர் சட்டமூலத்தை அரசு கொண்டுவர முயற்சிசெய்வதற்கு முக்கிய காரணம் அரசியல் பழிவாங்கலைத் தவிர வேறில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அவர் மேலும் கூறியுள்ளவை வருமாறு:- “காணாமல் ஆக்கப்பட்டோர் சட்டமூலம் தொடர்பில் மகாநாயக்க தேரர்கள் தெரிவித்திருக்கும் கருத்தை அரசு கவனத்தில்கொள்ளவேண்டும். மகாநாயக்க தேரர்களின் கருத்தை உதாசீனம் செய்யக்கூடாது. நாட்டின் நன்மை கருதியே அவர்கள் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளனர். […]

அடுத்தவாரம் இலங்கை வருகிறார் ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன்

மனித உரிமைகள் மற்றும் தீவிரவாத எதிர்ப்பு தொடர்பான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன் அடுத்தவாரம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். ஜூலை 10ஆம் திகதி தொடக்கம், 14 ஆம் திகதி வரையான ஐந்து நாட்கள் ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன் சிறிலங்காவில் தங்கியிருந்து, ஆய்வுகளை மேற்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் தீவிரவாத எதிர்ப்புக் கொள்கை மற்றும் சட்ட வரையறை தொடர்பாக கலந்துரையாடல் ஒன்றை நடத்தவும், தான் எதிர்பார்த்திருப்பதாக பெண் […]

கத்தாருக்கு விதிக்கப்பட்ட கோரிக்கைகள் நடைமுறைக்கு ஒத்துவராது: கத்தார் வெளியுறவுத்துறை தகவல்

கத்தாருக்கு விதிக்கப்பட்ட கோரிக்கைகள் நடைமுறைக்கு ஒத்துவராத ஒன்றாக இருப்பதாக கத்தார் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பக்ரைன், எகிப்து ஆகிய 4 நாடுகள் கத்தார் நாட்டுடன் ஆன தூதரக உறவை கடந்த மாதம் (ஜூன்) 5-ம் தேதி முதல் முறித்துக்கொண்டன. தீவிரவாதிகளுக்கு மறைமுகமாக பணஉதவி செய்வதாகவும், எதிரிநாடான ஈரானுடன் உறவு வைத்திருப்பதாகவும் கூறி கத்தாருக்கு இந்த தடை விதிக்கப்பட்டது. மேலும் கத்தாரில் இருந்து மேற்கண்ட […]

வடகொரியாவின் மிரட்டலை முறியடிக்க தயாராக இருக்கிறோம்: அமெரிக்க ராணுவ தலைமையகம்

புதிதாக சோதிக்கப்பட்ட ஏவுகணை அமெரிக்காவுக்கு சுதந்திர தின பரிசு என வடகொரிய அதிபர் கூறியிருந்த நிலையில், எந்த வகையான மிரட்டலையும் முறியடிக்க தயாராக இருப்பதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகன் தெரிவித்துள்ளது. பல்வேறு நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி, கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து எதிரிகளின் இலக்கை குறிவைத்து அழிக்கும் ஏவுகணை மற்றும் ராக்கெட் எஞ்சின்களை சோதனை செய்யும் வடகொரியா, சமீபத்தில் புதிய ஏவுகணை ஒன்றை சோதனை செய்தது. வடக்கு பியாங்கன் […]

வறட்சி காரணமாக இலட்சம் பேர் பாதிப்பு

வறட்சியான காலநிலை காரணமாக 12 மாவட்டங்களில் 8 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார். இதேவேளை, வறட்சியான காலநிலையுடன் கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் கீழுள்ள 14,000 இற்கும் அதிகமான குளங்கள் வற்றியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்திள் நீர் முகாமைத்துவ பிரிவின் தலைவர் பிரபாத் விதாரண கூறினார். […]

உள்ளூராட்சி சபைத் தேர்தல் சட்டமூலத்தை இவ்வாரத்துக்குள் நிறைவேற்றுமாறு மஹிந்த அணி காலக்கெடு! –

உள்ளூராட்சி சபைத் தேர்தல் குறித்த திருத்தச் சட்டமூலத்தை இவ்வாரத்துக்குள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி துரிதகதியில் தேர்தலை நடத்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மஹிந்த அணியான பொது எதிரணி வலியுறுத்தியது. நாடாளுமன்றம் நேற்றுப் பிற்பகல் ஒரு மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. தினப்பணிகள் முடிவடைந்த பின்னர், நிலையியல் கட்டளையின் 23/2இன் கீழான கேள்விநேரத்தில், “உள்ளூராட்சி சபைத் திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளபோதிலும், அது தொடர்பான விவாதம் இவ்வாரம் நடத்தப்படுவதற்குரிய […]