“வடக்கு மாகாண சபை விவகாரம் ஊதிப் பெருப்பிக்கப்படக்கூடாது. இதற்கு விரைவில் முடிவு கட்டப்படவேண்டும்; சுமுகமான தீர்வு காணப்படவேண்டும். இந்த விடயம் தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சரை எப்போது சந்தித்துப் பேசுவது என்று இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை. ஆனால், விரைவில் சந்திப்பு நடக்கும்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். வடக்கு மாகாண சபை விவகாரம் தொடர்பில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் எப்போது நேரடிச் சந்திப்பு நடைபெறும் […]
Other News
2019இல் ஜனாதிபதித் தேர்தல்?
அரசமைப்புத் திட்டத்தின்படி அடுத்த ஜனாதிபதித் தேர்தல் 2019ஆம் ஆண்டில் நடைபெறவேண்டும் என்பது நிச்சயமாகியுள்ளது என அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர். அரசமைப்புத் திட்டத்தின் 7ஆவது பிரிவின் 30 (1)ஆம் ஷரத்தின்படி ஜனாதிபதியொருவரின் உத்தியோகபூர்வ காலம் ஐந்து வருடங்களாகும். அதன் 31 (3)ஆம் ஷரத்தின்படி ஜனாதிபதியொருவரின் பதவிக்காலம் முடிவடைவதற்கு ஒருமாத காலத்துக்குக் குறையாததும் இரண்டு மாத காலத்துக்கு மேற்படாததுமான கால எல்லைக்குள் புதிய தேர்தல் நடத்தப்படவேண்டும். தற்போதைய ஜனாதிபதி 2015 ஜனவரி […]
உள்ளூராட்சித் தேர்தல் நவம்பர் மாதத்தில் நடைபெறும் அறிகுறி!
நீண்டகாலமாக ஒத்திவைக்கப்பட்டுவரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் இவ்வருடம் நவம்பர் மாதத்தில் நடைபெறக்கூடிய சாத்தியங்கள் தென்படுவதாக அரசின் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ள புதிய தேர்தல் முறையின்கீழ் இந்தத் தேர்தல் நடத்தப்படலாம் எனவும் அவ்வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தற்சமயம் 4 ஆயிரத்துக்கு சற்று அதிகமாகவுள்ள மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கை எல்லை நிர்ணய அடிப்படையில் 8 ஆயிரமாக உயர்வடையும். எனினும், அந்த எண்ணிக்கையை 7 ஆயிரமாகக் குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதில் 25 […]
மலையகத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை
நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட சில பகுதிகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. கொட்டகலை நகரத்திலும், அதனை அண்மித்த பகுதியிலும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மேற்படி சிரமதானப்பணிகள் நடைபெற்றன. பொது மக்கள் ஏற்பாடு செய்த இந்த சிரமதானப் பணியின் போது, கொட்டகலை நகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகள் துப்பரவு செய்யப்பட்டதுடன், ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியின் இருமருங்கிலும் உள்ள வடிகான்களும் துப்புரவு செய்யப்பட்டன. இதன்போது, டெங்கு நுளம்புக் குடம்பிகள் காணப்படும் பல […]
மகாநாயக்கர்களை சந்திக்கவுள்ள கூட்டமைப்பு!
அஸ்கிரிய உள்ளிட்ட பௌத்த உயர் பீடங்களில் மகாநாயக்கர்களை, விரைவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போதைக்கு புதிய அரசியலமைப்பொன்று அவசியமில்லையென மகாநாயக்கர்கள் அண்மையில் அரசாங்கத்திடம் கோரியிருந்தனர். புதிய அரசியல் யாப்பின் ஊடாக தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்குமென எதிர்பார்த்துள்ள நிலையில், மகாநாயக்கர்களின் இந்த அறிவிப்பு தமிழ் மக்களிடையே சஞ்சலத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மகாநாயக்கர்களை சந்தித்து தமிழ் மக்களின் நிலைப்பாடு மற்றும் புதிய அரசியல் யாப்பின் அவசியம் உள்ளிட்ட விடயங்களை […]
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலைக்காய் பொங்கல் பொங்கி வழிபாடு!
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலை வேண்டி விசேட பொங்கல் வழிபாடு கிளிநொச்சி மாவட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணியளவில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் பல்வேறு வடிவங்களில் தொடர்ச்சியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையிலேயே இன்று மேற்படி வழிபாட்டு நிகழ்வினை கிளிநொச்சி மாவட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வில் […]
முல்லைத்தீவை வாட்டியெடுக்கும் வறட்சி
நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக முல்லைத்தீவு மாவட்டம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக, மாவட்டச் செயலாளர் ரூபாவதி கேதீஸ்வரன் தெரவித்துள்ளார். மாவட்டத்தின் 136 கிராம சேவகர் பிரிவுகளில், 135 கிராம சேவகர் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். வறட்சி காரணமாக முல்லைத்தீவு மக்களின் அன்றாட செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, விவசாய நடவடிக்கைகள் குன்றியுள்ளதாக தெரிவித்துள்ளார். குறிப்பாக 34,000 ஏக்கர் காணி, பயிர்செய்கைக்கு ஒவ்வாத வகையில் வறண்டு போயுள்ளதாக மாவட்ட […]
வைத்தியர் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு நாளை கூடுகிறது
சைட்டம் எனப்படும் மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியை அரசுடமையாக்குமாறு கோரி முன்னெடுத்துவரும் வேலைநிறுத்தப் போராட்டத்தின் அடுத்தகட்டம் குறித்து தீர்க்கமான முடிவுகளை எடுக்கும் முகமாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு இன்று கூடுகிறது. கடந்தவாரம் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவிருந்த வைத்தியர் சங்கம் போராட்டத்தை கைவிட்ட நிலையில் மீண்டும் வேலைநிறுத்தத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது குறித்து ஆராய இன்று அச்சங்கம் கூடுகிறது.
வித்தியா கொலை வழக்குடன் தொடர்புடைய தமிழ் பொலிஸ் அதிகாரி இந்தியாவுக்குச் செல்ல முயற்சி! – கட்டுநாயக்கா விமான நிலையத்தில் சிக்கினார்
உரிய அனுமதியைப் பெற்றுக்கொள்ளாமல், இந்தியாவுக்குச் செல்ல முயன்ற யாழ்ப்பாணத்தில் பணியாற்றும் தமிழ் பொலிஸ் அதிகாரி, கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையத்தில் உபபொலிஸ் பரிசோதகராகக் கடமையாற்றி வரும் ஸ்ரீகஜன் என்பவரே இவ்வாறு திருப்பி அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். திருட்டு நகைகளைக் கொள்வனவு செய்பவர்களிடமிருந்து யாழ்ப்பாணப் பொலிஸார் சிலர் தரகுப் பணம் பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்திருந்தது. இதன் பின்னர், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் […]
வெறுமனே பார்த்துக்கொண்டிருப்பதற்காக புதிய அரசமைப்பு தயாரிக்கப்படவில்லை! – அமைச்சர் ராஜித தெரிவிப்பு
புதிய அரசமைப்புத் திட்டம் தயாரிக்கப்பட்டுவருவது அதை வெறுமனே பார்த்துக்கொண்டிருப்பதற்கு அல்ல எனவும், அதன் நிபந்தனைகளையும், சட்டதிட்டங்களையும் அமுல்படுத்துவதற்கே எனவும் சுகாதார அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான டாக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அவர் மேலும் கூறியுள்ளதாவது:- “புதிய அரசமைப்பைக் கொண்டுவருவதற்கு மக்களின் ஆணை கிடைத்திருக்கின்றது. அது நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்துடன் நிச்சயம் நிறைவேற்றப்படும். இதில் இரகசியம் எதுவும் கிடையாது. அது மக்களின் கருத்துக்கணிப்புக்கு விடப்பட்ட […]





