கொழும்பு கோட்டைக்கும் தலைமன்னாருக்கும் இடையிலான ரயில் சேவைகள் நாளை (திஙகட்கிழமை) முதல் எதிர்வரும் 23ஆம் திகதி வரை இடைநிறுத்தப்படும் என ரயில்வே கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது. இதன்படி, கொழும்பிலிருந்து பயணிக்கும் ரயில் மதவாச்சி வரை சேவையில் ஈடுபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மதவாச்சி மற்றும் செட்டிக்குளம் பகுதிக்கு இடையில் உள்ள பழைய பாலத்தை அகற்றி விட்டு புதிய பாலம் அமைக்கப்படுவதன் காரணமாகவே தலைமன்னாருக்கான புகையிரத சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக புகையிரத போக்குவரத்து அத்தியட்சகர் […]
Other News
தலைநகரில் 28 ஆவது வீர மக்கள் தினம் அனுஷ்டிப்பு!
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) 28 ஆவது வீர மக்கள் தினம் கொழும்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. கொழும்பில் அமைந்துள்ள தலைமைக் காரியாலயத்தில், அதன் நிர்வாகச் செயலாளர் எம். பத்மநாதன் தலைமையில் இந்த நிகழ்வு இடம் பெற்றது. ஆரம்ப நிகழ்வாக நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு கழகத்தின் செயலதிபர் அமரர் கே. உமாமகேஸ்வரனின் உருவப்படத்திற்கு மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு மௌன அஞ்சலியும் மலரஞ்சலியும் செலுத்தப்பட்டன. இந்நிகழ்வில் கட்சி உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் […]
போட்டுக் கொடுத்தார் அட்மிரல் கரன்னகொட – சிறிலங்கா கடற்படை அதிகாரிகள் பலர் விரைவில் கைது
சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட வழங்கிய தகவல்களின் அடிப்படையில், சிறிலங்கா கடற்படையைச் சேர்ந்த மேலும் பலர் அடுத்து வரும் வாரங்களில் கைது செய்யப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது. 2008-2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 11 தமிழர்கள் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்டமை தொடர்பாக, சிறிலங்கா கடற்படையின் முன்னாள் ஊடகப் பேச்சாளரான கொமடோர் டி.கே.பி.தசநாயக்க குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் […]
7 நாடுகளின் பயணிகளின் விசாவை உன்னிப்பாக கண்காணிக்க இலங்கை தீர்மானம்
பாகிஸ்தான், சிரியா உள்ளிட்ட ஏழு நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளை உன்னிப்பாக கண்காணிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக உள்நாட்டு விவகார அமைச்சர் எஸ்.பி.நாவின்ன தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்புக் கரிசனைகளைக் கருத்தில் கொண்டே இந்த கண்காணிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது. சிரியா, பாகிஸ்தான், எகிப்து, ஐவரிகோஸ்ட், கானா, நைஜீரியா, கமரூன் ஆகிய ஏழு நாடுகளில் இருந்துவரும் பயணிகளுக்கு நுழை விசைவு வழங்கப்படுவதற்கு முன்னர், முழுமையான ஆய்வுக்குட்படுத்தப்படும். ஐ.எஸ் தீவிரவாத அச்சுறுத்தல் தொடர்பாக சிரியா […]
வடக்கு அமைச்சர் டெனீஸை நீக்க முதல்வர் முடிவு! – நடவடிக்கை எடுப்பேன் என்று ரெலோவுக்கு அவர் அறிவிப்பு
வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரனை, தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) கோரிக்கையின் பிரகாரம் பதவி நீக்கம் செய்வதற்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நடவடிக்கை எடுத்துள்ளார். வடக்கு மாகாண சபையின் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா ஆகியோரை பதவி நீக்கியதால் தோன்றிய சர்ச்சை அடங்குவதற்குள்ளேயே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 13ஆம் திகதி, தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் ந.சிறீக்காந்தாவினால் வடக்கு மாகாண முதலமைச்சருக்குக் […]
‘சமஷ்டி’ என்ற பெயரின்றி அதிகூடிய அதிகாரப் பகிர்வு! – கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவிப்பு
“காணி, சட்டம் ஒழுங்கு, பொலிஸ், கல்வி, சுகாதாரம், விவசாயம், நீர்ப்பாசனம், கடற்றொழில், எல்லாவிதமான கைத்தொழில், புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், தொழில்வாய்ப்பு உட்படச் சகல சமூகப் பொருளாதார விடயங்களையும் தாமே தமது பிரதிநிதிகள் ஊடாகக் கையாளக் கூடிய வகையில் – சமஷ்டி என்ற சொல்லைப் பயன்படுத்தாமல் அதிகூடிய அதிகாரங்கள் பகிரப்படுமாக இருந்தால் அது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சாதகமாகப் பரிசீலிக்கும்.” – இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் […]
ஐ.நா. அறிக்கையாளர் எமர்சன் அடிப்படை நாகரிகம் இல்லாதவர்! – சாடுகின்றார் விஜயதாஸ
இலங்கைக்குப் பயணம் மேற்கொண்ட ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன் எந்வொரு இராஜதந்திர தகைமையையோ, அடிப்படை நாகரிகத்தைக் கொண்டவரோ அல்லர் என்று நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ கூறியுள்ளார். ஐந்து நாள் பயணமாக இலங்கை வந்திருந்த மனித உரிமைகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புத் தொடர்பான ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன், கடந்த வெள்ளிக்கிழமை தனது பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பியிருந்தார். இவர் இலங்கையில் விஜயத்தை மேற்கொண்டிருந்தபோது நீதி அமைச்சர் […]
ஐ.நா. சிறப்பு அறிக்கையாளருடன் விஜயதாஸ கடும் வாக்குவாதம்!
இலங்கையில் மனித உரிமைகள் பாதுகாப்பு மற்றும் ஊக்குவிப்பு விடயத்தில் ஐ.நாவின் தலையீடுகள் தொடர்பாக, கொழும்பு வந்திருந்த ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளருக்கும் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவுக்கும் இடையில் காரசாரமான வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. ஆங்கில ஊடகம் ஒன்று இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது. ஐந்து நாட்கள் பயணமாக மனித உரிமைகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு குறித்த ஐ.நா. சிறப்பு அறிக்கையாளரான பென் எமர்சன், ஐந்து நாட்கள் விஜயமாக கடந்த 10ஆம் திகதி இலங்கைக்கு […]
மைத்திரி, ரணிலுடன் அடுத்த வாரம் கேப்பாப்பிலவு மக்கள் நேரில் பேச்சு!
கேப்பாப்பிலவில் மண்மீட்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை அடுத்த வாரம் நேரில் சந்தித்து நீதி கோரப்போகின்றார்கள். இந்தச் சந்திப்புக்கான முயற்சிகளைத் தான் மேற்கொண்டுள்ளார் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். கேப்பாப்பிலவு மக்கள் 136 நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். 138 குடும்பங்களுக்கு சொந்தமான 482 ஏக்கர் […]
புதிய அரசமைப்புக்கு முன்னரே வருகின்றது தேர்தல் சட்டத் திருத்தம்! – உள்ளூராட்சித் தேர்தலை நடத்தும் திட்டத்துடன் தேசிய அரசு முயற்சி
புதிய அரசமைப்புக்கு முன்னதாகவே தேர்தல் திருத்தச் சட்டவரைபு நாடாளுமன்றத்துக்குக் கொண்டுவரப்படும் என்று கொழும்பு அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளன. உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தும் நோக்குடனேயே இந்தச் சட்டவரைபைக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அறியமுடிகின்றது. புதிய அரசமைப்பில் தொகுதிவாரிப் பிரதிநித்துவம் 60 சதவீதமும், விகிதாசாரப் பிரதிநிதித்துவம் 40 சதவீதமுமாகக் கலப்பு முறையில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்த இணக்கம் காணப்பட்டுள்ளது. மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை எந்த […]





