இஸ்ரேல் நாட்டின் தலைநகரான ஜெருசலேமில் பாலஸ்தீனியர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் போலீஸ் அதிகாரிகள் பலியானதால் மூடப்பட்ட அல் அக்ஸா மசூதி இன்று மீண்டும் திறக்கப்பட்டதால் அங்குள்ள இஸ்லாமியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளுக்கு இடையே அரை நூற்றாண்டு காலத்துக்கும் அதிகமாக தீராப்பகை நீடித்து வருகிறது. இஸ்ரேல் நாட்டை மீண்டும் தங்கள் வசப்படுத்த பாலஸ்தீனமும், பாலஸ்தீனத்தை முழுமையாக ஆக்கிரமித்து கொள்ள இஸ்ரேலும் முயன்று வருகின்றன. இதேபோல், இஸ்ரேல் நாட்டு […]
Other News
வெனிசுலாவில் அதிபருக்கு எதிரான வாக்கெடுப்பில் பெண் சுட்டுக்கொலை
வெனிசுலாவில் அதிபருக்கு எதிரான வாக்கெடுப்பின் போது மர்ம நபர்கள் தீடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் பெண் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் அதிபர் நிகோலஸ் மதுரோவுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர் பதவி விலக வலியுறுத்துகின்றனர். இப்போராட்டம் கடந்த ஏப்ரல் முதல் நடைபெற்று வருகிறது. அதில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் மற்றும் போலீஸ்- ராணுவம் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். […]
ஆப்கானிஸ்தான் எல்லையில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் மீது பாக். ராணுவம் தாக்குதல் – குண்டுவீச்சு
ஆப்கானிஸ்தான் எல்லையில் பதுங்கி இருந்த ஐ.எஸ்.தீவிரவாதிகள் மீது பாகிஸ்தான் ராணுவம் குண்டுவீசி தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் தற்போது ஐ.எஸ்.தீவிரவாதிகளின் கை ஓங்கி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் பாகிஸ்தானில் பல தாக்குதல்களை நடத்தி உள்ளனர். அவர்கள் ஆப்கானிஸ்தானில் வலுவாக உள்ளனர். எல்லை தாண்டி வந்து பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தி விட்டு மீண்டும் ஆப்கானிஸ்தானுக்குள் சென்று விடுகின்றனர். எனவே, ஆப்கானிஸ்தான் எல்லையில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் […]
எமது மண்ணில் இருந்து எம்மைத் துரத்தலாம் என நினைக்காதீர்கள்: ரவிகரன்
எமது மண்ணில் இருந்து எம்மைத் துரத்தலாம் என நினைத்து, இளைஞர்களின் மனநிலையினை மீண்டும் வேறு திசைகளுக்கு மாற்றாதீர்கள் என வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார். முள்ளியவளையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “எமது இளைஞர்கள் இன்று ஆக்கபூர்வமான வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். எமது இளைஞர்களின் பலத்தினை தெரிந்தவர்கள் இன்று அரசாங்கத்தில் இனவாதிகளாக இருக்கின்றார்கள். முல்லைத்தீவில் சாதித்த எமது […]
ஜனாதிபதி- பிரதமரை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவு!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது. 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் காலத்தில், போலி ஆவணங்களை வெளியிட்ட குற்றச்சாட்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைகள் இன்று இடம்பெற்றன. இந்த வழக்கில் முதலாம் மற்றும் இரண்டாவது சாட்சியாளர்களாக ஜனாதிபதியும், பிரதமரும் பெயரிடப்பட்டுள்ள நிலையில், அவர்களை நீதிமன்றத்தில் […]
துரோகிகள் பட்டியலில் இருந்த குமார் பொன்னம்பலத்தை நாமே காப்பாற்றினோம்: கோவிந்தன் கருணாகரம்
தமிழீழ விடுதலைப் புலிகளின் துரோகிகள் பட்டியலில் இருந்த குமார் பொன்னம்பலத்தை நாமே காப்பாற்றினோம் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) 28 வது வீர மக்கள் தினம் மட்டக்களப்பு பல நோக்கு கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் நேற்றையதினம் (சனிக்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே இதனைத் தெரிவித்தார். இது குறித்த அவர் மேலும் தெரிவிக்கையில், “புலிகளின் துரோகிகள் பட்டியலில் […]
நீதித்துறையின் கரங்களை கட்டிவைத்துள்ள சட்டமா அதிபர் – ஐ.நா நிபுணர் குற்றச்சாட்டு
சிறிலங்கா நீதித்துறையின் கரங்களை சட்டமா அதிபர் கட்டி வைத்திருப்பதாக சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த மனித உரிமைகள் மற்றும் தீவிரவாத எதர்ப்புக்கான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன் குற்றம்சாட்டியுள்ளார். தனது சிறிலங்கா பயணத்தின் முடிவில் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் கூறியுள்ளார். சிறிலங்கா நீதித்துறையின் கரங்கள் சட்டமா அதிபர் மூலமாக கட்டி வைக்கப்பட்டுள்ளது. இது ஜனநாயக நீதித்துறையின் அடிப்படைத் தத்துவம் மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கு முற்றிலும் முரணானது. எந்தவொரு […]
தெருவில் காத்திருந்த சிறுமிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மைத்திரி
தெருவில் காத்திருந்த சிறுமிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ள சம்மாவாம் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கண்டி ஜனாதிபதி மாளிகையில் நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது. நிகழ்விற்கு நேற்று சென்று கொண்டிருக்கும் போது அஸ்கிரிய மைதானத்தில் இருந்து ஜனாதிபதி மாளிகைக்கு செல்லும் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் வசிக்கும் சிறுமி ஒருவர் வீதி அருகே வந்து ஜனாதிபதி செல்லும் வாகனங்களை நோக்கி பார்வையிட்டுள்ளார். ஜனாதிபதி தனது […]
டெனிஸ்வரனிடமுள்ள அமைச்சுப் பதவியை விந்தனுக்கு வழங்க டெலோவின் அரசியல் உயர்பீடம் முடிவு
வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணத்தை வட மாகாண மீன்பிடி போக்குவரத்து வர்த்தக வாணிப கிராம அபிவிருத்தி மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சராக நியமிக்க டெலோவின் உயர் பீடம் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்குப் பரிந்துரைக்கவுள்ளது. முதலமைச்சருக்கு எதிராகச் செயற்பட்டதன் மூலமும் நீதிவிசாரணைக்குழு முன் தோன்ற மறுப்பதன் மூலமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் டெலோ சார்பில் வடக்கு மாகாண அமைச்சராகவுள்ள பா.டெனிஸ்வரன் கட்சியின் முடிவுகளை மீறியிருந்தார். இந் நிலையில், கடந்த […]
கூட்டு அரசாங்கத்துக்குள் பிளவு – ஒட்டவைப்பதற்கு மைத்திரி தீவிர முயற்சி
பங்களாதேஷ் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பிய சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, கூட்டு அரசாங்கத்தில் பிளவுகளை ஏற்படுத்தக் கூடிய- சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர் மத்தியில் ஏற்பட்டுள்ள புதிய பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதில் முக்கிய கவனம் செலுத்தி வருகிறார். பங்களாதேசுக்குப் புறப்படுவதற்கு முன்னர், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த அமைச்சர்கள் பலர், இந்த ஆண்டில் நடத்தப்படும் உள்ளூராட்சித் தேர்தலுக்கு முன்னர், சிறிலங்கா சுதந்திரக் கட்சி […]





