தலைநகரில் 28 ஆவது வீர மக்கள் தினம் அனுஷ்டிப்பு!

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) 28 ஆவது வீர மக்கள் தினம் கொழும்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது.

கொழும்பில் அமைந்துள்ள தலைமைக் காரியாலயத்தில், அதன் நிர்வாகச் செயலாளர் எம். பத்மநாதன் தலைமையில் இந்த நிகழ்வு இடம் பெற்றது.

ஆரம்ப நிகழ்வாக நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு கழகத்தின் செயலதிபர் அமரர் கே. உமாமகேஸ்வரனின் உருவப்படத்திற்கு மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு மௌன அஞ்சலியும் மலரஞ்சலியும் செலுத்தப்பட்டன.

இந்நிகழ்வில் கட்சி உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.

About தமிழ்மாறன்

View all posts by தமிழ்மாறன் →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *