Other News

முல்லைத்தீவு நீதிமன்றத்தின் தடை உத்தரவை மீளாய்வு செய்ய உத்தரவு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டு முல்லைத்தீவு நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட உத்தரவை மீளாய்வு செய்யுமாறு வவுனியா மேல் நீதிமன்றம் பணித்துள்ளது. அதன்படி வழக்கு கோவையை மீளாய்விற்கு வவுனியா மேல் நீதிமன்றிற்கு அனுப்புமாறு கோரப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் வண.பிதா. எழில்ராஜன் அவர்களால் முள்ளிவாய்க்கால் கிழக்கு சின்னப்பர் தேவாலயத்திற்கு அருகாமையில் நடத்தப்படவிருந்த நினைவு தின நிகழ்வை தடை செய்து, மத நிகழ்வுகளை மட்டும் நடத்துவதற்கு அனுமதித்து முல்லைத்தீவு நீதிமன்றம் கட்டளை […]

ஈழத்தமிழர்களின் நினைவிடத்தை நிஜமாக்கிய ஓவியர் வீரசந்தானத்திற்கு அஞ்சலி

தஞ்சை ‘முள்ளிவாய்க்கால் முற்றம்’ என்னும் ஈழத்தமிழர்களின் நினைவிடத்தை அமைப்பதில் பெரும் பங்காற்றிய மறைந்த, ஓவியர் வீரசந்தானத்திற்கு அரசியல் தலைவர்களும், திரைத்துறையினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். உலகத் தமிழர்கள் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்த தமிழ் பற்றாளரும் சிறந்த ஓவியருமான வீரசந்தானம் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டுவந்த நிலையில் சென்னை தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பலனில்லாமல் நேற்றுமுன்தினம் (புதன்கிழமை) உயிரிழந்தார். தமிழ்நாட்டுக்காகவும் தமிழீழத்துக்காகவும் சமரசமின்றி ஓயாது போராடிய இவர், ஆயுத விடுதலைப் போராட்டத்தை ஆதரிப்பதிலும் மிகவும் […]

கர்ப்பிணிகளுக்கு சுகாதாரமற்ற போஷாக்கு உணவு வழங்கப்படுவதாக முறைப்பாடு

இறக்காமம் பிரதேச செயலகத்தினால் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்பட்டுவரும் போஷாக்கு உணவுப் பொருட்கள் தரமற்றதாகவும், சுகாதாரத்துக்கு கேடு விளைவிக்கக் கூடியதாகவும் உள்ளதாகத் தெரிவிக்கப்படும் முறைப்பாடு தொடர்பில், உரிய நடவடிக்கை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நேற்று வியாழக்கிழமை இறக்காமம் பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டத்தின் போதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்போது, இறக்காமம் பிரதேச செயலகத்தினால் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்பட்டுவரும் போஷாக்கு பொதி தொடர்பான முறைகேடுகள் தொடர்பில், இணைத்தலைவரான பொறியியலாளர் எஸ்.எல் மன்சூர் சபையில் முன்வைத்தார். அண்மைக்காலமாக வழங்கப்பட்டுவரும் […]

இலங்கை பங்களாதேஷ் இடையே 12 ஒப்பந்தங்கள் கைச்சாத்து

இலங்கை மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கிடையே 12 புதிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. பங்களாதேஷிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பங்களாதேஷ் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பின்போதே இவ் உடன்பாடுகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. முதலாவது ஒப்பந்தம் இரு நாடுகளின் தரக்கட்டுப்பாட்டு நிறுவனங்களுக்கிடையே தரக் கட்டுப்பாடு தொடர்பாக கைச்சாத்திடப்பட்டது. அதில், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் அந்நாட்டின் கைத்தொழில்துறை அமைச்சர் ஆகியோர் கைச்சாத்திட்டனர். இதேவேளை, பொருளாதார ஒத்துழைப்புக்களை மேம்படுத்தல், விவசாய ஒத்துழைப்புக்கள், […]

பருத்தித்துறையில் மீன்பிடித்துறைமுகம் அமைப்பதற்கு எதிர்ப்பு!

பருத்தித்துறை, கொட்டடி பகுதியில் மேலதிக துறைமுகம் ஒன்றினை அமைப்பதற்கு மீனவ குடும்பங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அத்துடன், தமது தொழில் பாதிக்கப்படுமெனவும் மாற்று இடத்தில் துறைமுகத்தினை அமைப்பதற்கான இடத்தினை தெரிவு செய்யுமாறும் வலியுறுத்தியுள்ளனர். துறைமுக அபிவிருத்தி தொடர்பாக கடற்றொழில் அமைச்சு மற்றும் துறைமுக அபிவிருத்தி திணைக்களம் உட்பட ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் இணைந்து பருத்தித்துறை, கொட்டடி சனசமூக நிலையத்தில் மீனவ சங்கங்கள், மீனவ […]

பப்புவா நியூ கினியாவில் பயங்கர நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை இல்லை

பப்புவா நியூ கினியாவின் ரபாயுல் நகரத்தில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நில நடுக்கத்தால் உயிர்ச்சேதமோ, பெரிய அளவில் பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை தென் பசுபிக் நாடுகளில் ஒன்றான பப்புவா நியூ கினியாவின் ரபாயுல் நகரத்தில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.7 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. நில நடுக்கத்தால் உயிர்ச்சேதமோ, பெரிய அளவில் பொருட்சேதமோ ஏற்பட்டதாக […]

பாண்டா வடிவத்தில் ராட்சத சோலார் பண்ணை அமைக்கும் சீனா

சீனாவின் மிகப்பெரிய சோலார் நிறுவனம், வேடிக்கையாக ராட்சத பாண்டா வடிவத்தில் 250 ஏக்கர் பரப்பளவில் சூரிய மின்சக்தி பண்ணையை அமைத்துள்ளது. புவி வெப்பமாயதலை தடுக்க அனைத்து நாடுகளும் அனல்மின் நிலையும், அணுமின் நிலையத்தில் இருந்து சூரிய சக்தியின் மூலம் மின்சாரம் தயாரிக்கும் முறையாக சோலார் மின்திட்டத்திற்கு மாறி வருகின்றன. அனல்மின் நிலையத்தில் நிலக்கரி பயன்படுத்துவதால் அதில் இதிருந்து வெளிப்படும் கார்பன் வாயு புவியை வெப்பமடையச் செய்கிறது. அதேபோல்தான் அணுமின் நிலையத்தில் […]

ஏழு இந்திய மீனவர்கள் கைது!

கச்சதீவு பகுதியை அண்மித்த நெடுந்தீவுக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட ஏழு இந்திய மீனவர்கள் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ஏழு இந்திய மீனவர்களுடன் இரண்டு படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன்துறை துறைமுகப் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு கடற்படையினரால் பதிவுகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் யாழ். கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுள்ளனர். மீனவர்களை ஊர்காவற்துறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனையிறவில் சிதறிக்கிடக்கும் மோட்டார் செல்கள்

கடும் வறட்சி காரணமாக கிளிநொச்சி ஆனையிறவு கடல் நீரேரி வற்றியுள்ள நிலையில், குறித்த பகுதியில் பெருமளவிலான மோட்டார் செல்கள் பரவலாக காணப்படுவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். குறித்த பகுதியில் ஆங்காங்கே வெடிபொருட்கள் காணப்படுகின்றமை தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவித்தும் அவை அகற்றப்படவில்லையென மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். தற்போது குறித்த பகுதி நீரின்றி காணப்படும் நிலையில் பெருமளவில் மோட்டார் செல்கள் மண்ணில் புதையுண்ட நிலையிலும், துருப்பிடித்தும் காணப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார். இந்நிலையில், […]

தேசிய தமிழ் மொழி தின விழா யாழ்ப்பாணத்தில்!

கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் ஒவ்வொரு வருடமும் நடாத்தப்படும் தேசிய தமிழ் மொழி தினம் இந்த வருடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மைதானத்தில் நடாத்துவதற்கான ஏற்பாடுகளை கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் மேற்கொண்டுள்ளார். எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மைதானத்தில் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. இந்த நிகழ்வின் போது, தேசிய மட்டத்தில் நடைபெற்ற தமிழ் மொழி தின போட்டிகளில் […]