தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் அதன் தலைவர் இரா.சம்பந்தனுடனும் நெருங்கிய அரசியல் தொடர்பாடல்களை மேற்கொள்வதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விரும்புகிறார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன. அதன் ஒரு வெளிப்பாடாக சம்பந்தனின் கருத்தை வரவேற்கும் டுவிட்டர் செய்தி ஒன்று மஹிந்த ராஜபக்ஷவின் மகனான நாமல் எம்.பியினால் தமிழில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் கொழும்பில் ஒரு நூல் வெளியீட்டு விழாவில் பங்குபற்றிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் […]
Other News
உள்ளூராட்சி தேர்தல் தாமதமானது தனது தவறல்ல என்கிறார் முஸ்தபா! – நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கும் அஞ்சவில்லையாம்
உள்ளூராட்சி சபைத் தேர்தல் தாமதமாவதற்கு தானே காரணமென ஒருசில தரப்புகளிலிருந்து வெளிவரும் குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், அத்தேர்தலைத் தாமதிக்கவேண்டுமென்ற நோக்கமோ நிர்ப்பந்தமோ தனக்குக் கிடையாது எனவும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அவர் மேலும் கூறியுள்ளதாவது:- “தேர்தல் தாமதமாவதற்குத் நானே காரணம் என்பதால் எனக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றைக் கொண்டுவர ஒருசிலர் முயற்சிசெய்து வருகின்றபோதிலும் […]
அவசரம் வேண்டாம்! விஜயதாஸ தொடர்பில் நாளை முடிவெடுப்போம்!! – ஐ.தே.க. உறுப்பினர்களுக்கு ரணில் அறிவுரை
அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்திருக்கும் நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ பற்றி நாளை 17ஆம் திகதி வியாழக்கிழமை கலந்துபேசி முடிவொன்றை எடுப்போம் எனவும், அதுவரை அவசரப்படாமல் இருங்கள் எனவும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கு அக்கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். நாளை வியாழக்கிழமை நடைபெறவுள்ள கட்சியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் இவ்விடயம் பற்றி கலந்துபேசி முடிவொன்றை எடுக்கலாம் எனவும், […]
148 மில்லியன் ரூபா கிடைத்தால் இராணுவக்கட்டுப்பாட்டில் உள்ள காணி விடுவிக்கப்படும்
முல்லைத்தீவு வில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 111 ஏக்கர் காணி விரையில் விடுவிக்கப்பட இருப்பதாக இராணுவப்பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரத்ன தெரிவித்தார். முல்லைத்தீவிலுள்ள இராணுவத்தின் தலைமையகம் உள்ளிட்ட பகுதிகளை வேறு இடத்தில் அமைப்பதற்கு புனர்வாழ்வு ,மீள்குடியேற்றம், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் ரி.என்.சுவாமிநாதன் வழங்குவதாக கூறிய 148 மில்லியன் ரூபா கிடைத்தபின்னர் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார். நேற்றைய தினம் கிளிநொச்சியில் 38 […]
பிரச்சினைகள் தீர இந்தியா-சீனா நேரடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: அமெரிக்கா வலியுறுத்தல்
‘பிரச்சினைகள் தீர இந்தியாவும், சீனாவும் நேரடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்’ என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. இந்தியா-சீனா இடையே எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. சிக்கிம் எல்லையில் டோக்லாம் பகுதியில் சீனராணுவம் ரோடுபோட முயன்றது. அதை இந்தியா தடுத்து நிறுத்தியது. அதை தொடர்ந்து இருநாடுகளும் அங்கு தங்களது ராணுவத்தை நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் அங்கு கடந்த 50 நாட்களாக பதட்டம் நிலவுகிறது. இந்த நிலையில் காஷ்மீரில் லடாக் பகுதியில் புகழ் பெற்ற […]
10000 முட்டைகளால் உருவான ராட்சத ஆம்லெட் – பெல்ஜியம் விழாவில் மக்கள் கொண்டாட்டம்
பெல்ஜியம் ஆண்டு விழாவில் மக்கள் 10000 முட்டைகளை கொண்டு ராட்சத ஆம்லேட் செய்து பகிர்ந்து உண்டது அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பெல்ஜியம் நாட்டில் ஆண்டுதோறும் வசந்த காலத்தில் ஆண்டு விழா கொண்டாடப்படும். இந்த விழாவில் மக்கள் வித்தியாசமாக ஏதாவது செய்து கொண்டாடுவர். இந்த ஆண்டு பெல்ஜியத்தில் உள்ள மால்மேடி கிராமத்தில் உள்ள மக்கள் வித்தியாசமான முயற்சியில் ஈடுபட்டனர். அவர்கள் ராட்சத அளவில் ஆம்லெட் செய்து அதனை அனைவருக்கும் பகிர்ந்து வழங்க […]
பொறுமை இழந்துவிட்டனர் தமிழர்! தலையிட வேண்டும் சர்வதேச சமூகம்!! – சம்பந்தன் அவசர கடிதம்
“தமிழ் மக்களின் காணிகளில் இராணுவம் தொடர்ந்தும் குடியிருப்பது நல்லிணக்கத்துக்கு சாதகமான சமிக்ஞை அல்ல. மக்கள் பொறுமை இழந்துவிட்டார்கள். சர்வதேச சமூகம் இனியும் பார்த்துக்கொண்டிராமல் தலையீடு செய்யவேண்டும்.” – இவ்வாறு பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஐ.நா. பொதுச் செயலர், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர், இலங்கையிலுள்ள வெளிநாடுகளின் தூதரகங்களுக்கு அவசரமாக அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டம், கேப்பாப்பிலவில் இராணுவத்தின் ஆக்கிரமிப்பிலுள்ள தமிழ் மக்களின் காணிகளை […]
மஹிந்த அணியின் 5 உறுப்பினர்களுக்கு எதிராக சு.க. ஒழுக்காற்று நடவடிக்கை! – மத்திய குழு ஒப்புதல்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அங்கம் வகிக்கும் பொது எதிரணியான மஹிந்த அணியின் 5 உறுப்பினர்கள் சு.கவின் கொள்கைகளுக்கு முரணாகத் தொடர்ந்து செயற்பட்டு வருவதால் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடூவடிக்கை எடுக்க கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளது. தேசிய அரசு அமையப்பெற்றதையடுத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நாடாளுமன்றத்தில் பொது எதிரணியாகச் செயற்பட்டுவரும் 52 உறுப்பினர்களும் இன்னமும் சு.கவின் உறுப்புரிமையின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர்களாக அங்கம் வகிக்கின்றனர். அண்மைக்காலமாக இதில் […]
கிழக்கு மாகாணசபையை கலைத்து தேர்தலை நடத்த வேண்டும்: முஹம்மட் நஸீர்
கிழக்கு மாகாணசபையை அதன் காலம் முடிந்ததும் கலைத்து தேர்தலை நடத்த வேண்டும் என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் தெரிவித்தார். தோப்பூர் பிரதேசத்தில் நேற்றையதினம் (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஆயுர்வேத மத்திய மருந்தகத்தின் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “கிழக்கு மாகாணத்திற்கு அதிகாரம் கிடைக்காமல் கிழக்கு மாகாணசபையை நீடிக்கும் முடிவினை நல்லாட்சி அரசு எடுத்தமை ஏற்கக்கூடிய […]
சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு எதிராக எவரும் கைநீட்ட முடியாது : சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை
“”சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு எதிராக கைநீட்டுவது தவறான செயற்பாடு என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது”. – இவ்வாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரும், ஜனாதிபதியின் சட்டத்தரணியுமான ரோஹன தி சில்வா தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, வெளிவிவகார அமைச்சராக இருந்த ரவி கருணாநாயக்கவை பிணைமுறி விவகாரத்தில் விசாரணைக்கு உட்படுத்தியமை குறித்து சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு கைநீட்டுவதும், சட்டமா அதிபர் திணைக்களத்தில் பணிப்புரியும் அதிகாரிகளை இழிவுப்படுத்தும் வகையில் […]





