Other News

விஜயதாசவுக்கு எதிராக 70 பேர் கையொப்பம்?

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுக்கு எதிராகக் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையிலாப் பிரேரணையில் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாளை நடைபெறவுள்ள கட்சியின் உயர்மட்டக் கூட்டத்தில் விஜேதாச ராஜபக்ஷ தொடர்பான நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும், குறித்த பிரேரணையில் 70 உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் நாளை நடைபெறவுள்ள உயர்மட்டக் கூட்டமானது மிகவும் முக்கியமானதாக இருக்கும் எனவும், நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்ய வலியுறுத்தப்படுவார் எனவும் […]

வடக்கில் வன்முறைகளுக்கு மொழிப்பிரச்சினையே காரணம்: விக்னேஸ்வரன்

வடக்கில் பாதுகாப்புத் தரப்பினருக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களுக்கு பிரதான காரணம் மொழிப்பிரச்சினையே என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண முதலமைச்சருக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் வடக்கு மாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. அங்கு உரையாற்றும்போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “அண்மைக் காலங்களில் பாதுகாப்புத் தரப்பினருக்கு எதிராக யாழில் இடம்பெறும் வன்முறைச் சம்பவங்கள் மொழிப்பிரச்சினை காரணமாகவே இடம்பெற்றுள்ளன. […]

மைத்திரிபால சிறிசேன

’20’ குறித்து ஜனாதிபதி தலைமையில் கொழும்பில் இன்று விசேட கூட்டம்! – பிரதமர், கட்சித் தலைவர்கள் பங்கேற்பு

20ஆவது அரசமைப்பு திருத்தச் சட்டம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பில் இன்று விசேட கூட்டமொன்று நடைபெறவுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட ஐக்கிய தேசிய முன்னணி அரசிலுள்ள பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் இதில் பங்கேற்கவுள்ளனர். அனைத்து மாகாண சபைகளுக்கும் ஒரே நாளில் தேர்தலை நடத்தும் வகையில், மாகாண சபைகளைக் கலைக்கும் அதிகாரத்தை நாடாளுமன்றத்துக்கும் வழங்கும் 20ஆவது அரசமைப்பு திருத்தச் சட்டவரைபை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவையில் […]

’20’ ஆவது திருத்தம் தொடர்பில் ஆற அமர்ந்து ஆராய்ந்தே கூட்டமைப்பு முடிவெடுக்கும்! – சம்பந்தன் தெரிவிப்பு

“20ஆவது அரசமைப்பு திருத்தச் சட்டத்தை இன்னும் முழுமையாகப் படித்துப் பார்க்கவில்லை. இந்தச் சட்டதிருத்தம் தொடர்பில் எமது கட்சி கூடி ஆராய்ந்தே ஆதரிப்பதா? இல்லையா? என்ற முடிவை எடுக்கும்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். 9 மாகாண சபைகளுக்குமான தேர்தலை ஒரே நாளில் நடத்தும் யோசனையை உள்ளடக்கிய 20ஆவது அரசமைப்பு திருத்தச் சட்டவரைபு வர்த்தமானியில் அண்மையில் வெளியிடப்பட்டது. இந்தச் சட்டவரைபுக்கு பொது அமைப்புகள், […]

ரோஹித ராஜபக்ஷவும் விசாரணைப் பொறிக்குள்! – ஆதரவளிக்கக் களமிறங்கினார் கோட்டா

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூன்றாவது மகனான ரோஹித ராஜபக்ஷவிடம் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு (எவ்.சி.ஐ.டி.) நேற்று 6 மணி நேரம் விசாரணை நடத்தியது. சீனாவின் உதவியுடன் ஏவப்பட்ட சுப்ரீம் செட்  1 செய்மதி விவகாரத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி பற்றி வாக்குமூலம் பெறுவதற்காகவே அவர் அழைக்கப்பட்டிருந்தார். அவருக்கு ஆதரவு வழங்கும் வகையில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும் எவ்.சி.ஐ.டி வளாகத்துக்குச் சென்றிருந்தார். முன்னாள் எம்.பிக்களான […]

நெடுவாசல் மக்கள் சுதந்திர தினத்தில் உண்ணாவிரதம் ?

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நெடுவாசல் பகுதி மக்கள் 126வது நாளாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் புதுக்கோட்டை, தஞ்சை உள்ளிட்ட டெல்டா பகுதியில் எரிவாயு எடுக்க ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள நெடுவாசல், நல்லாண்டார்கொல்லை, வாணக்கன்காடு, கோட்டைக்காடு உள்ளிட்ட கிராமங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், சுதந்திர தினமான […]

நல்லாட்சி அரசுக்கு அழுத்தம் கொடுத்து கொழும்பில் இன்று மாபெரும் போராட்டம்!

“நல்லாட்சி அரசு அமையப்பெற்று இரண்டு வருடங்கள் கடந்துள்ள நிலையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. அதனை நிறைவேற்ற உடனடியாக நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.” – இவ்வாறு அரசை வலியுறுத்தி கொழும்பு விகாரமாதேவி பூங்காவுக்கு முன்னால் இன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 2015ஆம் ஆண்டு ஆட்சிமாற்றத்துக்காக பொது வேட்பாளராக நிறுத்தப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கைகோத்து நாடு தழுவிய ரீதியில் சோபித தேரர் தலைமையிலான சிவில் அமைப்புகள் பிரசாரத்தை மேற்கொண்டன. அந்தச் சிவில் […]

கூட்டமைப்பை நேரில் சந்திக்கப் பின்னடிக்கின்றார் மைத்திரி! – சந்தர்ப்பம் கிடைத்தால் பேசுவோம் என்கிறார் சுமந்திரன்

கூட்டமைப்பை நேரில் சந்திக்கப் பின்னடிக்கின்றார் மைத்திரி! – சந்தர்ப்பம் கிடைத்தால் பேசுவோம் என்கிறார் சுமந்திரன் “புதிய அரசமைப்பு முயற்சி தாமதமடைந்துவருவதால் இந்த விடயத்தில் உடனடியாகத் தலையிட்டு புதிய அரசமைப்பு உருவாக்கத்தை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தவுள்ளது. இதற்காக அவரைச் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கித்தருமாறு கட்சி கேட்டுள்ளது. எனினும், இதுவரை சந்திப்புக்கு நேரம் வழங்கப்படவில்லை. ஜனாதிபதியைச் சந்திப்பதற்கு நாம் ஏற்கனவே நேரம் ஒதுக்கித் தருமாறு கேட்டிருந்தோம். […]

அரசமைப்புச் சபையில் இருப்பதா? விலகுவதா? – மஹிந்த அணி கலந்தாலோசித்து வருகின்றது என்கிறார் தினேஷ்

“அரசமைப்புச் சபையில் தொடர்ந்து இருப்பதா அல்லது விலகுவதா என்று முடிவெடுப்பதற்காக மஹிந்த தரப்பு கலந்தாலோசித்து வருகின்றது” என்று நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், “மஹிந்த அணியிலுள்ள விமல் வீரவன்ஸவின் கட்சி அரசமைப்புச் சபையிலிருந்து விலகியதால் மஹிந்த அணியும் விலகுமா என்ற கேள்விகள் மக்களால் எழுப்பப்படுகின்றன. இதுவரையில் நாம் அரசமைப்புச் சபையிலும் அரசமைப்பை உருவாக்கும் வழிநடத்தல் குழுவிலும் அங்கம் வகிக்கின்றோம். அரசமைப்புச் சபையில் […]

மைத்திரி – டிரம்ப் அடுத்த மாதம் நேரில் பேச்சு!

  ஐக்கிய நாடுகள் சபையின் 72ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த மாதம் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்தப் பயணத்தின்போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பையும் மைத்திரிபால சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார். நியூயோர்க் நகரில் அமைந்துள்ள ஐ.நாவின் தலைமையகத்தில் அடுத்த மாதம் 12ஆம் திகதிமுதல் 25ஆம் திகதிவரை 72ஆவது பொதுச் சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதன் நிமிர்த்தம் அடுத்த மாதம் 19ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால […]