Other News

கொலைகள் ஊடாக ஆட்சியைத் தொடர அரசு திட்டம்! – இப்படிக் குற்றஞ்சாட்டுகின்றது மஹிந்த தரப்பு

“கொலைகள் செய்தாவது ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளவேண்டும் என்கிற நிலைப்பாட்டுக்கு இந்த அரசு வந்துள்ளது” என்று மஹிந்த அணி எம்.பி. ரோஹித அபயகுணவர்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:- “இந்த அரசு இரண்டு வருடங்களை வீணாகக் கழித்துவிட்டது. மீதி வருடங்களையாவது நல்லமுறையில் கழிக்கும் என்று நாம் எதிர்பார்த்தோம். அமைச்சரவை மாற்றம் நல்லதொரு மாற்றத்தைக் கொண்டுவரும்.அந்த மாற்றத்தோடு நல்ல நிலைமை ஏற்படும் என்று நாம் எதிர்பார்த்தோம். ஆனால், அண்மையில் நடைபெற்ற அமைச்சரவை […]

சீனாவின் அடாவடி வர்த்தகம் தொடர்பாக விசாரணை நடத்த டொனால்ட் டிரம்ப் அதிரடி உத்தரவு

அமெரிக்காவின் அறிவுசார் சொத்துரிமை சட்டத்தை மீறியவகையில் சீனா நடத்திவரும் ’டூப்ளிகேட்’ மற்றும் ’கோல்மால்’ வர்த்தக நடைமுறைகள் தொடர்பாக விசாரணை நடத்துமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளின் பலத்தை வைத்து அமெரிக்காவை மிரட்டிவரும் வட கொரியாவை கண்டிக்க தவறிய சீனா, வட கொரியாவின் போக்குக்கு ஆதரவு தெரிவித்து வருவது அமெரிக்க அரசுக்கு அதிருப்தியையும் எரிச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. வடகொரியாவுக்கு ஆதரவாக செயல்பட்டுவரும் சீனாவை தனது கைப்பிடிக்குள் […]

வெள்ளத்தால் சீர்குலைந்த நேபாளத்துக்கு 10 லட்சம் டாலர் நிதியுதவி செய்வதாக சீனா அறிவிப்பு

மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் சீர்குலைந்துள்ள நேபாள நாட்டுக்கு 10 லட்சம் அமெரிக்க டாலர்கள் நிதியுதவி செய்ய சீனா முன்வந்துள்ளது. நேபாள நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து தொடர்ந்து மழை பெய்து வருகிறது, மழையினால் 27 மாவட்டங்கள் வெள்ளக்காடாக காணப்படுகின்றன. ரப்தி மற்றும் புதிரப்தி ஆறுகளில் வெள்ளநீர் கரை புரண்டு ஓடுகிறது. கரை கடந்து வெளியேறிய வெள்ளநீர் அரித்துச் சென்றதால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், தாழ்வான பகுதிகளில் […]

மூன்று மணித்தியாலயங்கள் சிராந்தியிடம் துருவி துருவி விசாரணை

பிரபல ரக்பி வீரர் வஸீம் தாஜூதீனின் கொலை தொடர்பான வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் சிராந்தி ராஜபக்ஷ குற்றப்புலனாய்வு பிரிவில் இன்று முன்னிலையாகி இருந்தார். இன்று காலை 11 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை விசாரணை நடைபெற்றுள்ளது. சுமார் மூன்று மணித்தியாலயம் நடைபெற்ற இந்த விசாரணையின் போது வஸீம் தாஜூதீனின் கொலை தொடர்பான பல்வேறு கேள்விகள் குற்றப்புலனாய்வு பிரிவில் தொடுக்கப்பட்டதாகவும் அதற்கு அவர் பதில் […]

இந்தியாவின் 71ஆவது சுதந்திர தின நிகழ்வு

இந்தியாவின் 71ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இலங்கைக்கான இந்திய தூதுவர் தரஞ்ஜித் சிங் சந்து தலைமையில் நேற்று கொழும்பில் அமைந்துள்ள இந்திய தூதுவரின் இல்லத்தில் நடைபெற்றது.

செஞ்சோலைப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிப்பு

செஞ்சோலைப் படுகொலையின் 11 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று தமிழர் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டன. தமிழீழ விடுதலைப்புலிகளால் முல்லைத்தீவு – வள்ளிபுனத்தில் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்ட செஞ்சோலையில், கடந்த 2006 ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதியில் இருந்து 20 ஆம் திகதி வரை ஜி.சீ.ஈ. உயர்தர மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி நடைபெற்றது. இதில் முல்லைத்தீவு, துணுக்காய் மற் றும் கிளிநொச்சி கல்வி வலயங்களைச் சேர்ந்த 400 வரையான […]

தமிழ் மக்களின் காணிகளை முஸ்லிம் மக்கள் அபகரிக்கின்றனர்: சுமணரத்ன தேரர்

தமிழ் மக்களுடைய காணிகளை முஸ்லிம் அமைப்புக்கள் அத்துமீறி கைப்பற்றுவதாகவும் அதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட சிங்கள தமிழ் இன விழிப்புணர்வுக்கான அமைப்பு தொடர்பான ஊடகவியலாளர் மகாநாடு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மங்களராமய விகாரையில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். வாழைச்சேனை முறாவோடை சக்தி வித்தியாலயத்தின் விளையாட்டு […]

தமிழர்கள் தொடர்ந்தும் இன சுத்திகரிப்புக்கு உள்ளாக்கப்படுகின்றனர்: தர்மலிங்கம் சுரேஸ்

யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் தமிழர்கள் கலாச்சார, மொழி, பொருளாதார ரீதியில் சுரண்டப்படுவதாகவும் நில அபகரிப்பின் மூலம் தமிழ் இனத்தின் மீதான இன சுத்திகரிப்பு தொடர்ந்தும் இடம்பெற்றுவருகின்றது என்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டு மாவட்ட இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார். செஞ்சோலை படுகொலை நீதிகோரலும் 11ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வும் மட்டக்களப்பு தாண்டவன்வெளி கூட்டுறவ சங்க மண்டபத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே […]

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு மகாநாயக்கர்கள் எதிர்ப்பு!

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு, பௌத்த உயர்பீட மகாநாயக்கர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சிப்பதோடு, கட்சியின் கொள்கைகளுக்கு எதிராக செயற்படுவதாக குறிப்பிட்டு, விஜயதாசவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டுவரும் முனைப்பில் ஐ.தே.க.வின் பின்வரிசை உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையிலேயே, இதற்கு மகாநாயக்கர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அமைச்சர் விஜயதாச தொடர்பில் கட்சிக்குள் அண்மைய காலமாக பாரிய சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், விஜயதாசவை வெளியேற்றுவது ஏனைய அணிகளுக்கு சாதகமாக […]

சீ.ஐ.டி.யில் ஆஜரானார் ஷிரந்தி ராஜபக்ஷ

வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் சற்றுமுன் குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகியுள்ளார். பிரபல ரக்பி வீரர் வஸீம் தாஜூதீனின் கொலை தொடர்பான விசாரணைக்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளார். மேலும், நிதி மோசடி குறித்த விசாரணைக்காக மஹிந்தவின் மகன் ரோஹித்த, சற்றுமுன் நிதிக்குற்ற தடுப்புப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார். மஹிந்த குடும்பத்திடம் இன்று புலனாய்வுப் பிரிவு விசாரணை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு எதிரான விசாரணைகளை தீவிரப்படுத்துவதற்கு அரசாங்கம் […]