Other News

ஐ.தே.கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் நீதியமைச்சருக்கு எதிராக குற்றச்சாட்டு

ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் கொழும்பில் பிரதமர் தலைமையில் இடம்பெற்றது. கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்றைய தினம் முற்பகல் 10.30 அளவில் செயற்குழுக் கூட்டம் ஆரம்பமாகி 12.10 அளவில் முடிவடைந்துள்ளது. தேர்தலில் வழங்கிய வாக்குறுதிக்கு அமைய ஊழல்,மோசடி வழக்குகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்சவிற்கு எதிராக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இரண்டு மணிநேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பதிலளித்த விஜேதாச ராஜபக்ச தான் எந்த […]

இனியும் சிறந்ததோர் அமைச்சரவையை முதல்வர் விக்கியால் அமைக்க முடியுமா? – கூட்டமைப்பு எம்.பி. சிறிதரன் கேள்வி

சிறந்ததோர் அமைச்சர் வாரியத்தை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் இனி அமைக்க முடியுமா என்பதே தற்போதைய சந்தேகம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார். வவுனியா கனகராயன்குளம் புதுக்குளத்தில் தங்கம்மா முதியோர் இல்லம் கலாநிதி முருகர் குணசிங்கத்தால் அமைக்கப்பட்டு திறந்துவைக்கும் நிகழ்விலும், ‘இலங்கைத் தமிழர்’ நூல் வெளியீட்டு நிகழ்விலும் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “2013ஆம் ஆண்டு வடக்கு […]

‘மூதேவி ஆட்சி’க்கு ஆண்டுகள் இரண்டு! – மஹிந்த அணி கொழும்பில் நாளை போராட்டம்

தேசிய அரசின் இரண்டாண்டுப் பூர்த்தியை இலங்கைக்கு மூதேவி பிடித்த  நாளாகப்  பிரகடனப்படுத்தி கொழும்பில் நாளை வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டப் பேரணியை மஹிந்த அணியான பொது எதிரணி நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. கொழும்பு லிப்டன் சந்தியில் நாளை மாலை 3 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகளை பொது எதிரணி மும்முரமாக செய்து வருகின்றது. 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி இலங்கையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசு […]

ஹசனலியை மீண்டும் மு.காவுக்குள் கொண்டுவர ஹக்கீம் கடும் பிரயத்தனம்!

தூய முஸ்லிம் காங்கிரஸின் ஏற்பாட்டாளரான எம்.ரி.ஹசனலிக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்கி முஸ்லிம் கூட்டமைப்பு உருவாவதைத் தடுப்பதற்கான காய்நகர்த்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் ஈடுபட்டுள்ளார் என நம்பகரமாகத் தெரியவருகின்றது. முஸ்லிம் காங்கிரஸ் கட்சியிலிருந்து தூரமாகி இன்று தூய முஸ்லிம் காங்கிரஸ் கட்சியாக மக்கள் மத்தியில் களமிறங்கியுள்ள ஹசனலி மற்றும் பசீர் சேகுதாவூத் தரப்பு எதிர்வரும் தேர்தல்களில் முஸ்லிம் கூட்டமைப்பாக போட்டியிடுவதற்கான பேச்சுகளில் […]

சம்மாந்துறை நௌசாத்தை மு.காவில் இணைக்கப் பேச்சு! 

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சம்மாந்துறைப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான ஏ.எம்.நௌசாத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்துகொள்ளுமாறு அக்கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் வேண்டுகோள் விடுத்துள்ளார் என்று  நம்பகரமாகத் தெரியவருகின்றது. சம்மாந்துறைப் பிரதேசத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கான ஆதரவு  மிகவும் பின்னடைந்து காணப்படும் நிலையில் எதிர்வரும் தேர்தல்களை எதிர்நோக்கும் வகையில் முன்னாள் எம்.பி. நௌசாத்தை கட்சியில் இணைப்பதற்கு அமைச்சர் ஹக்கீம் விரும்பியுள்ளார். அந்தவகையில் ஏ.எம்.நௌசாத்துடன் மு.காவினர் பேச்சில […]

மஹிந்த அரசின் மோசடிகள்: ‘ட்ரயல் அட்பார்’ மூலம் விசாரணை! – இனித்தான் அதிரடி நடவடிக்கை என்கிறார் ராஜித 

“மஹிந்த ஆட்சியின்போது இடம்பெற்ற பாரிய ஊழல், மோசடிகள் தொடர்பான வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்துவதற்காக மேல்நீதிமன்றத்தில் “ட்ரயல் அட்பார்’ முறையில் விசாரணை நடத்துவதற்கு அமைச்சரவையில் இணக்கம் காணப்பட்டுள்ளது”  என்று அமைச்சரவை இணைப் பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். இதைச் செய்வதற்கு அரசமைப்பில் மாற்றம் கொண்டுவரவேண்டியதில்லை எனச் சுட்டிக்காட்டிய அவர், நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவின் செயற்பாடுகளையும் கடுமையாக விமர்சித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரச தகவல் […]

பறிபோகுமா விஜயதாஸவின் அமைச்சுப் பதவி? – இன்று கூடுகின்றது ஐ.தே.கவின் செயற்குழு

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம்  கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று நடைபெறவுள்ளது. நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவுக்கு எதிரான குரல்கள் ஐ.தே.கவுக்குள் வலுப்பெற்றுள்ள நிலையில், அவரின் அமைச்சுப் பதவியைப் பறிப்பதற்கான தீர்மானம் இன்றைய கூட்டத்தில் எடுக்கப்படும் சாத்தியம் காணப்படுகின்றது என கட்சியின் தகவல் அறியும் வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் குறித்த அமைச்சரவையின் […]

மாகாண சபைத் தேர்தல்களை ஒத்திவைப்பதற்காக அல்ல 20ஆவது திருத்தம் என்கிறது அரசு!

மாகாண சபைத் தேர்தல்களை ஒத்திவைக்கும் நோக்கிலேயே 20ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டம் முன்வைக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவலை அரசு நிராகரித்தது. “மாகாண சபைத் தேர்தல்களை ஒரே நாளில் நடத்துவதே ’20’இன் நோக்கம். மாறாக ஒத்திவைப்புக்கான நடவடிக்கை அல்ல” என்று அமைச்சரவை இணைப் பேச்சாளரான அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன்போது அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்துக்கு […]

தேர்தலை ஒருபோதும் பிற்போடவே முடியாது! – அரசுக்கு உத்தியோகபூர்வ அறிவிப்பு விடுத்தார் தேர்தல்கள் ஆணையாளர் 

அனைத்து மாகாண சபைகளுக்கும் ஒரே தினத்தில் தேர்தலை நடத்துவதைக் காரணங்காட்டி கால எல்லை முடியும் மாகாண சபைகளுக்கான தேர்தலை ஒருபோதும் பிற்போடமுடியாது என்று தேர்தல்கள் ஆணையகம் அரசின் உயர்மட்டத்தினருக்கு வலியுறுத்தியுள்ளது என அரசின் தகவல் அறியும் வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவாலேயே இந்த உத்தியோகபூர்வ தகவல் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் வடமத்திய, கிழக்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் ஆயுட்காலம் முடிவடையவுள்ளது. தேர்தல் செலவை அடிப்படையாகக்கொண்டு அனைத்து மாகாணங்களுக்குமான […]

துன்னாலைக் குழப்பங்களின் பிரதான சூத்திரதாரி கைதாம்! – 17 பேருக்கு வலைவீச்சாம்

யாழ். வடமராட்சி – துன்னாலைப் பகுதியில் அண்மையில் ஏற்பட்ட குழப்ப நிலைமைக்குக் காரணமான குழுவின் தலைவர் என்று கருதப்படும் ஒருவரை கைதுசெய்துள்ளதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். துன்னாலைப் பகுதியை அண்மித்த முள்ளிக்காட்டுப் பகுதியில் நேற்றுப் பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது இருவர் கைதுசெய்யப்பட்டனர். இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், துன்னாலைப் பகுதியில் இடம்பெற்ற குழப்ப நிலைக்குக் காரணமான குழுவின் தலைவர் அவர்களில் ஒருவர் எனத் தெரியவந்துள்ளதாம். அண்மையில், மணல் கடத்தல் சம்பவத்தில் […]