Other News

மைத்திரியின் ஆட்சியில் இனவெறியர்களுக்கு இடமில்லாமல் போயுள்ளது – பெரியசாமி பிரதீபன்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாட்டு மக்களுக்கு கடந்த அரசாங்கத்தைவிட தற்போது முன்னூதரணமாக செயற்படுவதாக கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் பெரியசாமி பிரதீபன் தெரிவித்தார். அட்டனில் இன்று மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், கடந்த ஆட்சியில் முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாராபட்ச ரீதியில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடாக மக்களுக்கு சேவையாற்றினார். இதனால் நுவரெலியா மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர […]

ஜெனீவா தீர்மானம் குறித்து அச்சம் கொள்ளத்தேவையில்லை: புதிய வெளிவிவகார அமைச்சர்

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையினால் இலங்கை தொடர்பில் முன்வைத்த யோசனைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை. இலங்கையின் நற்பெயரையும், நன்மதிப்பையும் சர்வதேச மட்டத்தில் பிரபல்யப்படுத்தும் நோக்கில் தூதுவராலயம், உயர்ஸ்தானிகர் அலுவலகம் மற்றும் கன்சியூலர் காரியாலயங்களை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதிய வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார். இன்று காலை அமைச்சில் தமது பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டவேளையில் அமைச்சர் திலக் மாரப்பன இந்தக் கருத்துக்களை வெளியிட்டார். […]

இந்திய – சீன வீரர்கள் மோதல் குறித்து தகவல் தெரியாது – சீன வெளியுறவு அமைச்சகம்

காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் இந்தியா மற்றும் சீனா ராணுவ வீரர்கள் மோதியதாக வெளியான செய்தி குறித்து தகவல்கள் தெரியாது என சீன வெளியுறவு செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார். காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் இந்தியா மற்றும் சீனா ராணுவ வீரர்கள் மோதியதாக வெளியான செய்தி குறித்து தகவல்கள் தெரியாது என சீன வெளியுறவு செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார். காஷ்மீரின் லடாக் பகுதியில் உள்ள பான்காங் ஏரிக்கரையையொட்டி நேற்று காலை 6 மணிக்கு […]

ஹஜ் யாத்ரீகர்களுக்காக கத்தார் எல்லையை திறக்க சவூதி அரேபிய மன்னர் முடிவு

கத்தாரைச் சேர்ந்த ஹஜ் புனித யாத்ரீகர்களுக்காக அந்நாட்டுடனான எல்லையை மீண்டும் திறக்க சவூதி அரேபிய மன்னர் சல்மான் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கத்தாரைச் சேர்ந்த ஹஜ் புனித யாத்ரீகர்களுக்காக அந்நாட்டுடனான எல்லையை மீண்டும் திறக்க சவூதி அரேபிய மன்னர் சல்மான் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தீவிரவாத இயங்களுக்கு உதவி செய்வதாக கூறி கத்தார் உடனான தூதரக உறவை முறித்துக்கொள்வதாக சவூதி அரேபியா, ஐக்கிய அமீரகம், எகிப்து, பஹ்ரைன், […]

தாக்குதல் திட்டத்தை கைவிட்டதால் வடகொரியா அதிபருக்கு டிரம்ப் பாராட்டு

குவாம் தீவை தாக்குவதற்கு தயாராக நிறுத்தப்பட்டு இருந்த 4 ஏவுகணைகளையும் வாபஸ் பெறும்படி வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளதற்கு டொனால்டு டிரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளார். வடகொரியாவும் அதையொட்டி உள்ள தென்கொரியாவும் பகை நாடுகளாக உள்ளன. தென் கொரியாவுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருவதால் அமெரிக்காவை மிரட்டும் வகையில் வடகொரியா ஏவுகணை சோதனை, அணுகுண்டு சோதனை போன்றவற்றை தொடர்ந்து நடத்தி வந்தது. இதனால் வடகொரியா மீது அமெரிக்கா பல்வேறு […]

சம்மாந்துறை நௌசாத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைக்கப் பேச்சு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சம்மாந்துறைப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான ஏ.எம்.நௌசாத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொள்ளுமாறு அக்கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்மாந்துறைப் பிரதேசத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கான ஆதரவு மிகவும் பின்னடைந்து காணப்படும் நிலையில் எதிர்வரும் தேர்தல்களை எதிர்நோக்கும் வகையில் முன்னாள் எம்.பி. நௌசாத்தை கட்சியில் இணைப்பதற்கு அமைச்சர் ஹக்கீம் விரும்பியுள்ளார். அந்த வகையில் ஏ.எம்.நௌசாத்துடன் மு.காவினர் […]

தேசிய அரசாங்கம் பதவிக்கு வந்து இன்றுடன் இரண்டு ஆண்டுகள் பூர்த்தி

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியன இணைந்த தேசிய அரசாங்கம் பதவிக்கு வந்து இன்றுடன் இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளன. கடந்த 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலின் பின்னர் இந்த தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளில் பல வெற்றிகளை பெற்ற போதிலும் அடைய வேண்டிய இலக்கு இன்னும் இருப்பதாக பிரதியமைச்சர் அஜித் பீ.பெரேரா குறிப்பிட்டுள்ளார். கடந்த இரண்டு […]

இரணைமடுவில் இருந்து நீர் தர மறுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்! வடமாகாண சபையில் குற்றச்சாட்டு

வடக்கு மாகாணம் கடுமையாக வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கிளிநொச்சியில் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இரணைமடுவில் இருந்து நீர் தர மாட்டேன் என கூறியுள்ளார். அத்துடன், வடக்கு மாகாணம் வறட்சியான காலநிலையால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரித்துள்ளார். மேலும் குடி நீர் தட்டுப்பாட்டை வடக்கு மக்கள் எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். வடமாகாண சபையின் 102 ஆம் அமர்வு இன்று காலை சபா மண்டபத்தில் இடம்பெற்று […]

வடக்கின் அபிவிருத்தி பணிகளில் இராணுவத்தினர்

வடக்கில் அபிவிருத்திப் பணிகளில் இராணுவத்தினர் தம்மை இணைத்துக் கொண்டிருப்பதாக வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். அத்துடன், தமிழ் மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வதிலும் தம்மாலான உதவிகளை இராணுவத்தினர் செய்து வருவதாக கூறியுள்ளார். ஊடகமொன்றிட்கு இன்று காலை வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவிக்கையில், நல்லிணக்கம் ஏற்படுவதற்கு பெரிதும் தடையாக இருப்பது கல்வியே. சிங்கள மகா வித்தியாலயம், தமிழ் மகா வித்தியாலயம், […]

கிழக்கு பல்கலை. மறு அறிவித்தல் வரைக்கும் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

கிழக்கு பல்கலைக்கழத்தின் மறு அறிவித்தல் வரைக்கும் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை வளாகம் தவிர்ந்த மற்றய அனைத்து வளாகங்களும் மூடப்படவுள்ளதாகவும், இன்று 12 மணிக்கு முதல் அனைத்து மாணவர்களையும் வெளியேறுமாறும் நிர்வாகம் அறிவித்துள்ளது. கிழக்கு பல்கலைக்கழத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.