Other News

மு.காவுடன் இணைவது ஒருபோதுமே நடக்காது! – ஹசனலி திட்டவட்டம்; முஸ்லிம் கூட்டமைப்பே ஒரே இலக்கு என்றும் தெரிவிப்பு 

“ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் மீண்டும் என்னை இணைப்பதற்கான எந்த முயற்சிக்கும் நான் துளியும் இடமளியேன். முஸ்லிம் கூட்டமைப்பு உருவாக்க விடயத்தில் மும்முரமாகவுள்ளேன்.”  – இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் நாயகமும் தூய முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் கூட்டமைப்பின் ஏற்பாட்டாளருமான எம்.ரி.ஹசனலி தெரிவித்தார். ஹசனலிக்கு தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்கி, முஸ்லிம் கூட்டமைப்பு உருவாவதைத் தடுப்பதற்கான காய்நகர்த்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் […]

பொன்சேகா

சுயகௌரவம் இருக்குமானால் உடன் பதவி விலகவேண்டும் விஜயதாஸ! – வலியுறுத்துகின்றார் பொன்சேகா

நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவுக்கு சுயகௌரவம் இருக்குமேயானால் அவர் உடனடியாகப் பதவி விலகவேண்டுமென பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- “விஜயதாஸ ராஜபக்ஷ ஊழல்வாதிகளையும், மோசடியாளர்களையும் காப்பாற்றிவருகின்றார். குற்றம் செய்தவர்களை சட்டத்தின் பிடிக்குள் கொண்டுவருவதற்குத் தடையாக இருக்கின்றார். ஐக்கிய தேசியக் கட்சியினரின் ஒட்டுமொத்த வெறுப்புக்கும் ஆளாகியிருக்கின்றார். அவர் இந்தப் பதவியைவிட்டு விலகினால் மட்டுமே குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தமுடியும். எனவே, அவருக்கு சுயகௌரவம் இருக்குமேயானால் […]

இராஜிநாமா வேண்டாம்! – அமைச்சர் விஜயதாஸவிடம் தேரர்கள் குழு கோரிக்கை 

நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவை அமைச்சுப் பதவியிலிருந்து இராஜிநாமா செய்யவேண்டாம் என தேரர்கள் குழுவினர் நேற்று கோரிக்கை விடுத்துள்ளனர். பௌத்த சங்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தேரர்கள் அடங்கிய குழுவினர் நீதி மற்றும் புத்தசாசன அமைச்சுக்கு நேற்று வந்திருந்தனர். அமைச்சரை சந்தித்து ஆசீர்வாதம் வழங்குவதற்காகவும் பதவியை இராஜிநாமா செய்யவேண்டாம் எனக் கோருவதற்காகவும் தாம் வருகை தந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், அமைச்சர் அங்கு வருகை தராத காரணத்தால் அதிகாரிகளைச் சந்தித்துவிட்டு […]

புத்தளத்தில் சிறுவன் படுகொலை!

புத்தளம்,  முந்தல், சமீரகம பிரதேசத்திலுள்ள தனியார் ஒருவருக்குச் சொந்தமான தோட்டத்திலிருந்து சிறுவனொருவன் படுகொலைசெய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என முந்தல் பொலிஸார் தெரிவித்தனர். சமீரகம பிரதேசத்தைச் சேர்ந்த நஸார் முஹம்மது நஸ்ரான்  (வயது  14) எனும் சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:- உயிரிழந்த சிறுவன்  தனது நண்பரான இளைஞர் ஒருவருடன் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை காலை சமீரகம பிரதேசத்திலுள்ள தோட்டத்துக்குச் சென்றுள்ளார். குறித்த இருவரும் […]

ஐ.நாவின் தீர்மானத்தை இலங்கை முழுமையாக செயற்படுத்தவேண்டும்! – ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டு

“ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தை இலங்கை அரசு முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை.” – இவ்வாறு இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவிடப்பட்டுள்ளது. “நீதியைப் பெற்றுக்கொடுக்கும் விடயத்தில் பாதிக்கப்பட்டவர்களை முன்னிறுத்தியே அந்த நீதி கிடைக்கவேண்டும். அதில் காயங்களை ஆற்றுப்படுத்துவதற்கு வழிவகுக்கப்படவேண்டும்” எனவும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. சர்வதேச சமூகமோ பாதிக்கப்பட்டவர்களோ வேறு எதனையும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் […]

அமெரிக்கா, தென்கொரியா இன்று கூட்டு போர் பயிற்சி: வடகொரியா எச்சரிக்கை

கொரிய தீபகற்ப பகுதியில் அமெரிக்காவும், தென்கொரியாவும் இன்று நடத்தும் கூட்டு போர்ப்பயிற்சிக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையேயான பனிப்போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. தன்மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் புதிய பொருளாதார தடை விதிக்க காரணமான அமெரிக்காவின் குவாம் தீவின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்துவோம் என வடகொரியா அதிரடியாக அறிவித்தது. அதற்கு பதிலடி கொடுத்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், “அந்த நாட்டின் மீதான பிரச்சினையில் […]

பாக்டீரியாவை அனுப்பி செவ்வாய் கிரகத்தில் ஆக்சிஜன்: நாசா புதிய திட்டம்

உயிரினங்கள் வாழ மிகவும் அவசியமான ஆக்சிஜனை செவ்வாய் கிரகத்தில் உருவாக்க நாசா மையம் திட்டமிட்டுள்ளது. அதற்காக அங்கு பாசி இனங்கள் அல்லது பாக்டீரியாவை அனுப்ப முடிவு செய்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் ‘கியூரியாசிட்டி’ என்ற விண்கலம் மூலம் அமெரிக்காவின் ‘நாசா’ மையம் ஆய்வு நடத்தி வருகிறது. இந்த நிலையில் அங்கு காலனி அமைத்து மனிதர்களை குடியமர்த்த போவதாக தனியார் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. கனடா வாழ் அமெரிக்கரான வர்த்தகர் எல்கான் முஸ்க் செவ்வாய் […]

அமெரிக்காவின் அறிவுசார் சொத்துரிமை விசாரணைக்கு சீனா அதிருப்தி

அமெரிக்காவின் அறிவுசார் சொத்துரிமை சட்டத்தை மீறியவகையில் அமெரிக்கா நடத்திவரும் முறைகேடான வர்த்தக நடைமுறைகள் தொடர்பான விசாரணைக்கு சீனா அதிருப்தி தெரிவித்துள்ளது. அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளின் பலத்தை வைத்து அமெரிக்காவை மிரட்டிவரும் வட கொரியாவை கண்டிக்க தவறிய சீனா, வட கொரியாவின் போக்குக்கு ஆதரவு தெரிவித்து வருவது அமெரிக்க அரசுக்கு அதிருப்தியையும் எரிச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. வடகொரியாவுக்கு ஆதரவாக செயல்பட்டுவரும் சீனாவை தனது கைப்பிடிக்குள் வைத்துக் கொள்ளும் ராஜதந்திர முயற்சிகள் பயனற்றுப் […]

கோடிக்கணக்கில் பணத்தை கொடுத்து கூட்டு எதிர்க்கட்சியின் எம்.பிக்களை விலைக்கு வாங்க முயற்சி

கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஆளும் கட்சிக்கு இழுக்க கோடிக்கணக்கில் பணத்தையும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவிகளை வழங்கவும் அரசாங்கம் தயாராகி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க அரசாங்கத்திற்கு எங்கிருந்து கோடிக்கணக்கில் பணம் கிடைத்து என கேள்வி எழுப்பியுள்ள அவர், பிணை முறிப்பத்திர மோசடியில் கிடைத்த பணமோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது எனவும் கூறியுள்ளார். உடுகம்பலையில் உள்ள தனது வீட்டில் மினுவங்கொடை […]

வடக்கு, தெற்கிற்கு பாரபட்சம் காட்டும் பொலிஸார் – தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஜனாதிபதிக்கு

நீதிக்குப் புறம்பான விதத்தில் தமிழ் மக்கள் மீது அழுத்தங்களைக் கொடுப்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினரான ரட்ணஜீவ கூல் தெரிவித்துள்ளார். தெற்கில் பொதுமக்களை கௌரவமாக நடத்துகின்ற பொலிஸார் வடக்கில் வேறுவிதமாக செயற்படுவதாக அவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார். இந்த கடிதத்திலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தில் அவர் மேலும், 16ஆம் திகதி எனது வீட்டுக்கு வந்த பொலிஸார் என்னைக் கைது செய்வதற்கான நீதிமன்ற […]