பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 25 ஆம் திகதி தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்தியா புறப்பட்டுச் செல்ல உள்ளார். தென் இந்தியாவில் கோயில் ஒன்றில் பூஜை ஒன்றை மேற்கொள்ளும் நோக்கில் அவர் இந்தியா செல்ல உள்ளதாக தெரியவந்துள்ளது. ரணில் விக்ரமசிங்கவுக்கு தற்போது பாரதூரமான கெட்ட காலம் ஏற்பட்டுள்ளதால், அதற்கு பரிகாரமாக தென் இந்தியாவில் உள்ள கோயிலில் பூஜை ஒன்றை செய்யும் சதாசிவம் என்பவர் யோசனை கூறியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு […]
Other News
அதிதீவிர பாதுகாப்பில் நீதிபதி இளஞ்செழியன்!
இலங்கை நீதித்துறையில் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனுக்கு விசேட அதிரடிப்படையினருடன் கூடிய விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. கடமை நேரத்தில் நீதிமன்றத்திலும், அவருடைய வாசஸ்தலத்திற்கும் இந்த விசேட பாதுகாப்பை அரசாங்கம் வழங்கியுள்ளது. நல்லூர் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தையடுத்து, நீதிபதி இளஞ்செழியனுடன் உடனடியாகத் தொடர்பு கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்தச் சம்பவம் பற்றிய விபரங்களைக் கேட்டறிந்ததுடன், அவருடைய பாதுகாப்பு தொடர்பிலான விடயங்களிலும் கூடிய கவனம் செலுத்தியிருந்தார். அதேநேரம் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர், […]
அரசு மீது புதிய தாக்குதல்தொடுக்கத் தயாராகின்றனர் மஹிந்த அணியினர்! – பஸில் தலைமையில் களப்பணி தீவிரம்
அரசுக்கு எதிராக கடும் அழுத்தங்களைப் பிரயோகிக்கவும், அதன் செயற்பாடுகளை விமர்சித்து மக்கள் மத்தியில் பரப்புரைகளை முன்னெடுப்பதற்காகவும் பொதுஜன பெரமுனவின் சார்பில் சிவில் அமைப்பொன்று உருவாக்கப்படவுள்ளது. இதற்குரிய முயற்சியில் முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ தீவிரமாக இறங்கியுள்ளார். இது சம்பந்தமாக மஹிந்தவுக்கு சார்பான பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், சட்டத்தரணிகள், வைத்தியர்கள் உட்பட பல்துறையிலுள்ள நிபுணர்களுடனும் பஸில் ராஜபக்ஷ பேச்சு நடத்தி வருகின்றார். எதிரணி அரசியல்வாதிகள் அரசுமீது விமர்சனங்களை முன்வைத்தால் அது அரசியல் எதிர்ப்பு […]
அரசுக்குள் கறுப்பு ஆடுகள்! மைத்திரியிடம் அறிக்கை!! – பொது எதிரணியிலிருந்தும் குத்துக்கரணம்
தேசிய அரசில் இருந்துகொண்டு மஹிந்த தலைமையிலான பொது எதிரணியுடன் உறவாடும் உறுப்பினர்கள் விவரமடங்கிய அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. புலனாய்வுப் பிரிவினரால் கையளிக்கப்பட்டுள்ள மேற்படி அறிக்கையில் தேசிய அரசிலிருந்து வெளியேறுவதற்கு தயாராகிவருபவர்களின் பெயர் விவரமும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் தரப்பை மேற்கோள்காட்டி தகவல் வெளியாகியுள்ளது. தேசிய அரசமைப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையே ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை எதிர்வரும் டிசம்பர் மாதத்துடன் முடிவுக்குவருகின்றது. அதன்பின்னரே தாவல்கள் […]
ஜனாதிபதி – கூட்டமைப்பு இன்று முக்கிய சந்திப்பு!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையிலான முக்கிய சந்திப்பு இன்று திங்கட்கிழமை மாலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. இந்தத் தகவலை பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உறுதிப்படுத்தினார். புதிய அரசமைப்பு முயற்சி தாமதமடைந்துவருவதால் இந்த விடயத்தில் உடனடியாகத் தலையிட்டு புதிய அரசமைப்பு உருவாக்கத்தை விரைவுபடுத்துமாறு மேற்படி சந்திப்பில் ஜனாதிபதியிடம் கூட்டமைப்பு வலியுறுத்தவுள்ளது. அதேவேளை, அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டம் தொடர்பிலும் கூட்டமைப்பு […]
பதவி துறக்கின்றார் விஜயதாஸ! நீதி அமைச்சராகிறார் ஜயம்பதி!!
நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ இன்று தனது அமைச்சுப் பதவியை இராஜிநாமா செய்யவுள்ள நிலையில், புதிய நீதி அமைச்சராக எவரை நியமிப்பது என்பது தொடர்பில் ஜனாதிபதியும், பிரதமரும் ஆலோசனை நடத்திவருகின்றனர் என அரச வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. புதிய நீதி அமைச்சர் பதவிக்கு முக்கிய இரண்டு அமைச்சர்களின் பெயர்கள் அடிபடுவதுடன், ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்னவின் பெயர் சிபாரிசு பட்டியலில் முதலிடத்தில் இருப்பதாகத் தெரியவருகின்றது. […]
மூவரடங்கிய குழுவின் இறுதி முடிவு இன்று! – கூடுகிறது ஐ.தே.கவின் நாடாளுமன்றக்குழு
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று பிற்பகல் கூடவுள்ள நிலையில், நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ குறித்த விசாரணை அறிக்கையும் இதன்போது சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஐ.தே.கவின் செயற்குழுக் கூட்டம் கடந்த வியாழக்கிழமை கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நடைபெற்றது. இதன்போது நீதி அமைச்சர் விஜயதாஸவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்துடன், விஜயதாஸ ராஜபக்ஷவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் சம்பந்தமாக ஆராய்வதற்காக அமைச்சர்களான மங்கள சமரவீர, மலிக் […]
தாய்வீட்டுக்குள் நுழையத் தயாராகின்றார் திஸ்ஸ!
ஐக்கிய தேசியக் கட்சிக்கு வருமாறு அதன் பொதுச் செயலாளர் தன்னை அழைத்துள்ளார் என்றும், பெரும்பாலான உறுப்பினர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்றும் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். தற்போதைய அரசியல் நிலைவரங்கள் குறித்து தான் ஆராய்ந்துவருகிறார் என்றும், முக்கிய தேர்தலுக்குரிய அறிவிப்பு வெளியான பின்னர் தனது அரசியல் பயணம் மீண்டும் ஆரம்பமாகும் எனவும் அவர் கூறியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவிவகித்த திஸ்ஸ அத்தநாயக்க கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது […]
அரசியலில் குதிக்கிறாரா அஞ்சலி..?
அரசியலில் நடிகை அஞ்சலி களமிறங்க இருப்பதாக வந்த தகவல் உண்மையில்லை என மறுத்திருக்கிறார் நடிகை அஞ்சலி. ஜேஎஸ்கே சதீஷ்குமார் தயாரிப்பில் ராம் இயக்கத்தில் அஞ்சலி நடித்த தரமணி திரைக்கு வந்து வெற்றி பெற்றிருக்கிறது. இதனை அடுத்து ஜெய்யுடன் இணைந்து பலூன் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், அவர் அரசியலில் களமிறங்க இருப்பதாகக் கூறப்பட்டது. ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக ஒரு தகவலும், தமிழகத்தில் ரஜினிகாந்த் தொடங்க உள்ள […]
ஜெயலலிதாவை பதவி விலக கோரவில்லையே கமல்?
தமிழகத்தில் ஊழல் மலிந்துவிட்டதால் முதலமைச்சர் பழனிசாமி பதவி விலக வேண்டும் என கூறும் நடிகர் கமல்ஹாசன், ஜெயலலிதாவையும், கருணாநிதியையும் ஏன் அவ்வாறு கூறவில்லை என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், 2008ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜரானார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளாகவே ஊழல் மலிந்து கிடக்கிறது. ஊழல் மலிந்துவிட்டதால் முதலமைச்சர் […]





