வடக்கு மாகாண சபையின் புதிய உறுப்பினர்களைக்கொண்ட அமைச்சரவை இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற சத்தியப்பிரமாண வைபவத்துடன் பொறுப்பேற்றது. ஏற்கனவே அமைச்சராக இருக்கும் கந்தையா சர்வேஸ்வரனுக்கு மேலதிகமாக முதல்வர் விக்னேஸ்வரனும், அமைச்சர் அனந்தி சசிதரனும் புதிய அமைச்சுப் பொறுப்புகளை ஏற்றனர். அதனால் அவர்கள் இருவரும், அத்துடன் புதிதாக அமைச்சர் பதவிகளை ஏற்ற ரெலோவின் ஞானசீலன் குணசீலன், புளொட்டின் கந்தையா சிவநேசன் ஆகியோரும் இன்று தத்தமது பொறுப்புகளை ஏற்று […]
Other News
கேப்பாப்பிலவு காணி விடுவிப்பு குறித்து ஜனாதிபதி – கூட்டமைப்பு பேச்சு! – இராணுவம் வெளியேற ரூ.15 கோடி அமைச்சரவை அங்கீகாரம்
கேப்பாப்பிலவு காணி விடுவிப்புத் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்குழு நேற்று ஜனாதிபதி தலைமையிலான அரசுத் தரப்புடன் பேச்சுக்களில் ஈடுபட்டது. கேப்பாபிலவுக் காணிகளை விடுவிப்பதற்காக இராணுவத்தினருக்கு 14 கோடி 80 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்வதற்கு நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தக் கூட்டத்தில் தெரிவித்தார். இந்தச் சந்திப்பு நேற்று மாலை 4.30 மணி தொடக்கம் சுமார் ஒரு மணி நேரம் நாடாளுமன்றக் […]
மஹிந்தவை தலைமைப் பொறுப்பில் அமர்த்தும்வரை போராட்டம் தொடரும்! – பொது எதிரணி கூறுகின்றது
“இன்னும் கொஞ்ச நாட்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் எஞ்சியிருக்கப்போவது கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், செயலாளர் துமிந்த திஸாநாயக்கவும்தான்” என்று மஹிந்த அணியான பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “வீட்டில் கூலிக்கு இருந்தவர் வீட்டை சொந்தமாக்கிக்கொள்ளும் செயற்பாடே இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் நடந்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேறு அரசியல் சக்திகளுக்கு அடிபணிந்துள்ளது. இதற்கான முழுப் பொறுப்பையும் கட்சியின் […]
வடக்கு அமைச்சரவையிலிருந்து டெனீஸை தூக்கி எறிந்தார் முதல்வர் விக்கி!
வடக்கு மாகாண அமைச்சரவையிலிருந்து பா.டெனீஸ்வரனை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தூக்கி எறிந்துள்ளார். அவரது அமைச்சுப் பதவியில் சிலவற்றை திருமதி அனந்தி சசிதரனுக்கும், எஞ்சியவற்றை தானே பொறுப்பெடுப்பதாவும் தெரிவித்து வடக்கு மாகாண ஆளுநர் குரேக்கு, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கடிதம் எழுதியுள்ளார். அமைச்சர் பா.டெனீஸ்வரன் தானே அமைச்சுப் பதவியில் தொடர்வதாக ஏற்கனவே, வடக்கு மாகாண ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளமையால், இந்த விடயத்தில் சட்டஆலோசனை வழங்குமாறு கோரி வடக்கு மாகாண ஆளுநர் குரே சட்டமா அதிபர் […]
அடிப்படை உரிமையற்றவரை தற்காலிகமாக நீக்க முடியுமா? – ரெலோவிடம் கேட்கிறார் டெனீஸ்
“எனது அமைச்சுப் பொறுப்பை கபடத்தனமாகவும் – சூட்சுமமாகவும் தட்டிப்பறிக்க நினைக்கின்றார்கள். கட்சியின் அடிப்படை உறுப்புரிமைகூட இல்லாத என்னை ஆறு மாதங்களுக்கு தற்காலிகமாக எப்படி இடைநிறுத்த முடியும்? கட்சி யாப்பில் அதற்கு இடமிருக்கின்றதா? கட்சியின் அடிப்படை உறுப்புரிமை பெற்ற நபரென்று சொன்னால், உறுப்புரிமை எனக்கு எப்போது வழங்கப்பட்டது என்பதை ஆதராத்துடன் பகிரங்கப்படுத்த முடியுமா?” – இவ்வாறு வடக்கு மாகாண மீன்பிடி மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் பா.டெனீஸ்வரன் ரெலோவிடம் கேள்விகளை எழுப்பியுள்ளார். ரெலோவின் […]
மஹிந்த ஆட்சிக்கால திருடர்களை விஜயதாஸவே பாதுகாத்து வந்தார்! – நளின் பண்டார
மஹிந்த ஆட்சிக்கால திருடர்களை நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவே பாதுகாத்து வந்தார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “நல்லாட்சி அரசு ஈராண்டுகளைக் கடந்துள்ள நிலையில் முக்கிய சில இலக்குகளை அடைந்துள்ளது. எனினும், திருடர்களைப் பிடிக்க முடியாமல் போனதே பாரியதொரு தவறாக இருக்கின்றது. கடந்த ஆட்சிக்கால திருடர்களை ஜனாதிபதியா […]
இன்றும் சு.கவுக்கு நானே தலைவர்! – மார்தட்டுகிறார் மஹிந்த
இன்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் தானே எனவும், தன்னை அந்தப் பதவியிலிருந்து எவரும் விலக்கவும் இல்லை எனவும், தான் விலகவும் இல்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தன்னை சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டதால் அந்தப் பதவி தனக்கே உரித்தாகிறது என வேறொருவர் கூறுவது வேடிக்கையாக இருக்கின்றது எனவும் அவர் கூறியுள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:- “என்னையும் எனது குடும்பத்தினரையும் பழிவாங்குவதற்காக பல்வேறு பொய் […]
ஒரு தலை குல்லாவா?:தமிழிசை கேள்வி
தமிழக அரசியல் தொடர்பாக அடிக்கடி ட்விட்டரில் கருத்து பதிவிடுவது நடிகர் கமல்ஹாசனின் வழக்கம். அதிமுக அணிகள் நேற்று இணைந்த போது ட்விட்டரில் பதிவிட்டிருந்த கமல்ஹசான், “காந்திக்குல்லா! காவிக்குல்லா! கஷ்மீர்குல்லா!! தற்போது கோமாளிக்குல்லா, தமிழன் தலையில். போதுமா? இன்னும் வேண்டுமா? தயவாய் வெகுள்வாய் தமிழா” எனக் கூறியிருந்தார். இந்நிலையில் ட்விட்டரில் கமல்ஹாசனை மறைமுகமாக சாடியுள்ள தமிழிசை சவுந்தரராஜன், “காந்தி குல்லாவையும் காவி குல்லாவையும் முந்திக் கொண்டு அவசரமாக போட்டவர்கள் முத்தலாக் தீர்ப்பு […]
கருணாநிதி ஒவ்வொரு நாளும் கனவில் வருகிறார்
திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரிப்பதற்காக வைகோ இன்று கோபாலபுரம் இல்லம் சென்றார். அவரை ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்டோர் வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றனர். வைகோ கருணாநிதியை சந்தித்து உடல் நலம் விசாரித்தார். பின்னர் வெளியே வந்த வைகோ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், திமுகவுடனும் கருணாநிதியுடனும் தனக்கு ஏற்பட்ட நெருக்கத்தையும் கட்சிப் பணியாற்றிய வரலாற்றையும் சுருக்கமாகவும் நெகிழ்ச்சியோடும் பேசினார். கருணாநிதிக்காக தான் மெய்க்காப்பாளர் படை அமைத்ததாக வைகோ […]
ஆப்கானிஸ்தானுக்கு கூடுதல் படைகள்
வாஷிங்டனில் உள்ள ராணுவ மையத்தில் உரையாற்றிய அவர், ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா மேற்கொள்ள வேண்டிய போர் உத்திகள் குறித்து விவரித்தார். இந்த உரை தொலைக்காட்சி மூலமாக நேரலையாக ஒளிபரப்பானது. அப்போது பயங்கரவாதிகளின் புகலிடமாக ஆப்கானிஸ்தான் இருக்கக்கூடாது என்பதற்காகவே புதிய அணுகுமுறையை வரையறுத்திருக்கிறோம். யுத்தம் நடத்தி வெற்றி பெறுவதே தமது நோக்கம்’எனத் தெரிவித்தார். ஆப்கானிஸ்தானில் நடக்கும் போர் குறித்து, முந்தைய அதிபர்களைத் தொடர்ச்சியாக விமர்சனம் செய்து வந்த ட்ரம்ப், தற்போது அவர்களின் நடவடிக்கையைத் […]





