Other News

தீவிரவாதத்தை எதிர்ப்பதில் பாகிஸ்தான் முதலிடம்: சீனா சர்டிபிகேட்

தீவிரவாதிகளை வளர்த்து வருவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ள நிலையில் தீவிரவாதத்தை எதிர்த்து போராடுவதில் பாகிஸ்தான் முதலிடத்தில் இருப்பதாக சீனா வக்காலத்து வாங்கியுள்ளது. தெற்காசிய நாடுகள் தொடர்பான அமெரிக்காவின் புதிய கொள்கைகள் குறித்து அந்நாட்டின் அதிபர் டொனால்ட் டிரம்ப் தொலைக்காட்சி மூலமாக நாட்டு மக்களிடையே உரையாற்றினார். ‘பாகிஸ்தானுக்கு கோடிக்கணக்கான டாலர்கள் அமெரிக்கா நிதியுதவியாக அளிக்கிறது. அதேநேரம், நாம் எதிர்த்துப் போரிட்டுவரும் தீவிரவாதிகளின் புகலிடமாக அந்நாடு விளங்குகிறது. தலிபான் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் […]

ஆசிய-பசிபிக் கடற்பகுதியில் அமெரிக்க கடற்படை செயல்பாடுகளால் ஆபத்து அதிகரிப்பு: சீனா விமர்சனம்

சிங்கப்பூர் கடற்பகுதியில் அமெரிக்க போர்க்கப்பல் சரக்கு கப்பலுடன் மோதி விபத்துக்குள்ளானதை தொடர்ந்து அமெரிக்க கடற்படை ஆபத்தானது என சீன ஊடகம் விமர்சனம் செய்துள்ளது. சிங்கப்பூர் கடல் பகுதியில் மலாக்கா தீவு அருகே சென்று கொண்டிருந்த ஜான் மெக்கெயின் அமெரிக்க போர்க்கப்பல், லிபியாவை சேர்ந்த அல்னிக் என்ற சரக்கு கப்பலுடன் நேற்று திடீரென மோதி விபத்துக்குள்ளானது. இது இந்த ஆண்டு பசிபிக் கடற்பகுதியில் அமெரிக்க கப்பல் ஏற்படுத்திய நான்காவது விபத்தாகும். இந்த […]

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த போதைப்பொருள் தூத்துக்குடியில் பறிமுதல்

தூத்துக்குடியில் இருந்து கட‌ல் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள 24 கிலோ அசிஸ் போதைப்பொருளை அந்நாட்டு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதில் கடத்தல்காரர்களை பிடிக்க துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதுடன், ஒருவரை கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாநகர் பகுதியில் இருந்து அசிஸ் என்ற போதைப்பொருளை இலங்கைக்கு சிலர் கடத்த முயல்வதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். […]

வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெவில்லையா – உடனடியாக அறிவியுங்கள்

வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்றிருக்காவிட்டால், உடனடியாக அறிவிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய வாக்காளர்களை கேட்டுள்ளார். 2017ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு தயாரிக்கும் பணி பூர்த்தி அடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தேர்தல்கள் திணைக்களத்தின் இணையத்தளத்தில் வாக்காளர் இடாப்பை பார்வையிட முடியும். இணையத்தளத்தின் முகவரி : www.elections.gov.lk

ஆசியாவின் தலைசிறந்த சுற்றுலா வலயமாக காலி – பிரதமர்

காலி மாவட்டம் ஆசியாவின் சிறந்த சுற்றுலா வலயமாக தரமுயர்த்தப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். எல்பிட்டிய பிரதேசத்தில் நான்காயிரம் காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் நிகழ்வில் பிரதமர் உரையாற்றும்போதே இவ்வாறு குறிப்பிட்டார். காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் வேலைத் திட்டத்தின் கீழ் அடுத்த சில ஆண்டுகளில் சகலருக்கும் காணி உரிமைகள் உறுதி செய்யப்படும். களுத்துறையில் 800 ஏக்கர் விஸ்தீரணமான நிலப்பரப்பில் கைத்தொழில் பேட்டை நிறுவப்படவுள்ளது. ஹம்பாந்தோட்டை துறைமுகம் மத்தள விமான நிலையம் […]

ஜெனிவா தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சிறிலங்கா முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் கொழும்பு பணியகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ஐநா மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவு நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் கிடையாது. பாதிக்கப்பட்டவர்களின் இதயத்தில் தான் நீதியும், குணப்படுத்தல் வசதிகளும் உள்ளன என்பது முக்கியமாகும். வேறு எதுவும் அனைத்துலக சமூகத்தினால் ஏற்றுக் […]

ஷங்காய் நகரம் போல தென்னிலங்கையை மாற்றுவோம்- சீனத் தூதுவரின் சபதம்

அடுத்த 15 ஆண்டுகளுக்குள் சிறிலங்காவை சிங்கப்பூராக தரமுயர்த்துவதற்கு ஏற்ற வகையில், சீனா தொடர்ந்து உதவிகளை வழங்கும் என்று சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் யி ஷியான்லியாங் தெரிவித்துள்ளார். தங்காலையில் நேற்று நடந்த- சீனாவின் கொடையில், ஆயிரம் பாடசாலை மாணவர்களுக்கு 1.8 மில்லியன் ரூபா பெறுமதியான பாடசாலை கருவிகளை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே சீன தூதுவர்,இவ்வாறு குறிப்பிட்டார். “சீனாவின் மிகச் சிறப்பான நண்பன் தான் சிறிலங்கா. இரண்டு நாடுகளுக்கும் […]

20ஆவது திருத்தத்திற்கு எதிராக போர்கொடி உயர்த்தும் இ.தொ.கா.

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள உள்ளூராட்சிமன்றத் திருத்தச் சட்டமூலத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் யோசனைகள் புறக்கணிக்கப்பட்டால், அதற்கு எதிராக வாக்களிக்கவுள்ளதாக கட்சியின் தலைவர் முத்துசிவலிங்கம் தெரிவித்தார். சௌமிய பவனில் நடைபெற்ற தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். புதிய எல்லை மீள் நிர்ணயம் எந்தவகையிலும் மலையக மக்களின் அரசியல் ரீதியிலான உரிமைகளை பாதுகாப்பதாக தெரியவில்லை. தற்போதைய விகிதாசாரத் தேர்தல் முறையில் இருக்கும் சில அனுகூலங்கள் புதிய கலப்புத் […]

காலத்தை இழுத்தடிக்காமல் வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்! – மைத்திரியிடம் நேரில் சம்பந்தன் இடித்துரைப்ப

“புதிய அரசமைப்பு உருவாக்கத்தில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட இடைக்கால வரைபின் அறிக்கை இன்னமும் சமர்ப்பிக்கப்படவில்லை. எனவே, காலத்தை இழுத்தடிக்காமல் ஜனாதிபதித் தேர்தலின்போது நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை உடன் நிறைவேற்றுங்கள்.” – இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேரில் இடித்துரைத்தார் பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். கொழும்பில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்றிரவு நடைபெற்ற முக்கிய […]

தமிழர் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி – சம்பந்தன் குழு இன்று முக்கிய பேச்சு!

காணி விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை, தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம் உள்ளிட்ட தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றத் குழுவுக்கும் இடையில் இன்று செவ்வாய்க்கிழமை முக்கிய சந்திப்பு நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் மாலை 4.30 மணிக்கு இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது என கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. தெரிவித்தார்.