Other News

சசிகலாவை திடீரென ஒதுக்குவது ஏன்?

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் 33 ஆண்டுகள் ஒன்றாக இருந்த சசிகலாவை, திடீரென அவரை ஒதுக்குவது ஏன் என அவரது ஆதரவாளர் சி.ஆர் சரஸ்வதி வினவியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சி.ஆர்.சரஸ்வதி, ” இன்றிருக்கும் முதலமைச்சரை சசிகலா தான் அமர வைத்தார். சசிகலாவும் சரி.. டிடிவி தினகரனும் சரி.. எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும் என தான் சொல்கிறார்கள். முதலமைச்சரை நான் கேட்பதெல்லாம், எங்களை ஏன் தனிமைப்படுத்துகிறீர்கள் என்பதை நீங்கள் தெளிவாக […]

தமிழகத்தில் ரசாயன மாற்றம் ஏற்படாது

ஓபிஎஸ்- இபிஎஸ் அணிகள் இணைந்தாலும், இணையாவிட்டாலும் தமிழகத்தில் எந்தவித ரசாயன மாற்றமும் ஏற்படப் போவதில்லை என நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன் ஆதரவாளரான நாஞ்சில் சம்பத், ” 123 எம்எல்ஏ-க்களின் ஆதரவுடன் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்த முதலமைச்சர், இந்த கட்சியையும், ஆட்சியையும் காட்டிக் கொடுத்த துரோகியுடன் இணைய வேண்டிய அவசியம் ஏன் வந்தது? என வினாவியுள்ளார். மேலும் பேசிய அவர் “பால் ஊட்டி வளர்த்த […]

கருணாநிதியின் உடல்நிலை: கண்கலங்கிய துரைமுருகன்

புதியதலைமுறையின் அக்னிப்பரிட்சை நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் ‘கலைஞரின் உடல்நிலையைப் பொறுத்தவரையில் எந்தவித உபத்திரமும் இல்லை. 94 வயது அவருக்கு. அவருக்கு சலியை எடுப்பதற்கு ஒரு குழாயை வைத்திருக்கிறார்கள். அதுதான் அவரை பேசவிடாமல் தடுக்கிறது. பேச முடியாமல் இருப்பதுதான் கருணாநிதிக்கு இப்போது இருக்கிற ஒரு குறை. அந்தக்குழாயை எப்போது எடுப்பார்கள் எனத் தெரியவில்லை. மருத்துவரிடம் கேட்டால் இன்னும் கொஞ்ச நாள் ஆகும் எனத் தெரிவித்துள்ளனர். மற்றபடி அவரை இரவு 7 அல்லது […]

அதிமுக அணிகள் இணைந்தால் என்ன? இணையாவிட்டால் என்ன?

தமிழகம் பல்வேறு முக்கிய பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழலில் உள்ளபோது, அதிமுக இணைப்பு விவகாரத்தை தாம் ஒரு பொருட்டாகவே கருதவில்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இரு அணிகள் இணைப்பு ஒரு பிரச்னையே இல்லை. இது நாட்டின் பெரிய பிரச்னையா? மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டக்கூடாது என போராடிக் கொண்டிருக்கிறோம். இந்த நிலையில் கர்நாடக அரசு மேகதாதுவில் அணைகட்ட […]

இரு அணிகளும் விரைவில் இணையும்

திருவாரூரில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு தின விழாவில் பங்கேற்க சென்ற அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுகவை ஜெயலலிதா கண்ணை இமை காப்பதைப்போல காத்து வந்தார். தொடர்ந்து தமிழக மக்களுக்கு தனது ஆட்சியில் ஏராளமான திட்டங்களையும், நலன்களையும் அளித்து வந்தார். அவர் விட்டுச் சென்ற ஆட்சி சிறப்பாக வழி நடத்தப்பட்டு கொண்டிருக்கிறது. இடையிலே சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது. இப்போது பேச்சுவார்த்தைகள் மூலமாக சரி […]

Big Boss’-ஐ மிஞ்சிய அதிமுக அணிகள் இணைப்பு

அதிமுகவில், அணிகள் இணைப்பு பிக்பாஸ் நிகழ்ச்சியையே மிஞ்சிவிட்டதாக திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அவர் இதைக் கூறினார்.

பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வாழ்த்து

இந்தியாவின் சுதந்திர தினத்தை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட டொனால்டு ட்ரம்ப் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி தொடங்கியிருப்பதற்கு வரவேற்பு தெரிவித்தார். இந்தியாவின் எரிபொருள் தேவையை அமெரிக்கா நீண்ட கால அடிப்படையில் பூர்த்தி செய்யும் என்றும் டிரம்ப் உறுதியளித்ததாக அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகொரியாவுக்கு எதிராக உலக நாடுகளை ஒன்றுதிரட்டியதற்காக அமெரிக்க அதிபருக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி […]

ட்ரம்பின் கருத்துக்கு எதிர்ப்பு

வெள்ளை இனவாத அமைப்புகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கண்டனம் தெரிவிக்கவில்லை எனக் கூறி அமெரிக்காவின் வர்த்தகக் குழுக்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் தங்களது பதவிகளில் இருந்து விலகி இருக்கிறார்கள். இதனால், அவர் அமைத்திருந்த இரு முக்கிய தொழில் கூட்டமைப்புகளைக் கலைக்க வேண்டியநிலை ஏற்பட்டிருக்கிறது. கடந்த சனிக்கிழமை சார்லட்ஸ்வில் நகரில் நடந்த வன்முறைகளுக்கு வெள்ளை இனவாத அமைப்புகள், அவர்களுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்க‌ள் ஆகிய இரு தரப்புமே காரணம் என ட்ரம்ப் […]

இனவாத விவகாரத்தில் மவுனம் கூடாது: அமெரிக்க அமைச்சர்

அமெரிக்காவில் வெள்ளை இனவாதத்தை ஆதரிப்போருக்கும், நாஜி கருத்துகளைக் கடைப்பிடிப்போருக்கும் அந்நாட்டு முன்னாள் போர் வீரர்கள் விவகாரங்களுக்கான அமைச்சர் டேவிட் சுக்லின் கண்டனம் தெரிவித்துள்ளார். எனினும் அதிபர் ட்ரம்ப் தொடர்பாக அவர் எந்த கருத்தையும் கூறவில்லை. தாம் கூறியிருப்பது தமது சொந்தக் கருத்து என்றும் அவர் தெரிவித்தார். வரலாற்றைப் புரிந்து கொண்டிருக்கும் நாம் அமைதியாக இருப்பது ஏற்புடையதல்ல என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், வெள்ளை இனவாத எதிர்ப்புப் பேரணியில் ஒரு பெண் […]

இலங்கை கடற்படை தளபதியாக தமிழர் நியமனம்

இலங்கை கடற்படையின் 21ஆவது தளபதியாக ரியல் அட்மிரல் ட்ரெவிஸ் சின்னையா, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனாவால் நியமிக்கப்பட்டுள்ளார். கடற்படையின் தற்போதிய தளபதியாக இருக்கும் வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன‌ பாதுகாப்பு படைகளின் தளபதியாக நியமிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.