அரச பேருந்து சேவைகள் அனைத்தும் வடக்கு மாகாணத்தில் இன்று காலை தொடக்கம் ஸதம்பிதம் அடைந்துள்ளன. இதனால் பொதுமக்கள், மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர். இலங்கை போக்குவரத்துச் சபையின் வட பிராந்திய ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையை இன்று காலை முதல் ஆரம்பித்தனர். வட பிராந்திய பிரதான முகாமையாளர் உபாலி கிரிவத்துடுவ மற்றும் பாதுகாப்பு அதிகாரி ஆகியோரை வடக்கிலிருந்து உடன் இடமாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. […]
Other News
தமிழகத்தில் இருந்து சட்டவிரோதமாக தாயகம் திரும்பிய ஈழ அகதிகள்
தமிழகத்தின் தூத்துக்குடி அகதிகள் முகாமைச் சேர்ந்த ஒன்பது பேர் இராமேசுவரத்தில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு தப்பிச்சென்றது திங்கள்கிழமை தெரியவந்துள்ளது. இதுகுறித்து உளவுத் துறை அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் உள்ள பல்வேறு முகாம்களில் இலங்கைத் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த முகாம்களில் உள்ள சிலர் தங்களது உறவினர்களைப் பார்க்க இராமேசுவரத்தில் இருந்து படகுகள் மூலம் இலங்கைக்கு சென்று விடுகின்றனர். இந்தநிலையில், தூத்துக்குடி மாவட்டம் தாப்பாத்தி இலங்கை தமிழர்கள் முகாமில் […]
பிரபாகரனின் புகைப்படங்களை பயன்படுத்தியவர்களை கைதுசெய்ய நடவடிக்கை
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படங்களை பயன்படுத்தி, மாவீரர் தினத்தை அனுஷ்டித்தவர்களைக் கைதுசெய்வது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவர் விஜேவர்த்தன குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற செயற்பாடுகள் சட்டவிரோதமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், தீவிரவாத விசாரணைப் பிரிவினரால் குறித்த நபர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ருவன் விஜேவர்த்தன மேலும் தெரிவித்துள்ளார். கம்பஹா பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வௌியிட்ட போதே […]
தென்கொரியா சென்றடைந்தார் மைத்திரி
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை தென்கொரியாவின் தலைநகர் சியோல் நகரை சென்றடைந்தார். தென்கொரியா நாட்டு ஜனாதிபதி மூன்ஜேனின் அழைப்பை ஏற்று மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதியை அந்நாட்டு உதவி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் Cho Hyun தலைமையில் இன்சிஜோன் சர்வதேச விமானநிலையத்தில் ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு வழங்கப்பட்டது. ஜனாதிபதிக்கு உத்தியோகபூர்வ வரவேற்பு இன்று இடம்பெறவுள்ளது. இதனை தொடர்ந்து இரு நாட்டு தலைவர்களுக்கும் இடையில் இருதரப்பு […]
வேட்பாளர்கள் தொடர்பில் வெளிப்படைத் தன்மை வேண்டும்
எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலின் பொருட்டு கட்சிகள் தமது வேட்பாளர்களை எவ்வாறு தெரிவு செய்கின்றன என்பது குறித்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என தேர்தல்களை கண்காணிக்கும் அமைப்பான பெப்ரல் (PAFFREL) கோரிக்கை விடுத்துள்ளது கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் வைத்து அமைப்பின் நிறைவேற்று அதிகாரி ரோஹன ஹெட்டியாராச்சி இதனைக் குறிப்பிட்டுள்ளார். கட்சி ஒன்று பொருத்தமற்ற வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்யுமாயின் அது தொடர்பில் நாட்டுக்கு தெரியப்படுத்த தாம் தயார் […]
இலங்கையர் சிலர், கென்யாவால் நாடுகடத்தல்
போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் கைதான இலங்கையர்கள் சிலர், கென்யாவில் இருந்து நாடுகடத்தப்பட்டுள்ளனர். அந்த நாட்டின் உள்துறை அமைச்சின் செயலாளர் ஃப்ரெட் மட்டியாங்கி இதனைத் தெரிவித்துள்ளார். பல்வேறு சந்தர்ப்பங்களில் போதைப் பொருள் கடத்தல்களில் ஈடுபடுத்தப்பட்டமைக்காக கைதான 30க்கும் அதிகமானவர்கள் நாடுகடத்தப்பட்டனர். அவர்களுள் இலங்கை, பாகிஸ்தான், அமெரிக்கா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களும் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியுடன் இணையுமா ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இணைந்து போட்டியிடுவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் ஆராய ஒன்றிணைந்த எதிர்க்கட்சி மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகியன இன்று பேச்சுவார்த்தையில் ஈடுப்படவுள்ளன. ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் அமைச்சர்களான நிமல் சிறிபால டீ சில்வா, அனுர பிரியதர்ஷன யாப்பா, லசந்த அலகியவன்ன ஆகியோர் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் செயலாளர் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஒன்றிணைந்த எதிர்கட்சி சார்பில் தான் […]
சிவனொளிபாதமலை செல்லும் யாத்திரிகர்களின் வாகனங்கள் சோதனை
சிவனொளிபாதமலை பருவகாலம் அடுத்த மாதம் மூன்றாம் திகதி தொடக்கம் ஆரம்பமாகவுள்ளதை முன்னிட்டு மஸ்கெலியாவிலிருந்து சிவனொளிபாதமலை வரை சேவையில் ஈடுபடும் வாகனங்கள் தீடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. நுவரெலியா மாவட்ட வாகன பரிசோதகர்களுடன் மஸ்கெலியா போக்குவரத்து பொலிஸாரும் இணைந்து நேற்றைய தினம் தொடக்கம் தீடீர் சோதனை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். சிவனொலிபாதமலைக்கு செல்லும் யாத்திரிகளுக்கு பாதுகாப்பான சிறந்த போக்குவரத்து சேவையை வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. நேற்றைய தினம் 50 மேற்பட்ட வாகனங்கள் […]
விபச்சாரத்தில் ஈடுபட்ட இளம் தமிழ் நடிகை பூனேவில் கைது!!
பிரபலமில்லாத தமிழ் பட நாயகி ஒருவர் பூனேவில் உள்ள விடுதியில் விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதால் போலீஸார் அவரை கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு தமிழில் கே.எஸ்.சரவணன் இயக்கத்தில் வெளியான படம் வாடா செல்லம். இந்த படத்தில் மாஸ்டர் மகேந்திரன் நாயகனாகவும், கரோலின் நாயகியாகவும் நடித்தனர். இந்த தமிழ் படத்தில் மட்டுமின்றி ஆடை விளம்பரங்களிலும், நகை கடை விளம்பரங்களிலும் நடித்துள்ளார் கரோலின். இந்நிலையில், பூனேவில் உள்ள ஒரு […]
நாக்கின் நிறத்தை வைத்து நம் உடலில் உள்ள பிரச்சனையை கண்டறிய…!
நாம் உண்ணும் உணவின் சுவையை அறிய உதவுவதும் நாக்குதான். அதற்கு உதவும் வகையில் நாக்கில் ‘சுவையுணர்வு ஏற்பிகள்’ ஏராளமாக உள்ளன. இவை இனிப்பு, உப்பு, புளிப்பு, கசப்பு ஆகிய நான்கு அடிப்படைச் சுவைகளை நமக்கு உணர்த்துகின்றன. நாக்கைச் சுத்தமாக வைத்துக் கொள்ளத் தவறினால் பாக்டீரியா, வைரஸ், ‘கான்டிடா ஆல்பிகன்ஸ்’ எனும் பூஞ்சை போன்ற தொற்றுக் கிருமிகள் நாக்கைப் பாதிக்கும். அப்போது நாக்கில் புண்கள் வரும். நம்முடைய நாக்கின் நிறத்தை வைத்தே […]





