Other News

​இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி!

இலங்கை அணிக்கு எதிராக நாக்பூரில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில், 384 ரன்கள் பின் தங்கிய நிலையில் 4ம் நாள் ஆட்டத்தை இலங்கை அணி தொடங்கியது. ஆனால் இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதன் காரணமாக உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் 166 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் காரணமாக இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் […]

maithiri ranil

ஜனாதிபதியை விமர்சிக்க வேண்டாம்: பிரதமர் எச்சரிக்கை

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை விமர்சிப்பதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு ஐ.தே.க. பாராளுமன்றக் குழுவினரை பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார். குறிப்பாக, ஒருங்கிணைந்த அரசுக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையிலான கருத்துக்களைப் பகிர வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கான தமது உத்தியோகபூர்வ விஜயத்தின்போது, இலங்கையில் ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்புகள் குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்காலத்தில் தனது அனுமதியின்றி எந்தவொரு ஊடகவியலாளர் சந்திப்பையும் நடத்த வேண்டாம் என்றும் […]

பிக் பாஸ் ஜூலி பிரபல நடிகருடன் திருமணம் ?

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பிரபலமான ஜூலி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அங்கு அவர் சொன்ன ஒரு பொய் மக்கள் அவரை வெறுக்க காரணமாகிவிட்டது. நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியபிறகு ஜூலி சில விளம்பர படங்கள், டிவி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளார். இந்நிலையில் தற்போது நடிகர் விமலுடன் ஜூலி கழுத்தில் மாலையுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது. இது படத்தின் ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும் கூறப்படுகிறது.

திரு துரையப்பா செல்வரத்தினம்

திரு துரையப்பா செல்வரத்தினம் (மத்திய வங்கி ஊழியர், சேமலாப நிதிப்பிரிவு இளைப்பாறிய கண்காணிப்பாளர், மானிப்பாய் வேலக்கை பிள்ளையார் ஆலய 2ம் திருவிழா உபயகாரர்) மலர்வு : 20 யூன் 1931 — உதிர்வு : 26 நவம்பர் 2017 மலேசியா கோலாலம்பூரைப் பிறப்பிடமாகவும், யாழ். உரும்பிராய், மானிப்பாய், கொழும்பு வத்தளை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட துரையப்பா செல்வரத்தினம் அவர்கள் 26-11-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான துரையப்பா செல்லம்மா தம்பதிகளின் […]

7 நாளில் தொப்பையை குறைக்க!

தொப்பையை குறைக்க பலரும் பலவிதமான வழிகளை முயற்சித்திருப்பார்கள், ஆனால் தொப்பை குறைவது என்பதோ சந்தேகம் தான். அந்த வகையில் இந்த ஐந்து வழிமுறைகளை பின்பற்றினால் ஒரே வாரத்தில் தொப்பையை குறைக்கலாம். நிறைய தண்ணீர் பருகவும் தட்டையான வயிற்றை பெற முதலில் நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். தண்ணீர் அதிகளவு பருகுவது உடலுக்கு நன்மை தரும், உடலிலுள்ள நீர்ச்சத்து தேவையில்லாத கொழுப்புகளை கரைக்கும், வெறும் தண்ணீர் இல்லாமல் எலுமிச்சை, ஆரஞ்சு, வெள்ளரிக்காய்களை […]

இன்றைய ராசிபலன் 29.11.2017

மேஷம்: கணவன்-மனைவிக்குள் விவாதங்கள் வந்துபோகும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள். ரிஷபம்: பழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். பெற்றோரின் ஆதரவு கிட்டும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் பெரிய […]

அதிமுக, திமுகவிற்கு கமல்ஹாசன் சவாலாக இருப்பார்

நடிகர் கமல்ஹாசன் அரசியல் கட்சி தொடங்கினால் அவர் அதிமுக, திமுக கட்சிகளுக்கு பெரும் சவாலாக இருப்பார் என்பது ஒரு கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பிரபல தனியார் தொலைக்காட்சி ஒரு கருத்துக்கணிப்பை நடத்தியது. அதில் பல்வேறு கேள்விகளுக்கு பொதுமக்கள் பதில் அளித்தனர். அதில், கமல், ரஜினி, விஜய் மற்றும் மற்ற நடிகர்கள் கட்சி தொடங்கும் பட்சத்தில், இதில், அதிமுகவிற்கு சவாலாக இருக்கும் நடிகர் […]

தபால் மூல வாக்களிப்பு விண்ணப்ப காலம்

வேட்புமனு கோரப்பட்டுள்ள 93 உள்ளுராட்சி மன்றங்களுக்கு தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்கள் பொறுப்பேற்கும் பணி டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடைவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கான திகதி மீண்டும் நீடிக்கப்படமாட்டாது என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 7 மாநகர சபைகள் 18 நகர சபைகள் மற்றும் 68 பிரதேசசபைகள் அடங்கலாக மொத்தமாக 93 உள்ளுராட்சி மன்றங்களுக்கு தேர்தல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.