போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் கைதான இலங்கையர்கள் சிலர், கென்யாவில் இருந்து நாடுகடத்தப்பட்டுள்ளனர்.
அந்த நாட்டின் உள்துறை அமைச்சின் செயலாளர் ஃப்ரெட் மட்டியாங்கி இதனைத் தெரிவித்துள்ளார்.
பல்வேறு சந்தர்ப்பங்களில் போதைப் பொருள் கடத்தல்களில் ஈடுபடுத்தப்பட்டமைக்காக கைதான 30க்கும் அதிகமானவர்கள் நாடுகடத்தப்பட்டனர்.
அவர்களுள் இலங்கை, பாகிஸ்தான், அமெரிக்கா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களும் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.





