செரிமான பிரச்சனை இருந்தால், கொய்யா இலையின் டீயை குடித்தால், செரிமான நொதிகள் தூண்டப்பட்டு, செரிமானம் நடைபெறும். மேலும் கொய்யா இலை வயிற்றில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து, வயிற்றினை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். ஆண்கள் கொய்யா இலையை டீ போட்டு குடித்து வந்தால், விந்தணுவின் உற்பத்தி அதிகரிப்பதோடு, விந்தணுவின் தரமும் அதிகரிக்கும். குடி போதையில் உள்ளவர்களுக்கு போதையை உடனே முறிக்க கொய்யா இலையை உண்ண கொடுத்தால் உடனே வெறி இறங்கும் என்பார்கள். […]
Other News
இன்றைய ராசிபலன் 28.11.2017
மேஷம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் விவாதம் வேண்டாம். போராடி வெல்லும் நாள். ரிஷபம்: எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். மதிப்புக் கூடும் நாள். மிதுனம்: […]
இலங்கையை திணறடித்த அஸ்வின்
இலங்கை – இந்தியா அணிகள் இடையே நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய் அணி இன்னிங்ஸ் வெற்றிப்பெற்றது. இலங்கை – இந்தியா அணிகள் இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை அணி முதல் நாளிலே 205 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதைத்தொடர்ந்து விளையாடிய இந்திய அணி போட்டியின் மூன்றாவது நாளான நேற்று 6 விக்கெட் இழப்பிற்கு 610 ரன்கள் […]
நான் ஜெ.வின் மகள் என்பது ஓ.பிஎஸ்-ற்கு தெரியும் – அடுத்த குண்டு வீசும் அம்ருதா
தான் ஜெ.வின் மகள் என்பது துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு தெரியும் என பெங்களூரைச் சேர்ந்த அம்ருதா தெரிவித்துள்ளார். தன்னை மறைந்த ஜெயலலிதாவின் வாரிசாக அறிவிக்கும் படி பெங்களூரை சேர்ந்த அம்ருதா (30) உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. இந்நிலையில், இன்று செய்தியாளரிடம் பேசிய அம்ருதா ““நான் ஜெ.வின் மகள் என்பது கடந்த மார்ச் மாதம்தான் தெரியவந்தது. என் உயிருக்கு ஆபத்து […]
டிடிவி தினகரன் ஆதரவு எம்பி-க்கள் முதல்வருக்கு ஆதரவு? இரட்டை இலையால் புது திருப்பம்!!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக பல அணிகளாக பிரிந்ததால், இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்த சர்ச்சை எழுந்தது. இதுகுறித்து அனைத்து அணிகளும் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்த நிலையில் தேர்தல் ஆணையம் விசாரணைக்கு பிறகு இரட்டை இலை சின்னம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணிக்கே ஒதுக்கப்படுவதாக அறிவித்தது. இந்நிலையில், ஆர்கே.நகர் தேர்தலில் தினகரன் தொப்பி சின்னத்தில் போட்டிடுவார் என கூறப்படுகிறது. தினகரனும் எனது ஆதரவாளர்கள் […]
கோலி கூறியது சரிதான் இருந்தாலும்….. – சவாலை விரும்பும் தோனி
வெளிநாடுகளில் நடக்கும் போட்டிகளுக்கு பயிற்சி எடுக்க போதுமான கால அவகாசம் இல்லை என கோலி கூறியது சரிதான் இருந்தாலும் அது ஒரு கிரிக்கெட் வீரருக்கு சவால்தான் என தோனி கூறியுள்ளார். இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்த தொடர் முடிந்ததும் அடுத்த இரண்டு நாட்களில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 6 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. […]
யாழ். பல்கலை வவுனியா வளாக கல்விச் செயற்பாடுகள் இடைநிறுத்தம்
யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் காலவரையறையின்றி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாக முதல்வர் த.மங்களேஸ்வரன் தெரிவித்தார். பிரயோக விஞ்ஞான பீட மாணவர்களுக்கிடையில் நேற்றிரவு இடம்பெற்ற மோதலைத் தொடர்ந்து கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, நாளை காலை 8 மணிக்கு முன்னர் மாணவர்களை விடுதிகளில் இருந்து வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. மோதல் தொடர்பிலான விசாரணைகள் நாளை ஆரம்பிக்கப்படும் என யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாக முதல்வர் […]
பல்லாயிரம் உறவுகள் திரண்டு துயிலுமில்லங்களில் சுடரேற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி
தாயகத்தில் மாவீரர் துயிலுமில்லங்களில் உணர்வெழுச்சியுடன் இன்று மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டது. மாவீரர்களின் பெற்றோர்கள் மட்டுமன்றி விடுதலை வேட்கை கொண்ட பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு மாவீரச் செல்வங்களுக்கு மலர் தூவி சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர். தாயகத்தில் முக்கியமான துயிலுமில்லங்கள் அனைத்திலும் மாவீரர்களின் பெற்றோர் பொதுச்சுடரேற்றி வணக்கம் செலுத்தினர். முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லம் – பிரதான சுடரினை மேஜர் பசீலனின் தாயார் ஏற்றிவைத்தார். உடுத்துறை மாவீரர் துயிலுமில்லம் – பிரதான சுடரினை நான்கு […]
யாழில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சிறுவனின் மரணத்தில் மர்மம்
மானிப்பாய் சங்கம்வேலி பகுதியில் அமைந்துள்ள கிணற்றிலிருந்து சிறுவன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சடலம் நேற்றைய தினம் மீட்கப்பட்டதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். 3 வயதுடைய சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நீண்ட நேரமாக சிறுவனை காணாமல் தேடிக்கொண்டிருந்த பெற்றோர் கிணற்றை பரிசோதித்த போது சிறுவன் கிணற்றிற்குள் சடலமாக மிதப்பதனை கண்டறிந்துள்ளனர். இந்நிலையில், காவல் துறையினருக்கு அறிவித்ததன் பின்னர் சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. எனினும் குறித்த கிணற்றினை சுற்றி […]
ஆவா கும்பலின் மேலும் இரு உறுப்பினர்கள் கைது
குற்றச்செயல் ஒன்றிற்காக வாள் ஏந்தியவாறு மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆவா கும்பலின் இரு உறுப்பினர்கள் இன்று அதிகாலை சாவகச்சேரி பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்யும் வேளையில் குறித்த நபர்கள் வைத்திருந்த வாள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த சந்தேக நபர்கள் சாவகச்சேரி பகுதியை சேர்ந்த 21, 22 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் இன்று சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் […]





