தாயகமெங்கும் தமிழ் மக்கள் திரண்டெழுந்து மாவீரச் செல்வங்களுக்கு வீரவணக்கம் செலுத்த தயாராகியுள்ளனர். இராணுவத்தினரின் பிடியிலுள்ள மாவீரர் துயிலுமில்லங்கள் தவிர்ந்த ஏனைய துயிலுமில்லங்கள் அலங்கரிக்கப்பட்டு வீரவணக்கம் செலுத்துவதற்குத் தயாராகியுள்ளன. கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலுமில்லம் இரணைப்பாலை மாவீரர் துயிலுமில்லம் முள்ளிவாய்க்கால் மாவீரர் துயிலுமில்லம் சாட்டி மாவீரர் துயிலுமில்லம் கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம்
Other News
டக்ளஸ் தேவானந்தா தற்போது பாவமன்னிப்புக் கோரிவருகிறார்!
கடந்த அரசாங்கத் தரப்பினருடன் இணைந்து கொண்டு மக்களின் உணர்வுகளை மதிக்காது தேன்நிலவு கொண்டாடிய நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, தற்போது பாவமன்னிப்புக் கோரிவருவதாக வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். அவரின் பாவங்களை மன்னிக்க வேண்டுமா, இல்லையா? என்பது தொடர்பாக பொது மக்களே தீர்மானிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 63 ஆவது பிறந்த நாள் நிகழ்வு, வல்வெட்டித்துறையில் உள்ள […]
வாகன விபத்தில் இருவர் பலி
யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியின் சாவகச்சேரி பூனாவில் பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தொன்றில் இருவர் பலியாகியுள்ளனர். மோட்டார் சைக்கிள் ஒன்றும் பஸ் வண்டி ஒன்றும் மோதியதால் குறித்த விபத்து நிகழ்ந்துள்ளதாகவும் விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளதாகவும் சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களின் கவனயீனமே குறித்த விபத்துக்கு காரணம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை, சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பஸ் வண்டியின் சாரதி […]
ராஜபக்ஷக்கள் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்ற வாய்ப்பு- சரத்
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இரண்டாக பிளவுபடுவதனால் மகிழ்ச்சியடைய முடியாது. எதிரணியில் பலவீனமாக உள்ள நபர்கள் அடுத்த 10 ஆண்டுகளில் மீண்டும் ஆட்சியை பிடிக்க வாய்ப்புள்ளதாக ஐக்கிய தேசிய முன்னணியின் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். நாம் தனித்து ஆட்சியமைக்கும் வியூகங்களை வகுக்க வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். குருநாகல் பிரதேசத்தல் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
தமிழ்மக்கள் ஒன்றுபட்டு ஒன்றுமையினை வெளிக்காட்ட வேண்டிய காலம் வந்துவிட்டது-இரா.சம்பந்தன்
தமிழ்மக்கள் ஒன்றுபட்டு நின்று மீண்டும் ஒருமுறை தமது ஒற்றுமையினை வெளிக்காட்டவேண்டிய காலகட்டமாக இன்று உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். இந்த நாடு கடன்சுமையில் இருந்துவிடுபட்டு பொருளாதார ரீதியில் முன்னேற்றம்பெறவேண்டுமானல் இந்த நாட்டில் இனப்பிரச்சினை தீர்க்கப்படவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். மட்டக்களப்பில் அரசியல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு சனிக்கிழமை மாலை நடைபெற்றது. மட்டக்களப்பு தாண்டவன்வெளி, பேர்டினன்ட் மண்டபத்தில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு […]
கொட்டும் மழையின் மத்தியிலும் அலையெனத் திரண்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய யாழ் பல்கலை சமூகம்!!
யாழ். பல்கலைக்கழகத்தில் கொட்டும் மழைக்கு மத்தியிலும் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.மாவீரர்களின் எழுச்சி கீதங்கள் இசைக்க, பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள் இணைந்து மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள மாவீரர்களுக்கான நினைவிடத்தில் இந்த அஞ்சலி நிகழ்வுகள் இன்று காலை நடத்தப்பட்டுள்ளன. இதன்போது தமிழ் மக்களின் விடுதலைக்காக களமாடி உயிர் நீத்த மாவீரர்களுக்கு இரண்டு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக மாணவ, மாணவிகள், விரிவுரையாளர்கள், ஆசிரியர் சங்கத்தினர், ஊழியர்கள் எனப் […]
கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தின் முன்பாக மாவீரர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி!
யாழ். கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தின் முன்பாக தமிழீழ மாவீரர்களுக்கும், தேச விடுதலைப் போரில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் ஆகியோர் இன்று காலை குறித்த இடத்திற்கு சென்று சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர். கடுமையான பாதுகாப்புடன் இருக்கும் கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக இந்த அஞ்சலி நிகழ்வு இன்று காலை 11.40 மணிக்கு நடைபெற்றுள்ளது.இதன்போது கோப்பாய் […]
போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களால் தொழில் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது!
வட மகாண சபையின் 2017 ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் இருந்து மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல் அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களால், போரினால் பாதிக்கப்பட்ட பெண்தலைமைத்துவ குடும்பங்கள் உள்ளிட்ட 9 பயனாளிகளுக்கான வாழ்வாதார உதவியாக 3.5 லட்சம் ரூபா பெறுமதியான தொழில் உபகரனங்கள் வழங்கப்பட்டுள்ளது. வட மாகாண தொழிற்துறைத் திணைக்களத்தின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட தொழில் உபகரனங்கள் வழங்கும் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் மகளிர் விவகார […]
சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்டவராக தலைவர் பிரபாகரன் மட்டுமே இருந்தார்!
பிரபாகரன் அவர்களை ஒரு ஆயுதப் போராட்டத் தலைவராகவே வெளியுலகம் அறிந்து வைத்திருக்கிறது. அவரைப்பற்றி அறியப்படாத பல பக்கங்கள் உள்ளன. அதில் சுற்றுச்சூழல் குறித்த அவரது அக்கறையும் ஒன்று. உலக சூழல்தினத்துக்காகத் தங்கள் மாணவர் தினத்தையே மாற்றி அமைத்தவர் அவர். நான் அறிந்த ஆயுதப் போராட்டத் தலைமைகளில் சுற்றுச்சூழல் மீது இப்படி அக்கறை கொண்ட ஒரு தலைவராகப் பிரபாகரன் மட்டுமே இருந்தார் என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் முன்னாள் விவசாய […]
யேர்மன் தலைநகரில் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் அகவை 63 நிகழ்வு.
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் அகவை 63 தாயகத்திலும், தமிழகத்திலும், புலம்பெயர் தேசமெங்கிலும் எழுச்சியாக கொண்டாடப்படுகின்றது. அந்தவகையில் யேர்மன் தலைநகரில் வரலாற்றுமிக்க சதுக்கத்தில் ( Brandenburger Tor முன்பாக ) தமிழ் இளையோர்கள் , தமிழின உணர்வாளர்கள் கேக்(குதப்பி) வெட்டியும், மற்றவர்களுடன் வாழ்த்துக்களையும், இனிப்புக்களையும் பகிர்ந்து தமது மகிழ்ச்சியை ஆரவாரமாகக் கொண்டாடினர். தமிழீழத் தேசியத் தலைவரின் அகவை 63 எழுச்சியாகவும், எளிமையாகவும் கொண்டாடப்பட்டதுடன் நிகழ்வில் தமிழீழத் […]





