உலகின் குறைந்த விலையில் கொள்வனவு செய்யக்கூடிய கார் கருதப்படும் நேனோ கார் வாகனங்களின் அடுத்த தயாரிப்பாக மின்சார நேனோ கார் இந்திய சந்தைக்கு இன்று அறிமுகப்படுத்திவைக்கப்பட்டது. இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் ஹதராபாத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போது குறித்த கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய அரசின் சிறப்பு தீர்மானத்தின் படி எதிர்வரும் 2030ம் ஆண்டளவில் எரிபொருளில் இயங்கும் அனைத்து வாகனங்களையும் மின்சார வாகனங்களாக மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த […]
Other News
குழப்பமான காலநிலை தொடரும்
காலி தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பிரதேசங்களில் மழையுடன் கடும் காற்று வீசக்கூடும் எனவும் குறித்த சந்தர்ப்பத்தில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் எனவும் வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. குறித்த சந்தர்ப்பத்தில் நாட்டை சுற்றியுள்ள கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் மணிக்கு 70முதல் 80 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என அந்த நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் , கிழக்கு , ஊவா , வடக்கு […]
யாழில் போதை பொருள் பாவனை அதிகரிப்பு : இருவர் கைது.!
யாழ். பஸ் நிலைய பகுதியில் சட்டவிரோதமாக குடு வகை போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட இருவரை பிராந்திய பொலிஸ்மா அதிபரின் கீழான போதைப் பொருள் தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த பொலிஸ் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே இன்றைய தினம் நண்பகல் இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். முச்சக்கரவண்டி ஒன்றில் இருந்து குறித்த போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டபோதே இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தார்கள். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 60 […]
ஜெ.விற்கு பெண் குழந்தை பிறந்தது உண்மைதான் – ஜெ.வின் அத்தை மகள் லலிதா பகீர் பேட்டி
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது உண்மைதான் எனவும், அது அமிருதாவாக இருக்க வாய்ப்பிருக்கிறது எனவும் ஜெ.வின் அத்தை மகள் லலிதா அளித்துள்ள பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரை சேர்ந்த அம்ருதா என்ற பெண், ஜெ.வின் மகளாக தன்னை அறிவிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அவரை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் முறையிடுமாறு வலியுறுத்தி, அவரின் மனுவை தள்ளுபடி செய்துவிட்டது. […]
விபத்தில் சிக்கிய ஆறுபிள்ளைகளின் தாய் பரிதாப மரணம்! மட்டக்களப்பில் சம்பவம்!
மட்டக்களப்பு ஓட்டமாவடி பாலத்துக்கு அருகாமையில் இன்று மதியம் 1.15 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். தியாவட்டவான் மையவாடி வீதியில் வசிக்கும் ஆறு பிள்ளைகளின் தயாரான றலீனா (வயது 35) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சுகயீனம் காரணமாக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் இருந்து மருந்து பெற்றுக்கொண்டு தனது வசிப்பிடமான தியாவட்டவான் பிரதேசத்தை நோக்கி, கணவருடன் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போதே, இவர் விபத்தக்கு உள்ளாகியுள்ளார். காத்தான்குடியில் இருந்து பொலனறுவைக்கு கொண்டு […]
த. கூட்டமைப்பு விடுதலைப்புலிகளால் உருவாக்கப்படவில்லை என்கிறார் வரதராஜப் பெருமாள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தமிழீழ விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்டது என்பது தவறான கருத்து, தங்களது முயற்சியால் உருவானது என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் பலதடவைகள் சொல்லியிருக்கின்றார். என்று வரதராஜப் பெருமாள் தெரிவித்துள்ளார். வரதராஜப் பெருமாள் தலைமையிலான குழுவினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைவது தொடர்பாக செய்திகள் வெளிவந்த நிலையில் அரசாங்கத் தமிழ் பத்திரிகைக்கு வரதராஜப்பெருமாள் அவர்கள் வழங்கிய செவ்வி ஒன்றிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். ஈபிஆர்எல்எவ் பிளவு தொடர்பாக கருத்துத் […]
ஆசிரியர் திட்டியதால் 12ம் வகுப்பு மாணவன் தற்கொலை – கோவையில் அதிர்ச்சி
ஆசிரியர் திட்டி காரணத்தில் அரக்கோணத்தை சேர்ந்த 4 பள்ளி மாணவிகள் சமீபத்தில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுத்த கலெக்டர் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுத்துள்ளார். இந்நிலையில், கோவை மாவட்டம் சோமனூரில் 12ம் வகுப்பு படித்து வரும் அருள்செல்வன் என்ற மாணவரை, வேதியியல் ஆசிரியை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அவமானம் அடைந்த அருள்செல்வன், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, அவரின் […]
கொழும்பை சுற்றிவளைப்போம்!
மஹிந்த ராஜபக்ஷவுடன் ஒட்டிக்கொண்டு தமது இருப்பை தக்கவைக்கும் முயற்சிகளையே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுத்து வருகின்றார். தேர்தலை பிற்போடுவதன் முழுப்பொறுப்பையும் ஜனாதிபதியே ஏற்றுகொள்ள வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக தெரிவித்தார். இந்த வாரத்தினுள் தேர்தல் குறித்து அரசாங்கம் மௌனம் கலைக்காவிட்டால் நாடு பூராகவும் மக்களை ஒன்றுதிரட்டி கொழும்பை சுற்றிவளைப்போம் எனவும் அவர் குறிப்பிட்டார். மக்கள் விடுதலை முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு இன்று கட்சி அலுவலகத்தில் […]
ஒப்பந்தத்தை மறுத்தமையே இந்தியாவுடனான போருக்கு காரணம்!- த ஹிந்து
1987 ம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் மறுத்தமை இந்தியாவிற்கும் புலிகளுக்கும் இடையிலான ஒரு போருக்கு வழிவகுத்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் அப்போதைய தமிழக முதலமைச்சர் எம்.ஜி. ராமச்சந்திரன் பிரபாகரனுக்கு உறுதியான ஆதரவு வழங்கியதாக ஆயுதக் குழு கூறியிருந்தது. சென்னை வி.ஓ.சி. நூலகத்தினால் விடுதலைப் புலிகளுடன் சம்பந்தப்பட்ட பல ஆவணங்கள் மற்றும் பிரகாகரனின் வரலாறு அடங்கிய புத்தகம் ஒன்று விரைவில் வௌியிடப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக திரட்டப்பட்ட ஆவணங்களில் […]
கோட்டாபய குற்றம் செய்யவில்லை சொல்கிறார் சரத் அமுணுகம
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் எந்தவொரு நிதி மோசடியுடனும் தொடர்புடையவர் அல்ல என, அமைச்சர் சரத் அமுணுகம தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். முன்னாள் பாதுகாப்புச் செயலாளரைக் கைதுசெய்யத் தயாராகி வருவதாக நாட்டில் வதந்திகள் பரவிவருவதாக குறிப்பிட்ட அவர் அதுபோன்ற எந்தவொரு நடவடிக்கையும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், கோட்டாபய ராஜபக்ஷவைக் கைதுசெய்ய எந்தவொரு காரணமும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.





