தபால் மூல வாக்களிப்பு விண்ணப்ப காலம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

வேட்புமனு கோரப்பட்டுள்ள 93 உள்ளுராட்சி மன்றங்களுக்கு தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்கள் பொறுப்பேற்கும் பணி டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடைவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கான திகதி மீண்டும் நீடிக்கப்படமாட்டாது என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

7 மாநகர சபைகள் 18 நகர சபைகள் மற்றும் 68 பிரதேசசபைகள் அடங்கலாக மொத்தமாக 93 உள்ளுராட்சி மன்றங்களுக்கு தேர்தல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *