முக்கிய செய்திகள்

Head News

வேட்பாளர்கள் தொடர்பில் வெளிப்படைத் தன்மை வேண்டும்

எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலின் பொருட்டு கட்சிகள் தமது வேட்பாளர்களை எவ்வாறு தெரிவு செய்கின்றன என்பது குறித்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என தேர்தல்களை கண்காணிக்கும் அமைப்பான பெப்ரல் (PAFFREL) கோரிக்கை விடுத்துள்ளது கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் வைத்து அமைப்பின் நிறைவேற்று அதிகாரி ரோஹன ஹெட்டியாராச்சி இதனைக் குறிப்பிட்டுள்ளார். கட்சி ஒன்று பொருத்தமற்ற வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்யுமாயின் அது தொடர்பில் நாட்டுக்கு தெரியப்படுத்த தாம் தயார் […]

இலங்கையர் சிலர், கென்யாவால் நாடுகடத்தல்

போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் கைதான இலங்கையர்கள் சிலர், கென்யாவில் இருந்து நாடுகடத்தப்பட்டுள்ளனர். அந்த நாட்டின் உள்துறை அமைச்சின் செயலாளர் ஃப்ரெட் மட்டியாங்கி இதனைத் தெரிவித்துள்ளார். பல்வேறு சந்தர்ப்பங்களில் போதைப் பொருள் கடத்தல்களில் ஈடுபடுத்தப்பட்டமைக்காக கைதான 30க்கும் அதிகமானவர்கள் நாடுகடத்தப்பட்டனர். அவர்களுள் இலங்கை, பாகிஸ்தான், அமெரிக்கா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களும் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல்லாயிரம் உறவுகள் திரண்டு துயிலுமில்லங்களில் சுடரேற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி

தாயகத்தில் மாவீரர் துயிலுமில்லங்களில் உணர்வெழுச்சியுடன் இன்று மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டது. மாவீரர்களின் பெற்றோர்கள் மட்டுமன்றி விடுதலை வேட்கை கொண்ட பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு மாவீரச் செல்வங்களுக்கு மலர் தூவி சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர். தாயகத்தில் முக்கியமான துயிலுமில்லங்கள் அனைத்திலும் மாவீரர்களின் பெற்றோர் பொதுச்சுடரேற்றி வணக்கம் செலுத்தினர். முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லம் – பிரதான சுடரினை மேஜர் பசீலனின் தாயார் ஏற்றிவைத்தார். உடுத்துறை மாவீரர் துயிலுமில்லம் – பிரதான சுடரினை நான்கு […]

வீரவணக்கத்துக்கு தயாராகியுள்ள மாவீரர் துயிலுமில்லங்கள்

தாயகமெங்கும் தமிழ் மக்கள் திரண்டெழுந்து மாவீரச் செல்வங்களுக்கு வீரவணக்கம் செலுத்த தயாராகியுள்ளனர். இராணுவத்தினரின் பிடியிலுள்ள மாவீரர் துயிலுமில்லங்கள் தவிர்ந்த ஏனைய துயிலுமில்லங்கள் அலங்கரிக்கப்பட்டு வீரவணக்கம் செலுத்துவதற்குத் தயாராகியுள்ளன. கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலுமில்லம் இரணைப்பாலை மாவீரர் துயிலுமில்லம் முள்ளிவாய்க்கால் மாவீரர் துயிலுமில்லம் சாட்டி மாவீரர் துயிலுமில்லம் கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம்

கொட்டும் மழையின் மத்தியிலும் அலையெனத் திரண்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய யாழ் பல்கலை சமூகம்!!

யாழ். பல்கலைக்கழகத்தில் கொட்டும் மழைக்கு மத்தியிலும் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.மாவீரர்களின் எழுச்சி கீதங்கள் இசைக்க, பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள் இணைந்து மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள மாவீரர்களுக்கான நினைவிடத்தில் இந்த அஞ்சலி நிகழ்வுகள் இன்று காலை நடத்தப்பட்டுள்ளன. இதன்போது தமிழ் மக்களின் விடுதலைக்காக களமாடி உயிர் நீத்த மாவீரர்களுக்கு இரண்டு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக மாணவ, மாணவிகள், விரிவுரையாளர்கள், ஆசிரியர் சங்கத்தினர், ஊழியர்கள் எனப் […]

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தின் முன்பாக மாவீரர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி!

யாழ். கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தின் முன்பாக தமிழீழ மாவீரர்களுக்கும், தேச விடுதலைப் போரில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் ஆகியோர் இன்று காலை குறித்த இடத்திற்கு சென்று சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர். கடுமையான பாதுகாப்புடன் இருக்கும் கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக இந்த அஞ்சலி நிகழ்வு இன்று காலை 11.40 மணிக்கு நடைபெற்றுள்ளது.இதன்போது கோப்பாய் […]

சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்டவராக தலைவர் பிரபாகரன் மட்டுமே இருந்தார்!

பிரபாகரன் அவர்களை ஒரு ஆயுதப் போராட்டத் தலைவராகவே வெளியுலகம் அறிந்து வைத்திருக்கிறது. அவரைப்பற்றி அறியப்படாத பல பக்கங்கள் உள்ளன. அதில் சுற்றுச்சூழல் குறித்த அவரது அக்கறையும் ஒன்று. உலக சூழல்தினத்துக்காகத் தங்கள் மாணவர் தினத்தையே மாற்றி அமைத்தவர் அவர். நான் அறிந்த ஆயுதப் போராட்டத் தலைமைகளில் சுற்றுச்சூழல் மீது இப்படி அக்கறை கொண்ட ஒரு தலைவராகப் பிரபாகரன் மட்டுமே இருந்தார் என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் முன்னாள் விவசாய […]

யேர்மன் தலைநகரில் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் அகவை 63 நிகழ்வு.

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் அகவை 63 தாயகத்திலும், தமிழகத்திலும், புலம்பெயர் தேசமெங்கிலும் எழுச்சியாக கொண்டாடப்படுகின்றது. அந்தவகையில் யேர்மன் தலைநகரில் வரலாற்றுமிக்க சதுக்கத்தில் ( Brandenburger Tor முன்பாக ) தமிழ் இளையோர்கள் , தமிழின உணர்வாளர்கள் கேக்(குதப்பி) வெட்டியும், மற்றவர்களுடன் வாழ்த்துக்களையும், இனிப்புக்களையும் பகிர்ந்து தமது மகிழ்ச்சியை ஆரவாரமாகக் கொண்டாடினர். தமிழீழத் தேசியத் தலைவரின் அகவை 63 எழுச்சியாகவும், எளிமையாகவும் கொண்டாடப்பட்டதுடன் நிகழ்வில் தமிழீழத் […]

சம்பந்தனைவிட தானே தமிழ்மக்களின் சேவகன் என்கிறார் கோட்டபாய!

தற்போதைய எதிரக்கட்சித் தலைவரிலும் பார்க்க தாம் தமிழ் மக்களுக்கு சேவையாற்றியுள்ளதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார். எளிய என்ற அமைப்பு இனவாத அமைப்பென அண்மையில் எதிரக்கட்சித் தலைவர் சம்பந்தன் கருத்து வெளியிட்டிருந்தார். அவர் நேர்மையான மற்றும் அனுபவம் வாய்ந்த அரசியல்வாதியாக அறியப்படுபவர். கடந்த காலத்தில் இடம்பெற்ற பிரிவினைவாத யுத்த சூழல் காரணமாக அவரால் தமிழ் மக்களுக்கென எதனையும் […]

பாலி தீவு அகங் எரிமலை குமுறல் 50 விமான சேவைகள் இரத்து

பாலி தீவிலுள்ள அகங் எரிமலைக் குமுறல் காரணமாக 50 விமான சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. இந்தோனேசியாவின் பாலி தீவிலுள்ள அகங் எரிமலைக் குமுறல் காரணமாக அபாய வலையம் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. கடந்த 22 ஆம் திகதி குறித்த எரிமலையிலிருந்து புகை வெளியேற ஆரம்பித்தது. அதைத் தொடர்ந்து எரிமலையைச் சுற்றியுள்ள பகுதிகளிலுள்ள 150,000 பேர் வெளியேற்றப்பட்டனர். தற்போது எரிமலை எந்த நேரமும் வெடிக்கும் அபாயம் காணப்படுவதாகவும் அபாய வலையம் விஸ்தரிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நாட்டு […]