முக்கிய செய்திகள்

Head News

ஐரோப்பா மிரட்டினால் ராக்கெட் வீச்சின் எல்லை அதிகரிக்கப்படும்

ஈரான் நாட்டில் தயாரிக்கப்படும் ராக்கெட் வீச்சின் எல்லை 2 ஆயிரம் கி.மீட்டருக்குள் உள்ளது. இதனால் 2 ஆயிரம் கி.மீட்டருக்கு உட்பட்ட பகுதிகளை தாக்கி அழிக்கும் வகையில் இந்த வகை ராக்கெட்டுகள் உள்ளன. இந்த நிலையில், ஈரானின் புரட்சி பாதுகாப்பு படையின் துணை தலைவரான சலாமி செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, எங்கள் ராக்கெட்டுகளின் வீச்சின் எல்லை 2 ஆயிரம் கி.மீட்டருக்குள் உள்ளது என்றால் அது தொழில்நுட்ப பற்றாக்குறையினால் அல்ல. நாங்கள் ராணுவ கொள்கையினை […]

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும்

ஆர்.கே. நகர் தொகுதியில் டிசம்பர் 21ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக இரட்டை இலை சின்னம் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி தேர்தல் ஆணையத்தில் முதல் அமைச்சர் பழனிசாமி தலைமையிலான அணியினர் கோரியிருந்தனர். இந்நிலையில், முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அடங்கிய ஒருங்கிணைந்த அ.தி.மு.க. அணிக்கு […]

திடீர் சிங்கப்பூர் பயணம் ஏன்?

ஆர்.கே.நகர் தேர்தல் வரும் டிசம்பர் 21ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்த நிமிடத்தில் இருந்து தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் வேட்பாளர் தேர்வு உள்பட பல வியூகங்களை அமைத்து வருகிறது. இந்த நிலையில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் திடீரென சிங்கப்பூர் செல்லவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியில்லை என தேமுதிக ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில் விஜயகாந்த் சிங்கப்பூர் செல்லவிருப்பதால் அவர் யாருக்கும் ஆதரவு தரமாட்டார் […]

இயற்கை சீற்றங்கள் ஏற்படுவது ஏன்? எச்.ராஜாவின் கண்டுபிடிப்பு

தமிழகம் அவ்வப்போது கனமழை, வெள்ளம் புயல் போன்ற இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் விஞ்ஞானிகள் இந்த இயற்கை சீற்றங்களுக்கு காற்றழுத்த தாழ்வு நிலையே காரணம் என்று கூறுகின்றனர். ஆனால் பாஜக தேசிய கட்சி செயலாளர் இதுகுறித்து கூறியபோது, கோவில்களில் உள்ள பகவானை பட்டினி போடுவதாலேயே இயற்கை சீற்றங்கள் ஏற்படுவதாகவும், தமிழக அரசு, கோயில்களை முறையாக பராமரிக்க வேண்டும்’ என்றும் கூறியுள்ளார். மேலும் தமிழகத்தில் இந்து மதத்தை அழிப்பதே திராவிட […]

இன்றைய ராசிபலன் 26.11.2017

மேஷம்: நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உடன் பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளும் நாள். ரிஷபம்: மாறுபட்ட அணுகு முறையால் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். […]

தமிழீழ தேசியத் தலைவரின் 63ஆவது பிறந்த நாள் இன்று!

தமிழீழ தேசியத் தலைவரின் 63ஆவது பிறந்த நாள் (26.11.2017) இன்று! வரலாற்றின் ஓர் உண்மை மனிதனாக, ஒரு விடுதலைப் போராளியாக அடிமைப்பட்டுப்போன ஓர் இனத்தின் மீட்பராக, ஓரு சமூகத்தின் அரசியல் வழிகாட்டியாக, விடுதலையின் ஒரு குறியீடாக, தமிழினச் சின்னமாக, உலகத் தமிழ் இனத்தின் ஒரு வரலாற்று நாயகனான எங்கள் ,தமிழீழ தேசம் பெற்றெடுத்த தவப் புதல்வன் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 63 வது அகவை […]

எழுச்சி பெற்று வரும் தேராவில் துயிலுமில்லம் உறவுகளுக்கு பகிரங்க அழைப்பு

விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து வீரகாவியமான மாவீரர்களுக்கு உணர்வு பூர்வ அஞ்சலி செலுத்தும் மாவீரர் நாளான கார்த்திகை மாதம் இருபத்தேழாம் திகதி அஞ்சலி நிகழ்வுகளுக்காக முல்லைத்தீவு விஸ்வமடு தேராவில் மாவீரர் துயிலுமில்லம் புத்துணர்வு பெற்று வருகிறது. யுத்தத்தின் பின்னர் மக்கள் மீள்குடியேறிய காலத்தில் தேராவில் துயிலுமில்லம் இராணுவத்தால் சுபீகரிக்கப்பட்ட நிலையில் துயிலுமில்லத்தில் குறித்த ஒரு பகுதி இராணுவ முகாமுக்கு வெளியில் காணப்பட்டது. இந்நிலையில் குறித்த பகுதியை மாவீரர்களின் பெற்றோர் உறவுகள் இளைஞர்கள் என […]

கட்சியின் பெயரையும், கொள்கையையும் விரைவில் வெளியிடுவேன்

என்னுடைய அரசியல் கட்சியின் பெயரையும், கொள்கையையும் விரைவில் வெளியிடுவேன். பாஜக, காங்கிரசுடன் கொள்கை ரீதியான கூட்டணி வைக்கமாட்டேன், தமிழகத்தின் நலன் கருதி கூட்டணி வைக்கலாம். அரசியலுக்கு வரும் தைரியம் எனக்கு இருக்கிறது, தோல்வி பயம் இல்லை. தமிழக அரசியலில் என்னை முன்னிறுத்தாமல் மாற்றத்தை முன்னிறுத்துகிறேன், மாற்றத்தை விரும்புகிறவர்கள் என்னை ஆதரிப்பார்கள்.

எகிப்து மசூதியில் குண்டு வெடிப்பு பலி எண்ணிக்கை 305 ஆக உயர்வு

எகிப்து நாட்டின் வடக்கு சினாய் மாகாணத்தில் உள்ள பிர் அல்-அபெட் நகரில் உள்ள மசூதி ஒன்றில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை 305 ஆக அதிகரித்து உள்ளது. எங்கள் ‘முழு பலத்தை’ பயன்படுத்தி இத்தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கப்படும் என அந்நாட்டு அதிபர் அப்துல் பட்டா அல்-சிசி உறுதியாகக் கூறியுள்ளார். சினாய் மாகாணத்தில் உள்ள ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய இஸ்லாமிய கிளர்ச்சி குழுவுடன் பல ஆண்டுகளாக எதிப்தின் […]

காலியாகும் தினகரன் கூடாரம்

பதவி பறிப்பு, இரட்டை இலை விவகாரம் ஆகியவற்றால் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியுடன் இணையும் முடிவிற்கு வந்து விட்டதாக கூறப்படுகிறது. துணை முதல்வர் ஓபிஎஸ் தர்ம யுத்தம் நடத்திக்கொண்டிருந்த போது, இவர் எப்படியும் எடப்பாடி அணியில் இணைய மாட்டார் எனக் கணக்குப் போட்ட தினகரன். எனவே, எடப்பாடி அணியில் இருந்து 18 எம்.எல்.ஏக்களை பிரித்து தனக்கென ஒரு அணியை உருவாக்கினார். எடப்பாடியை முதல்வர் பதவியிலிருந்து நீக்க […]