முக்கிய செய்திகள்

Head News

மகள் பற்றி நான் கேட்ட போது ஜெ. பொங்கி எழுந்தார்

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ஒரு மகள் இருக்கிறார் என நெடுங்காலமாக பேச்சு அடிபட்டு வருகிறது. ஆனால், அது உண்மைதான் என இதுவரை யாரும் நிரூபிக்கவில்லை. சமீபத்தில் கூட பெங்களூரை சேர்ந்த அம்ருதா என்ற பெண், தன்னை ஜெ.வின் மகளாக அறிவிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். மேலும், அடுக்கடுக்காக அவர் கூறியுள்ள ஆதாரங்கள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரின் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், அவரை […]

இராணுவத்தையோ தேசிய பாதுகாப்பையோ பலவீனப்படுத்தமாட்டேன்

தேச துரோகியாவதற்கு தான் ஜனாதிபதியாக நியமிக்கப்படவில்லை என தென் கொரியாவில் வசிக்கும் இலங்கை பிரஜைகளை சந்தித்து கலந்துரையாடும் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சமஷ்ட்டி அதிகாரத்தை பெற்றுக்கொடுப்பதற்கோ அல்லது நாட்டை பிளவுப்படுத்துவதற்கான அதிகாரத்தை பகிர்ந்தளிப்பதற்கோ தாம் தயார் இல்லை எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் இராணுவத்தையோ தேசிய பாதுகாப்பையோ பலவீனப்படுத்தும் நோக்கில் நாட்டைப் பொறுப்பேற்கவில்லை நாட்டில் நிலவிய மோசமான நிலையை மாற்றுவதற்கே தான் ஜனாதிபதியாக நியமனம் பெற்றதாக அவர் […]

அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகளை செயற்படுத்துமாறு வலியுறுத்தல்

அரசாங்கம் சர்வதேசத்திடம் வழங்கிய உறுதிமொழிகளை செயன்முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் இதனைத் தெரிவித்துள்ளது. 2015ம் ஆண்டு ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் பரிந்துரைகள் பல இன்னும் அமுலாக்கப்படவில்லை. இறுதியாக ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் பேரவையின் பருவகால மனித உரிமைகள் ஆய்வுக் கூட்டத்தொடரில் வைத்து அரசாங்கம் குறித்த பரிந்துரைகளை அமுலாக்க நடவடிக்கை எடுப்பதாக கூறியது. ஆனால் காணாமல் போனோர் […]

maithiri ranil

ஜனாதிபதியை விமர்சிக்க வேண்டாம்: பிரதமர் எச்சரிக்கை

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை விமர்சிப்பதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு ஐ.தே.க. பாராளுமன்றக் குழுவினரை பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார். குறிப்பாக, ஒருங்கிணைந்த அரசுக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையிலான கருத்துக்களைப் பகிர வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கான தமது உத்தியோகபூர்வ விஜயத்தின்போது, இலங்கையில் ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்புகள் குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்காலத்தில் தனது அனுமதியின்றி எந்தவொரு ஊடகவியலாளர் சந்திப்பையும் நடத்த வேண்டாம் என்றும் […]

அதிமுக, திமுகவிற்கு கமல்ஹாசன் சவாலாக இருப்பார்

நடிகர் கமல்ஹாசன் அரசியல் கட்சி தொடங்கினால் அவர் அதிமுக, திமுக கட்சிகளுக்கு பெரும் சவாலாக இருப்பார் என்பது ஒரு கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பிரபல தனியார் தொலைக்காட்சி ஒரு கருத்துக்கணிப்பை நடத்தியது. அதில் பல்வேறு கேள்விகளுக்கு பொதுமக்கள் பதில் அளித்தனர். அதில், கமல், ரஜினி, விஜய் மற்றும் மற்ற நடிகர்கள் கட்சி தொடங்கும் பட்சத்தில், இதில், அதிமுகவிற்கு சவாலாக இருக்கும் நடிகர் […]

ஜெ.விற்கு பெண் குழந்தை பிறந்தது உண்மைதான் – ஜெ.வின் அத்தை மகள் லலிதா பகீர் பேட்டி

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது உண்மைதான் எனவும், அது அமிருதாவாக இருக்க வாய்ப்பிருக்கிறது எனவும் ஜெ.வின் அத்தை மகள் லலிதா அளித்துள்ள பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரை சேர்ந்த அம்ருதா என்ற பெண், ஜெ.வின் மகளாக தன்னை அறிவிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அவரை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் முறையிடுமாறு வலியுறுத்தி, அவரின் மனுவை தள்ளுபடி செய்துவிட்டது. […]

த. கூட்டமைப்பு விடுதலைப்புலிகளால் உருவாக்கப்படவில்லை என்கிறார் வரதராஜப் பெருமாள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தமிழீழ விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்டது என்பது தவறான கருத்து, தங்களது முயற்சியால் உருவானது என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் பலதடவைகள் சொல்லியிருக்கின்றார். என்று வரதராஜப் பெருமாள் தெரிவித்துள்ளார். வரதராஜப் பெருமாள் தலைமையிலான குழுவினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைவது தொடர்பாக செய்திகள் வெளிவந்த நிலையில் அரசாங்கத் தமிழ் பத்திரிகைக்கு வரதராஜப்பெருமாள் அவர்கள் வழங்கிய செவ்வி ஒன்றிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். ஈபிஆர்எல்எவ் பிளவு தொடர்பாக கருத்துத் […]

லசந்த, தாஜுதீன் கொலை வழக்கு

கொழும்பை சுற்றிவளைப்போம்!

மஹிந்த ராஜபக்ஷவுடன் ஒட்டிக்கொண்டு தமது இருப்பை தக்கவைக்கும் முயற்சிகளையே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுத்து வருகின்றார். தேர்தலை பிற்போடுவதன் முழுப்பொறுப்பையும் ஜனாதிபதியே ஏற்றுகொள்ள வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக தெரிவித்தார். இந்த வாரத்தினுள் தேர்தல் குறித்து அரசாங்கம் மௌனம் கலைக்காவிட்டால் நாடு பூராகவும் மக்களை ஒன்றுதிரட்டி கொழும்பை சுற்றிவளைப்போம் எனவும் அவர் குறிப்பிட்டார். மக்கள் விடுதலை முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு இன்று கட்சி அலுவலகத்தில் […]

இரகசிய இராணுவக் கொலைக் குழுவை

கோட்டாபய குற்றம் செய்யவில்லை சொல்கிறார் சரத் அமுணுகம

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் எந்தவொரு நிதி மோசடியுடனும் தொடர்புடையவர் அல்ல என, அமைச்சர் சரத் அமுணுகம தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். முன்னாள் பாதுகாப்புச் செயலாளரைக் கைதுசெய்யத் தயாராகி வருவதாக நாட்டில் வதந்திகள் பரவிவருவதாக குறிப்பிட்ட அவர் அதுபோன்ற எந்தவொரு நடவடிக்கையும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், கோட்டாபய ராஜபக்ஷவைக் கைதுசெய்ய எந்தவொரு காரணமும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தென்கொரியா சென்றடைந்தார் மைத்திரி

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை தென்கொரியாவின் தலைநகர் சியோல் நகரை சென்றடைந்தார். தென்கொரியா நாட்டு ஜனாதிபதி மூன்ஜேனின் அழைப்பை ஏற்று மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதியை அந்நாட்டு உதவி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் Cho Hyun தலைமையில் இன்சிஜோன் சர்வதேச விமானநிலையத்தில் ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு வழங்கப்பட்டது. ஜனாதிபதிக்கு உத்தியோகபூர்வ வரவேற்பு இன்று இடம்பெறவுள்ளது. இதனை தொடர்ந்து இரு நாட்டு தலைவர்களுக்கும் இடையில் இருதரப்பு […]