நல்லிணக்கம் நல்லாட்சி என்பது தமிழர்களைப் பொறுத்தளவில் பெயரளவில்தான் உள்ளதென்று, உலக மீனவர் தினத்தை முன்னிட்டு மன்னாரில் நடைபெற்ற நிகழ்வில் வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசுகையில் குற்றம் சாட்டியுள்ளார். சமூகப் பொருளாதார மற்றும் கலாச்சார உரிமைகளை அடிப்படை மனித உரிமையாகப் புதிய யாப்பில் உறுதிப்படுத்துவோம் என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்ட 21 ஆவது உலக மீனவர் தின நிகழ்வுகள் மன்னார் நகர […]
முக்கிய செய்திகள்
Head News
மாவீரர் தினத்தை அனுஸ்டித்தவர்கள் கைதுசெய்யப்படமாட்டார்கள்!
மாவீரர் தினத்தை அனுஸ்டித்தவர்கள் கைதுசெய்யப்படுவர் என அரசு அறிவித்துள்ள போதும், அவ்வாறு கைதுசெய்யப்படமாட்டார்கள் என தான் நம்புவதாக வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்று யாழில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், ‘மாவீரர் தினத்தை அனுஷ்டித்தவர்கள் கைதுசெய்யப்படுவர் என அரசு தெரிவித்தாலும்,அவர்களால் இதற்கு எதிராக எதுவும் செய்ய முடியாது என்று நாம் நம்புகிறோம் ஏனெனில் இவ்வாறான அனுஷ்டானங்களுக்கு அரசே இடமளித்துள்ளதாகவும், அவர் […]
முப்படையினரின் உதவியை பெற்றுக்கொள்ளுமாறு கொரியாவில் இருந்து ஜனாதிபதி பணிப்பு
நாட்டில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகளை முன்னெடுக்க முப்படையினரின் உதவியை பெற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தென்கொரியாவில் இருந்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். தென் கொரியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி, தொலைபேசியூடாக மேற்கண்டவாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
போர் வெடித்தால் வட கொரியாவின் ஆட்சி முழுமையாக அழிக்கப்படும்
உலக நாடுகளின் எதிர்ப்பு, தொடர் பொருளாதார தடைகள் என எதையும் பொருட்படுத்தாமல், வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத திட்டத்தை நிறைவேற்றி வருகிறது. அந்த நாடு அணுகுண்டுகளையும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் ஏவி சோதித்து வருகிறது. கடந்த 2006-ம் ஆண்டு முதல் அணுகுண்டு சோதனையில் ஈடுபட்டு வருகிற வடகொரியாவை தடுத்து நிறுத்த அமெரிக்கா கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. சமீபத்தில் அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்ப், ஆசிய நாடுகளுக்கு நீண்டதொரு […]
தாழமுக்கம் சூறாவளியாக உருவாகும் சாத்தியம்
இலங்கையின் தென்கிழக்கு கடலில் ஏற்கனவே உருவாகியிருந்த தாழமுக்கமானது அடுத்த 12 மணித்தியாலத்தில் சூறாவளியாக உருவாகும் சாத்தியம் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இது தற்போது காலியிலிருந்து வடமேற்காக 185 கிலோமீற்றர் தூரத்திலும் கொழும்பிலிருந்து 200 கிலோமீற்றர் தூரத்திலும் சூறாவளி நிலைகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் மணித்தியாலத்திற்கு 20 கிலோமீற்றர் வேகத்தில் நகர்ந்துகொண்டிருக்கிறது திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். தெற்கு,சப்ரகமுவ, மத்திய,மேல் மற்றும் ஊவா மாகாணங்களில் 100 தொடக்கம் […]
8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை: மக்களே அவதானம் !
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதன்படி காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, இரத்தினபுரி, நுவரேலியா, பதுளை, மொனராகலை மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களுக்கு இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே குறித்த மாவட்டங்களில் வசிக்கும் பொதுமக்கள்மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கடும் காற்றினால் நாட்டின் பல பகுதிகளிலும் சேதம்
நாட்டின் பல பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கடும் மழை பெய்ய ஆரம்பித்திருப்பதன் எதிரொலியாக, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மரங்கள் சரிந்து விழுந்துள்ளதுடன், வீட்டுக் கூரைகளும் பாதிப்புகளுக்குள்ளாகியுள்ளது. குறிப்பாக காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, களுத்துறை ஆகிய தென் மாகாணப் பகுதிகளிலும் பதுளையிலும் சற்று முன் வீச ஆரம்பித்திருக்கும் கடும் காற்றினால், மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு – காலி பிரதான வீதியில் அம்பலாங்கொடை அருகே மரங்கள் முறிந்து விழுந்திருப்பதால் […]
பாடசாலைகளுக்கு விடுமுறை: பரீட்சைகள் பிற்போடப்பட்டன
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சில மாகாணங்களில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார். இதேவேளை இன்று (30) திட்டமிடப்பட்டிருந்த இறுதித் தவணை பரீட்சைகள் யாவும் பிற்போடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல் மாகாணம், தென் மாகாணம், மத்திய மாகாணம், ஊவா மாகாணம், ஆகிய மாகாணங்களில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் மேலும் தெரிவித்தார்.
அடுத்த 24 மணிநேரத்தில் கடும் காற்று, மழைக்கான சிவப்பு சமிக்ஞை
வங்காள விரிகுடாக் கடலில் அதிகரித்துள்ள தாழமுக்கம் காரணமாக நாட்டில் சீரற்ற வானிலை நிலவக்கூடும் என அவதான நிலையம் சிவப்பு சமிக்ஞை யை வெளியிட்டுள்ளது. இதனால் எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் நாட்டின் சில பகுதிகளில் கன மழைப் பொழிவும் கடுங்காற்றும் வீசக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது. மணிக்கு 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்தில் கடுங்காற்று வீசக்கூடும் எனவும் 100 முதல் 150 மில்லிமீட்டர் அளவில் மழைப்பொழிவு இடம்பெறக்கூடும் […]
சுவிசில் மிகவும் சிறப்பாகவும், பேரெழுச்சியுடனும் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2017!
தமிழீழ விடுதலைக்காய் களமாடி, வழிகாட்டி விழிமூடிய உத்தமர்களை நினைவுகூரும் தமிழீழத் தேசிய மாவீரர்நாள் நிகழ்வானது மிகவும் பேரெழுச்சியுடன் உணர்வுபூர்வமாக சுவிசில் சிறப்பாக நடைபெற்றது. இவர்டோன் நகரில் அமைந்துள்ள நினைவுக்கல்லில் 27ம் திகதி காலை 09:00 மணியளவில் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் ஈகைச்சுடரேற்றலுடன் ஆரம்பமாகி முறையே அகவணக்கம், மலரஞ்சலி, தீபமேற்றல், உறுதிப்பிரமாணம் எடுத்தல் என்பவற்றோடு நிறைவுபெற்றன. தமிழ்த் தேசிய விடுதலை வேள்வியில் தம் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் […]





