எதிர்பார்க்கப்பட்டதற்கு மாறாக, தனது இடைக்கால அறிக்கையை இறுதி செய்யாமல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது புதிய அரசமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் கூட்டம். இடைக்கால அறிக்கையை இறுதி செய்வதற்காக வழிநடத்தல் குழு இரண்டாவது தடவையாக நடத்திய இந்த நீண்ட அமர்விலும் முடிவு எட்டப்படவில்லை. புதிய அரசமைப்பை உருவாக்கி இலங்கையில் தீர்வு ஒன்றை எட்டும் முயற்சிக்குக் கிடைத்த மேலுமொரு பின்னடைவு இது என்று அரசியல் அவதானிகள் தெரிவித்தனர். புதிய அரசமைப்புத் தொடர்பான யோசனைகளை முன்வைப்பதற்காக அரசமைப்புச் […]
Author: பார்த்தீபன்
சுற்று நிருபங்களுக்குள் மட்டுப்பட்டிருக்காது அனர்த்தத்திற்குள்ளான மக்களுக்கு நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்குக! – ஜனாதிபதி பணிப்பு
திடீர் அனர்த்த நிலைமையினால் சேதமடைந்த வீடுகளை அரசால் நிர்மாணிப்பதற்கு உரிய நிகழ்ச்சித்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். குறித்த நிறுவனங்களில் இருந்து பெற்றுக்கொள்ளும் உரிய தகவல்களின் அடிப்படையில் அந்த நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி தெரிவித்தார். அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தும் நோக்கில் இன்று சனிக்கிழமை முற்பகல் களுத்துறை மாவட்ட செயலக அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். உயிரிழந்தவர்களுக்கான நட்டஈடு வழங்குதல், […]
வங்குரோத்தான அரசியல்வாதிகளே இனக்கலவரத்தைத் தூண்டுகிறார்கள்! – எரான் விக்கிரமரட்ன சாடல்
நேர்மையான தேர்தலொன்றின் மூலம் ஆட்சியைப் பிடிக்கமுடியாத நிலையிலுள்ள ஒருசில வங்குரோத்து அரசியல்வாதிகளே இனமுறுகலைத் தூண்டிவிடுகின்றனர் எனவும், அவர்களின் விஷமத்தனத்துக்கு மக்கள் பலியாகிவிடக்கூடாது எனவும் பொது நிறுவனங்கள் அபிவிருத்தி பிரதியமைச்சர் எரான் விக்கிரமரட்ன தெரிவித்துள்ளார். இனக்கலவரங்களைத் தூண்டிவிடுவதன் மூலம் நாட்டில் அமைதியின்மையைத் தோற்றுவிக்க முயலும் இவர்கள் அதன்மூலம வெளிநாட்டு முதலீடுகள் இலங்கைக்கு வருவதைத் தடுப்பதற்கு கங்கணங்கட்டி செயற்பட்டு வருகின்றனர் எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். “நாடு துரிதமாக அபிவிருத்தி அடைந்துவருவதால் இத்தகைய விஷமிகளின் […]
இயற்கையின் கோரத்தாண்டவத்தால் 100 பேர் பலி; .101 பேர் மாயம்!
* ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு; நூற்றுக்கணக்கான வீடுகள் சேதம்* மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு; மீட்புப் பணியும் தொடர்கிறது * பாடசாலைகளுக்கு விடுமுறை; அரச ஊழியரின் விடுமுறை இரத்து * ஆறுகளின் நீர்மட்டம் உயர்வு; பல இடங்களில் வெள்ளம் * அவசர நடவடிக்கைகளுக்கு ஜனாதிபதி, பிரதமர் பணிப்பு அடைமழையால் நாட்டில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன், ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர். பலருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் […]
இனவாதம் இல்லாத நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும்! – வல்வெட்டித்துறையில் கூறினார் அமைச்சர் மங்கள
“எமக்கிடையில் இன நல்லிணக்கம் முக்கியமானது. நாட்டில் இன்று பலர் இனவாதக் கருத்துகளைப் பேசுகின்றனர். சிங்கள இனவாதமோ, முஸ்லிம் இனவாதமோ, தமிழ் இனவாதமோ இல்லாத நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும்.” – இவ்வாறு நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து சாதனை படைத்த ஆழிக்குமரன் குமார் ஆனந்தனின் நினைவாக, வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரையில், 75 மில்லியன் ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள நீச்சல் தடாகத்துக்கான அடிக்கல் […]
வேற்றுமை உணர்வை இல்லாதொழிக்க வேண்டும்! – விக்கி வலியுறுத்து
“எம்மிடையே வேற்றுமை இல்லை. மாறாக சிந்தனைத் தெளிவு உண்டு. இந்த நாட்டின் இனங்களுக்கிடையே காணப்படுகின்ற வேற்றுமை உணர்வுகளும் சச்சரவுகளும் அரசியல்வாதிகளாலும் பிற்போக்கு சிந்தனையாளர்களாலும் விதைக்கப்பட்ட ஒரு நச்சு விதையாகும்” என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். “இதனை இல்லாதொழிப்பதற்கு அரசு முன்வர வேண்டும். இதற்காக நாம் அனைவரும் இன, மத, மொழி பேதமின்றி ஒன்றாக அரசுக்கு அழுத்தம் கொடுத்து முன்னெடுக்க வேண்டும். தவறான சிந்தனைகள் மாறினால் நாட்டின் அரசியல் […]
மஹிந்த தரப்பின் பொய்களை நம்பி ஏமாற வேண்டாம்! – ஆஸியில் வைத்து இலங்கையர்களிடம் மைத்திரி கோரிக்கை
“அதிகாரத்தில் இருந்த சிலர் (மஹிந்த தரப்பினர்), மீண்டும் அதிகாரத்துக்கு வருவதற்காக தாய்நாட்டுக்கு எதிரான பொய்ப் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். உண்மையை விடவும் பொய் வேகமாக பரவுவதனால் அந்தப் பொய்ப் பிரசாரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என உலகெங்கும் வாழும் இலங்கையர்களிடம் கோருகின்றேன்” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஆஸ்திரேலியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஆஸ்திரேலியாவில் வாழும் இலங்கையர்களை கென்பரா நகரில் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போதே அவர் […]
ரவிக்கு முத்தமிட்டு மகிழ்ந்த மங்கள!
புதிய அமைச்சரவை மாற்றத்தைத் தொடர்ந்து, வெளிநாட்டலுவல்கள் அமைச்சராக நியமிக்கப்பட்ட முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, நேற்று தனது புதிய அமைச்சில் கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிகழ்வில், முன்னாள் வெளிநாட்டலுவல்கள் அமைச்சரும் தற்போதைய நிதி அமைச்சருமான மங்கள சமரவீரவும் கலந்துகொண்டார். இந்நிலையில், இன்று கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்ட ரவிக்கு, மங்களவின் வாழ்த்துக்கள் முத்தமாகப் போய்ச் சேர்ந்தமை குறிப்பிடத்தக்கது.
இனியும் பொறுத்திருக்க முடியாது! தமிழர் பிரச்சினைக்கு உடன் தீர்வு வேண்டும்!! – சம்பந்தன் வலியுறுத்து
“தமிழர்கள் பொறுமை காக்கும் வரையில் பொறுமை காத்துவிட்டார்கள். இனியும் அவர்களால் பொறுத்திருக்க முடியாது. தமிழ் மக்களின் அன்றாட மற்றும் அடிப்படை பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு வழங்கப்படவேண்டும். அதற்கு சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்கவேண்டும்.” – இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் எடுத்துரைத்துள்ளார். இலங்கை, இந்தியா, பூட்டான், மாலைதீவு மற்றும் நேபாளத்துக்கான சுவிஸின் தூதுவர் ஹரால்ட் சன்பேர்க், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனை நாடாளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் […]
நல்லாட்சியில் வடக்கு, கிழக்கில் 5000 ஏக்கர் காணிகள் விடுவிப்பு! – மேலும் 3 ஆயிரம் ஏக்கரை விடுவிக்க நடவடிக்கை என்கிறது அரசு
நல்லாட்சி அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 5ஆயிரம் ஏக்கர் காணிகளை விடுவித்துள்ளது எனவும், மேலும் 3ஆயிரம் ஏக்கர் காணி விடுவிக்க நடவடிக்கை எடுத்துள்ளது எனவும் சபை முதல்வரும் நெடுஞ்சாலைகள் மற்றும் உயர்கல்வி அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று கேள்வி நேரத்தின்போது திருகோணமலை மாவட்டத்தில் உள்ள காணிப் பிரச்சினைகள் குறித்து காணி அமைச்சரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சர் கயந்த கருணாதிலக பதில் அளித்தார். பின்னர், […]





