வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில், முள்ளிவாய்க்காலில் நாளைமறுதினம் வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு நடைபெறும் நினைவேந்தல் நிகழ்வுக்கான பஸ் ஒழுங்குகள் மாவட்ட ரீதியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்று நினைவேந்தல் குழு சார்பில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- முல்லைத்தீவு மாவட்டம் பஸ் ஒழுங்குகள் – துணுக்காய் பிரதேச செயலகம் முன்பாக காலை 7.30, மாந்தை கிழக்கு […]
Author: பார்த்தீபன்
கிளிநொச்சியில் வாள்வெட்டு! – கணவன் பலி; மனைவி படுகாயம்
கிளிநொச்சி, கனகபுரம் வீதியில் தனியார் ஹோட்டல் ஒன்றை நடத்தி வந்த தம்பதியர் மீது இன்று பிற்பகல் நடத்தப்பட்ட வாள்வெட்டு சம்பவத்தில் கணவன் உயிரிழந்துள்ளார். அவரது மனைவி படுகாயமடைந்துள்ளார். குறித்த ஹோட்டலை குத்தகைக்கு எடுத்து நடத்திவந்த தம்பதியர் மீதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் கணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், மனைவி படுகாயமடைந்த நிலையில், கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். ஹோட்டலின் குத்தகைக்காலம் முடிவடைந்த நிலையில், குறித்த தம்பதியர் […]
உழவு இயந்திரத்துடன் ரயில் மோதி 2 இளைஞர்கள் பரிதாப மரணம்!
வவுனியா, புளியங்குளம், பூதூர் செல்லும் வீதியிலுள்ள ரயில் கடவையில் இன்று பிற்பகல் உழவு இயந்திரத்துடன் ரயில் மோதியதில் இரு இளைஞர்கள் பலியாகியுள்ளனர். கொழும்பிலிருந்து யாழ். நோக்கிச் சென்ற ரயில், பூதூர் பகுதியிலுள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையைக் கடந்த உழவு இயந்திரத்துடன் மோதியுள்ளது. இந்த விபத்தில் உழவு இயந்திரத்தின் சாரதியான பூதூரைச் சேர்ந்த ஜெகநாதன் ரவீதரன் (வயது – 20), உதவியாளரான புளியங்குளத்தைச் சேர்ந்த ரவீந்திரன் கீர்த்தீபன் (வயது – 21) […]
விடுதலைப்புலிகளின் அடையாளங்கள் இப்போதும் முள்ளிவாய்க்கால் மண்ணில்!
ஆயுத ரீதியான தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட முள்ளிவாய்க்கால் மண்ணில் விடுதலைப்புலிகளின் எச்சங்கள் பலவற்றை தன்னகத்தே சுமந்த வண்ணம் இந்த உலகுக்கு பல செய்திகளை எடுத்துக் கூறிய நிலையில் உள்ளன. விடுதலைப் புலிகள் தங்களை படையணி ரீதியாகவோ அல்லது நிர்வாக ரீதியாகவோ அடையாளப்படுத்துவதற்காக தகடுகளில் இலக்கம் பொறிக்கப்பட்டு மூன்று இடங்களில் அணிந்து கொள்வார்கள். அவர்கள் இடுப்பு பகுதியில் அணியும் தகடு ஒன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் நேற்று சிக்கியுள்ளது. […]
மே 18ஆம் திகதி முற்பகல் 9.30 இற்கு மூன்று நிமிடங்கள் மௌன அஞ்சலி!
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் இறுதி நாளான எதிர்வரும் மே 18ஆம் திகதி வியாழக்கிழமை முற்பகல் 9.30 மணி தொடக்கம் 3 நிமிட நேரம், தமிழர்கள் வாழும் தேசம் எங்கும், சிரம்தாழ்த்தி மௌன அஞ்சலியை நடத்துமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- “மே 18ஆம் திகதி முற்பகல் 9.30 மணிக்கு முள்ளிவாய்க்காலில் கூடும் மக்கள் கூட்டம் 3 நிமிட நேர மௌன அஞ்சலியை […]
இரண்டு விக்னேஸ்வரன்களும் கடமைகளைச் சரியாக நிறைவேற்ற வேண்டும்! – நல்லை ஆதீன முதல்வர் வலியுறுத்து
“வடக்கில் முக்கிய பதவிகளை வகிக்கும் 2 விக்னேஸ்வரன்களும் தங்களது கடமையைச் சரியாகவும் நேர்த்தியாகவும் செய்ய வேண்டும். எமது சமூகத்துத்தின் முக்கியமான பொறுப்புக்கள் உங்கள் இருவர் கைகளில்தான் உள்ளன.” – இவ்வாறு நல்லை ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமசாரிய சுவாமிகள் தெரிவித்தார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர் ஆர்.விக்னேஸ்வரனுக்குப் பாராட்டு விழா இணுவில் கந்தசுவாமி ஆலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. பேராசிரியர் வ.மகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற […]
மே 18இல் முள்ளிவாய்க்காலில் அனைவரும் ஒன்றுதிரண்டு உறவுகளை நினைவுகூருவோம்! – வடக்கு முதல்வர் விக்கி அழைப்பு
“தமிழ் மக்களின் சரித்திரத்தில் மாறா இடம்பெற்றுவிட்ட சோக வரலாற்றுப் பதிவே முள்ளிவாய்க்கால். அன்றைய தினம் என்றென்றும் எமது மக்களின் வரலாற்றில் துக்க தினமாக கடைப்பிடிக்க வேண்டும். முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனைவரும் ஒன்று சேர்ந்து – ஒருமித்து கடைப்பிடிக்க வேண்டும். முள்ளிவாய்க்காலில் நடைபெறும் நினைவேந்தலில் கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்று சேர்ந்து பங்குபற்ற வேண்டும்.” – இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். “அநியாயமாகக் கொலை செய்யப்பட்ட எமது […]
வட மத்திய மாகாண சபையின் 17 உறுப்பினர்கள் மஹிந்தவுடன் ஆட்சிக் கவிழ்ப்புக் குறித்து பேச்சு!
வட மத்திய மாகாண சபையின் 17 உறுப்பினர்கள் மஹிந்தவுடன் ஆட்சிக் கவிழ்ப்புக் குறித்து பேச்சு! மைத்திரி அணி வசமுள்ள வட மத்திய மாகாண சபையின் ஆட்சி ஆட்டம் காண ஆரம்பித்துள்ள நிலையில், அந்த மாகாண சபையில் அங்கம் வகிக்கும் மஹிந்த அணியான பொது எதிரணிக்கு ஆதரவான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் 17 பேர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேரில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். மஹிந்தவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் […]
மே 18 முல்லைத்தீவுக்கு மைத்திரி செல்லலாமா? – ஆராய்கிறது அவரது செயலகம்
முல்லைத்தீவு மாவட்டத்துக்கு எதிர்வரும் 18ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வருவதற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளமை தொடர்பில், ஜனாதிபதி செயலகம் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றது என நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. வறுமை ஒழிப்பு தேசிய நிகழ்சித் திட்டத்தை எதிர்வரும் 18ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து ஆரம்பிப்பது என்றும், இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்குக் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் […]
முடிந்தால் ஆட்சியைக் கவிழ்த்துக் காட்டுங்கள்! – மஹிந்த அணிக்கு அரசு சவால்
“ஒருவாரம் கால அவகாசம் தருகின்றோம் முடிந்தால் வட மத்திய மாகாண சபையின் ஆட்சியை கவிழ்த்துக் காட்டுங்கள்.” – இவ்வாறு மஹிந்த அணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மகிந்த அமரவீர சவால் விடுத்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்குச் சார்பாகச் செயற்பட்டு வந்த வட மத்திய மாகாண அமைச்சர் கே.எச்.நந்தசேனவை அமைச்சுப் பதவியிலிருந்து தூக்கிவிட்டு, அப்பதவிக்கு மாகாண சபை உறுப்பினர் எச்.ஹேரத் […]





