வங்குரோத்தான அரசியல்வாதிகளே இனக்கலவரத்தைத் தூண்டுகிறார்கள்! – எரான் விக்கிரமரட்ன சாடல்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
நேர்மையான தேர்தலொன்றின் மூலம் ஆட்சியைப் பிடிக்கமுடியாத நிலையிலுள்ள ஒருசில வங்குரோத்து அரசியல்வாதிகளே இனமுறுகலைத் தூண்டிவிடுகின்றனர் எனவும், அவர்களின் விஷமத்தனத்துக்கு மக்கள் பலியாகிவிடக்கூடாது எனவும் பொது நிறுவனங்கள் அபிவிருத்தி பிரதியமைச்சர் எரான் விக்கிரமரட்ன தெரிவித்துள்ளார்.
இனக்கலவரங்களைத் தூண்டிவிடுவதன் மூலம் நாட்டில் அமைதியின்மையைத் தோற்றுவிக்க முயலும் இவர்கள் அதன்மூலம வெளிநாட்டு முதலீடுகள் இலங்கைக்கு வருவதைத் தடுப்பதற்கு கங்கணங்கட்டி செயற்பட்டு வருகின்றனர் எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
“நாடு துரிதமாக அபிவிருத்தி அடைந்துவருவதால் இத்தகைய விஷமிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. மக்களின் செல்வாக்கை முற்றாக இழந்திருக்கும் இந்த வங்குரோத்து அரசியல்வாதிகள் இனங்களுக்கிடையே முறுகலை ஏற்படுத்தி நாட்டின் அமைதியைக் குலைக்க முயல்கிறார்கள். அவர்களின் இந்த சதித்திட்டத்தை மக்கள் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்” எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *