Sunday , May 19 2024
Home / Tag Archives: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

Tag Archives: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

மைத்திரியின் புதிய வர்த்தமானி !

மைத்திரியின் புதிய வர்த்தமானி

மைத்திரியின் புதிய வர்த்தமானி ! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் நேற்று மேலுமொரு வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை குறித்து நியமித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு தொடர்புடையதாகவே இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஐந்து பேர் கொண்ட விசாரணை ஆணைக்குழுவிற்கு அதிகாரங்களை வழங்க குறித்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.                     …

Read More »

ஐ.தே.கவில் வெடிக்கும் சர்ச்சை !

maithiri ranil

ஐ.தே.கவில் வெடிக்கும் சர்ச்சை ! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இரகசியமாக சந்தித்த ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக கட்சி என்ன நடவடிக்கை எடுக்கப்போகின்றது என அமைச்சர் சுஜீவ சேனசிங்க கேள்வியெழுப்பியுள்ளார். இது குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் பொது செயலாளர் அகிலவிராஜ் காரியவசத்திற்கு இன்று கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ள அவர், இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் கடந்த 26ம் திகதி …

Read More »

20 ஆவது திருத்தத்திற்கு ஒருபோதும் ஆதரவளிக்க மாட்டோம்!

ஜே.வி.பி.யின் தனிப்பட்ட விருப்புக்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக கொண்டுவரப்படும் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு நாம் ஒரு போதும் ஆதரவளிக்கப் போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்கட்சி தலைவர் மஹிந்தராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருடன் ஏனைய கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து 20 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டால், அதற்கு ஆதரவளிக்க நாம் தயாராகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற …

Read More »

சந்திரிக்கா மீது கடுமையாக குற்றம்சாட்டிய ரவி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் ஒன்றிணைந்து ஆட்சியை முன்னெடுக்க முடியும் என்ற நம்பிக்கை காணப்படுகின்ற போதிலும் அதனை குழப்பும் வகையில் பல்வேறு சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றது. இவ்வாறு தெரிவித்துள்ள அமைச்சர் ரவி கருணாநாயக்க , சுதந்திர கட்சியை அழித்த சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தற்போது ஐக்கிய தேசிய கட்சியையும் அழிப்பதற்கு முற்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். சிங்கள மொழி வார இதழொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அமைச்சர் ரவி கருணாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Read More »

மைத்திரி தன்னை அழித்து விட்டதாக ஒருவர் ஒப்பாரி

Maithripala Sirisena

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை அழித்து விட்டார் என கடுவலை நகர சபையின் முன்னாள் மேயர் ஜீ.எச். புத்ததாஸ தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியைப் பாதுகாக்கும் அமைப்பினால் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அத்துடன் பொது வேட்பாளராக களமிறங்கியப் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை அழைத்ததாகவும் அதற்கமைய தான் அவருக்கு ஆதரவு தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். …

Read More »

மைத்திரி- மகிந்த கூட்டணியுடன் அரசியல் பயணம் தொடரும்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ஷ கூட்டணியின் அரசியல் பயணம் எவ்வித தடையுமின்றி தொடரும் என, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். மஹிந்தவின் விஜேராம இல்லத்தில் வைத்து இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”நாடு அராஜக நிலைக்கு செல்வதை தவிர்க்கும் வகையில் நீதிமன்ற தீர்ப்பிற்கு மதிப்பளித்து மஹிந்த ராஜபக்ஷ இன்று தனது பதவியை இராஜினாமா செய்தார். நாம் …

Read More »

பைத்தியக்காரனை பைத்தியக்காரன் என்றுதானே நாம் சொல்ல வேண்டும்!

பொன்சேகா

“பைத்தியக்காரனை பைத்தியக்காரன் என்றுதான் நாம் சொல்ல முடியும். அவ்வாறு சொல்வதில் எந்தத் தவறும் இல்லை. நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்த நிலைமைக்குப் போய்விட்டார் என்பதை நினைத்து, அவருக்கு வாக்களித்த மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளார்கள். மக்கள் இன்று கடும் கொதிப்பில் இருக்கின்றார்கள். அவர்களே, மைத்திரிபாலவை ஓட ஓட விரட்டியடிக்கும் காலம் நெருங்கிவிட்டது.” – இவ்வாறு ஐக்கிய தேசிய முன்னணியின் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். …

Read More »

பரபரப்பாகிறது கொழும்பு! மைத்திரியின் அவசர நடவடிக்கை!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றையதினம் முக்கியமான சந்திப்பு ஒன்றில் ஈடுபடவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. நாடாளுமன்ற கலைப்புக்கு எதிரான உயர் நீதிமன்ற விசாரணைகள் நடைபெறவுள்ள நிலையிலேயே இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது. இதில் முக்கியமான தீர்மானங்களை எடுக்கவுள்ளதாக கூட்டணியின் அரசியல் நபர் ஒருவர் கூறியுள்ளார். இதேவேளை நேற்றையதினம் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு எதுவாயினும் அதனை தாம் ஏற்கவுள்ளதாக ஜனாதிபதி கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Read More »

ஜனாதிபதியின் அதிரடி ஆட்டம் ஆரம்பம்!

அனைத்து அமைச்சர்களினதும் பொறுப்புக்களை அமைச்சின் செயலாளர்களுக்கு வழங்கி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டமை, புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டமைக்கு எதிராக மேன் முறையீட்டு நீதிமன்றம் நேற்று இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையிலேயே அமைச்சர்களின் பொறுப்புக்களை அமைச்சின் செயலாளர்களிடம் ஜனாதிபதி ஒப்படைத்துள்ளார். ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினால் இன்று வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘ஜனாதிபதியினால் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின்படி, நியமிக்கப்பட்ட பிரதமர் …

Read More »

பாராளுமன்றம் கலைக்கபடுவது குறித்து மைத்திரியின் முடிவு என்ன?

Maithripala Sirisena

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தை கலைப்பதற்கான முயற்சிகளை கைவிடுவதற்கு தீர்மானித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.ஜனாதிபதிக்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள் காட்டி ரொய்ட்டர் இதனை தெரிவித்துள்ளது. பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு புதிய தேர்தலிற்கு அழைப்பு விடுக்கும் உத்தரவை சிறிசேன கடந்த மாதம் விடுத்திருந்தார் எனினும் சிறிசேன அந்த உத்தரவை கைவிடுவது குறித்து சிந்தித்து வருகின்றார் என அவரிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஜனாதிபதி அந்த உத்தரவை வாபஸ்பெறுவார் இதன் மூலம் தனது நடவடிக்கைக்கு …

Read More »