வவுனியா கந்தசாமி ஆலயத்தில் திருட்டு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

வவுனியா – தாண்டிக்குளம் ஸ்ரீ கந்தசாமி கோயிலில் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கோயிலுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் உண்டியல் உடைத்து பெருமளவு பணம் மற்றும் ஒலிபெருக்கியையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வவுனியா – தாண்டிக்குளம் ஸ்ரீ கந்தசாமி ஆலயம் நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் மூடிவிட்டு சென்ற நிலையில் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் நேற்று காலை பூசாரிஇ பூஜைகளை மேற்கொள்வதற்காக கோயிலுக்கு சென்ற போது மூலஸ்தானம் உடைக்க முயற்சிக்கப்பட்டிருந்ததுடன்இ கோயில் அலுவலகமும் உடைக்கப்பட்டு பொருட்கள் கொள்ளையிடப்பட்டிருந்தன.

இதையடுத்தே கொள்ளைச் சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆலய நிர்வாக சபையிடமும் ஆலய குருக்களிடமும் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார்இ கைரேகை நிபுணர்களை வரவழைத்து விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *