புத்தளம் சாலியவெவ பகுதியில் மனித எச்சங்கள் மீட்பு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

புத்தளம் சாலியவெவ பிரதேசத்தில் தலையற்ற மனித எச்சங்கள் சிலவற்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திலிருந்து எம்.பி 20 ரக ரிவோல்டர் ஒன்றையும் சாலியவெவ பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

நேற்றைய தினம் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இந்த மனித எச்சங்கள் தனது உத்தியோகபூர்வ துப்பாக்கியுடன் சேர்த்து கடந்த 4ஆம் திகதி காணாமல் போயிருந்ததாக அநுராதபுரம் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

இந்த நிலையில் விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *