ஐரோப்பிய ஆணைக்குழுவுடன் முரண்படும் விதத்தில் பிரித்தானியா நடந்துகொள்ளாது!

பிரெக்சிற் தொடர்பான பேச்சுவார்த்தைகளின் போது விளக்கம் அளிக்கும் விடயத்தில், ஐரோப்பிய ஆணைக்குழுவுடன் முரண்படும் விதத்தில் பிரித்தானியா நடந்து கொள்ளாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய ஆணையர் ஜேன் கிளாட் ஜங்கர் மற்றும் பிரித்தானிய பிரதமர் மே ஆகியோருக்கு இடையில் பிரெக்சிற் தொடர்பில் நடைபெற்ற பேச்சுவார்த்தை திருப்தியளிக்கும் வகையில் இருக்கவில்லை என, ஜேர்மனிய பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்தே மேற்குறித்தவாறு டோரிக்கள் தெரிவித்துள்ளனர்.

ஒன்றியத்தால் வெளியிடப்படும் பிரெக்சிற் விதிமுறைகளை பிரித்தானியா தவறாக புரிந்துகொள்ளும் சந்தர்ப்பத்தில் உடன்படிக்கை ஒன்று இல்லாமலேயே வெளியேற வேண்டிய நிலைமை ஏற்படும் என ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.

About தமிழ்மாறன்

View all posts by தமிழ்மாறன் →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *