Other News

இரணைதீவு மக்களுக்கு இரண்டு வாரத்தில் தீர்வு : பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் உறுதி

பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிளிநொச்சி இரணைதீவு மக்களுக்கு இரண்டு வாரத்துக்குள் தீர்வை பெற்றுத்தருவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன உறுதியளித்துள்ளார். கிளிநொச்சிக்கு இன்று விஜயம் செய்துள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் இரணைமாதா நகரில் பேரராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களுடன் கலந்துரையாடினார். ஜனாதிபதியே நாட்டின் பாதுகாப்பு அமைச்சராக உள்ளார். என்னாள் இந்த விடயத்தில் உடனடியாக தீர்வை வழங்க முடியாது. இரண்டு வாரங்களுக்குள் தீர்வை […]

வடக்கின் புதிய அமைச்சர்கள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவருடன் பேச்சு

வடக்கு மாகாணத்தில் வெற்றிடமாகியுள்ள இரண்டு அமைச்சுக்களுக்கும் புதியவர்களை நியமிப்பது தொடர்பாக, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் முக்கிய கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட நிலையில் பதவி விலகியுள்ள அமைச்சர்களான த.குருகுலராசா மற்றும் பொ.ஐங்கரநேகசன் ஆகியோரின் அமைச்சுக்களான, முறையே கல்வியமைச்சு மற்றும் விவசாய அமைச்சு ஆகியவற்றின் செயற்பாடுகளை முதலமைச்சர் பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில், குறித்த அமைச்சுக்களுக்கு உரியவர்களை நியமிப்பது தொடர்பாக விண்ணப்பங்கள் கிடைத்து வருவதாகவும், […]

தொடர்கிறது போராட்டம்: 10 இலட்சம் அஞ்சல்கள் தேக்கம்

தபால் சேவை ஊழியர்கள் முன்னெடுத்துள்ள நாடுதழுவிய பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக, நாடளாவிய ரீதியில் சுமார் 10 இலட்சம் அஞ்சல்கள் விநியோகிக்கப்படாமல் தேங்கிக் கிடப்பதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் தபால் ஊழியர்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம், இரண்டாவது நாளாக இன்றும் (புதன்கிழமை) தொடர்கின்றது. நிர்வாக ரீதியில் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குமாறு கோரி வடக்கு, கிழக்கு, மலையகம் என நாட்டின் சகல பிரதேசங்களிலும் முன்னெடுக்கப்பட்டு வரும் இப் […]

சரத் வீரசேகரவின் மனு குறித்து ஐ.நா. ஆணையாளர் அதிருப்தி

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் மற்றும் ஐ.நா.வுக்கான சிறப்புத் தூதுவர் மொனிகா பின்டோ ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென இலங்கையின் முன்னாள் கடற்படை அதிகாரி ரியல் அட்மிரல் சரத் வீரசேகர ஐ.நா. மனித உரிமைகள் பேரவை தலைவரிடம் மனுத்தாக்கல் செய்துள்ள நிலையில், அதுகுறித்து ஐ.நா. ஆணையாளர் அதிருப்தி வெளியிட்டுள்ளார். இலங்கை அரசியலமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துமாறு கோரியமை மற்றும் கலப்பு நீதிமன்ற பொறிமுறையை ஏற்படுத்துமாறு வலியுறுத்தியமை […]

சம்பூருக்கு வருகிறது சூரிய மின்சக்தி திட்டம்

திருகோணமலை சம்பூரில் இயற்கை எரிவாயு மின் நிலையத்தை அமைப்பதற்கு பல்வேறு எதிர்ப்புகள் வெளியாகி வந்த நிலையில், அதற்கு பதிலாக 50 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின்சக்தி நிலையத்தை அங்கு அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சூழலின் பசுமைக்கு தாக்கம் ஏற்படுத்தும் என்பதாலேயே இயற்கை எரிவாயு திட்டத்தை கைவிட்டு, மாற்று திட்டத்தை முன்னெடுப்பதாக மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய நேற்று (செவ்வாய்க்கிழமை) நடத்திய செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார். […]

மயிலிட்டி துறைமுகத்தை விடுவிக்க தீர்மானம்

யாழ். வலிகாமம் வடக்கின் உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் காணப்படும் மயிலிட்டி துறைமுகத்தை விடுவிப்பதற்கு படையினர் இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் ஜூலை மாதம் 3ஆம் திகதி குறித்த துறைமுகம் மற்றும் அதனை அண்டிய சில காணிகளை விடுவிப்பதற்கு படைத்தரப்பு இணங்கியுள்ளது. மீனவர்களின் வாழ்வாதாரத்தில் முக்கிய பங்கை வகித்து வந்த மயலிட்டி துறைமுகமானது, கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக படையினர் வசமிருந்தது. குறித்த துறைமுகத்தையும் அதனை அண்டியுள்ள காணிகளையும் விடுவிக்கும் பட்சத்தில், அம் […]

இரணைதீவு மக்களுக்கு இரண்டு வாரங்களில் தீர்வு

தமது பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிளிநொச்சி இரணைதீவு மக்களுக்கு எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் தீர்வினை பெற்றுத்தருவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன உறுதியளித்துள்ளார். கிளிநொச்சிக்கு இன்று (புதன்கிழமை) விஜயம் செய்துள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட குழுவினர், இரணைமாதா நகரில் கடந்த 69 நாட்களாக பேரராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களுடன் கலந்துரையாடினார். இதன்போது, ஜனாதிபதியே நாட்டின் பாதுகாப்பு அமைச்சராக உள்ள நிலையில், தம்மால் […]

பல்கேரியாவிலிருந்து 32 இலங்கையர்கள் நாடுகடத்தப்பட்டனர்

சட்டவிரோதமாக பல்கேரியாவில் தங்கியிருந்த 32 இலங்கையர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர். இத்தாலிக்கு அனுப்பிவைப்பதாக கூறி சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்களால் அழைத்துச் செல்லப்பட்ட குறித்த பிரஜைகள் துருக்கியில் நிர்க்கதியாக்கப்பட்டு, பின்னர் பல்கேரியாவிற்கு தப்பிச் சென்றுள்ளர். இந்நிலையில், குறித்த பிரஜைகளை அந்நாட்டு அரசாங்கம் நாடு கடத்தி சிறப்பு விமானத்தின் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளது. நாடுகடத்தப்பட்ட இலங்கையர்களிடம் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

மொசூல் நகரில் மிக பழமையான மசூதியை இடித்து தரைமட்டமாக்கி ஐ.எஸ்.தீவிரவாதிகள் அட்டூழியம்

ஈராக் மொசூல் நகரில் 900 ஆண்டுகள் பழமையான மசூதியை ஐ.எஸ். தீவிரவாதிகள் குண்டு வைத்து தகர்த்துள்ளனர். மிக புகழ்பெற்ற இந்த மசூதியை ஐ.எஸ். தீவிரவாதிகள் தகர்த்தது ஈராக் மக்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஐ.எஸ். தீவிரவாதிகள் சிரியாவில் ராக்கா நகரம் உள்ளிட்ட பகு திகளையும், ஈராக்கில் மொசூல் நகரத்தையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்த பல பகுதிகளை ராணுவம் ஏற்கனவே மீட்டு விட்டது. கடைசியாக […]

சீனர்களுக்கான விசா கட்டுப்பாடுகளை கடுமையாக்க பாகிஸ்தான் முடிவு

பாகிஸ்தான் நாட்டிற்கு வருகை தரும் சீனர்களுக்கான விசா கட்டுப்பாடுகளை கடுமையாக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. சீன பாகிஸ்தான் பொருளாதார திட்டம் காரணமாக பாகிஸ்தானில் வாழும் சீனர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. இவர்களது பாதுகாப்பிற்காக பாகிஸ்தான் அரசு 15 ஆயிரத்துக்கும் அதிகமான ராணுவ வீரர்களை சீனர்கள் வாழும் பகுதியில் குவித்துள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டிற்கு வருகை தரும் சீனர்களுக்கான விசா கட்டுப்பாடுகளை கடுமையாக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. […]