பல்கேரியாவிலிருந்து 32 இலங்கையர்கள் நாடுகடத்தப்பட்டனர்

சட்டவிரோதமாக பல்கேரியாவில் தங்கியிருந்த 32 இலங்கையர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர்.

இத்தாலிக்கு அனுப்பிவைப்பதாக கூறி சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்களால் அழைத்துச் செல்லப்பட்ட குறித்த பிரஜைகள் துருக்கியில் நிர்க்கதியாக்கப்பட்டு, பின்னர் பல்கேரியாவிற்கு தப்பிச் சென்றுள்ளர்.

இந்நிலையில், குறித்த பிரஜைகளை அந்நாட்டு அரசாங்கம் நாடு கடத்தி சிறப்பு விமானத்தின் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளது.

நாடுகடத்தப்பட்ட இலங்கையர்களிடம் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

About தமிழ்மாறன்

View all posts by தமிழ்மாறன் →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *