இலங்கை போக்குவரத்து துறையில் புதிய பேருந்து கட்டணம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்துசபை தலைமை அதிகாரி பி.எச்.ஆர்.ரி.சந்திரசிறி தெரிவித்துள்ளார். புதிய பேருந்துக்கட்டண மறுசீரமைப்பு தொடர்பாக பொதுமக்களுக்கு தெரியப்படுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தனியார் பேருந்துகளில் புதிய பேருந்து கட்டணங்கள் காட்சிப்படுத்தப்படவேண்டும் என கூறப்பட்டிருக்கம் அதேவேளை பேருந்து கட்டணம் உரியவகையில் செயல்படுத்தப்படுகின்றதா என்பதை கண்டறிவதற்கு நாடுதழுவிய ரீதியில் பரிசோதனைகள் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்து கட்டண அறவீடு மற்றும் பருவகால அனுமதி அட்டை […]
Other News
தமிழ் பாடசாலைகளின் குறைபாடுகள் தீர்க்கப்பட வேண்டும்: இராதாகிருஷ்ணன்
தமிழ் பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகளை தீர்ப்பதற்கு நல்லாட்சி அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஹட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரியின் 125ஆவது ஆண்டு விழா நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய இராஜாங்க அமைச்சர், மலையகத்தின் தமிழ் கல்வி முன்னெடுப்புக்களில் பாரிய குறைபாடுகள் காணப்படுகின்றன. ஆசிரியர் பற்றாக்குறை தீர்க்க முடியாத பிரச்சினையாக இருக்கின்றது. எனவே, ஆசிரியர்களை தமிழ் […]
வித்தியா கொலையின் சூத்திரதாரி சுவிஸ் குமார் :6 வது சாட்சி சாட்சியம்
அரச தரப்பு சாட்சியாக தன்னை மாற்ற குற்றபுலனாய்வு துறை அதிகாரி உதவினால் அவருக்கு தான் 2 கோடி ரூபாய் பணம் வழங்க தயார் என தன்னிடம் சுவிஸ் குமார் தெரிவித்ததாக ஆறாவது சாட்சியான முஹமட் இப்ரான் என்பவர் ரயலட் பார் முன்னிலையில் சாட்சியம் அளித்துள்ளார். புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு விசாரணைகளின் மூன்றாம் நாள் சாட்சி பதிவுகள், இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதியின் இரண்டாம் மாடியில் மேல் […]
நிறைவுக்கு வந்தது தபால் ஊழியர்களின் போராட்டம்
கோரிக்கைகளுக்கு நியாயமான தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்படும் என்ற அரசாங்கத்தின் உறுதியையடுத்து கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து வந்த தபால் ஊழியர்களின் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட உபகுழுவுடன் நேற்று மாலை நடந்த கலந்துரையாடலின் போது தமக்கு நியாயமான பதில் கிட்டியதை அடுத்தே இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக தபால் தொழிற்சங்க சம்மேளன முன்னணியின் இணைப்பாளர் எச்.கே.காரியவசம் தெரிவித்துள்ளார். தபால் சேவை ஊழியர்கள் முன்னெடுத்துள்ள நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக நாடளாவிய ரீதியில் சுமார் […]
தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண தமிழகத்தின் உதவி அவசியம்: சுரேஷ்
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஈழ மக்கள், தமிழகம் மற்றும் புலம்பெயர்ந்தோர் ஆகியோர் ஒன்றிணைந்து செயற்படுவது அவசியம் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு நான்கு நாள் விஜயமொன்றை மேற்கொண்டுள்ள அவர், அங்கு பல்வேறு தரப்பினருடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தார். குறித்த சந்திப்புகளின் போது, தற்போதைய காலகட்டத்தில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளன. […]
விக்னேஸ்வரன் தன்னிச்சையாக செயற்படுகிறார் : சுமந்திரன் குற்றச்சாட்டு
வட. மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தன்னிச்சையாக செயற்பட்டு வருகின்றார் என்பதற்கு புதிய அமைச்சர்களின் நியமனம் சிறந்த சான்றாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். முதலமைச்சரினால் வடக்கு மாகாணத்திற்கு புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டமை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “முதலமைச்சர் இலங்கைத் தமிழரசு கட்சியுடன் ஆலோசிக்காமல் செயற்படுவதாக முதலமைச்சர் சி.வி.க்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எழுதிய இரண்டாவது கடிதத்தில் […]
பிரபாகரனை போல சவால் விடும் தமிழ் தலைமைகள் இல்லை: சுமனரத்ன தேரர்
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைப் போல, அரசாங்கத்திற்கு சவால் விடுக்கும் தமிழ் தலைமைகள் தற்போது இல்லையென மட்டக்களப்பு மங்களராமய விஹாரையின் விஹாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரர் தெரிவித்துள்ளார். யுத்தம் முடிவடைந்த பின்னர் தமிழ் மக்களுக்கு நடக்கும் அநீதிகளை தட்டிக்கேட்க தமிழ் தலைமைகள் முன்வருவதில்லையென தெரிவித்து, அவர் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையொன்றிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். குறிப்பாக கிழக்கு மாகாணத்தை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து தமிழ் மக்களை அடக்கியாள சில […]
பாகிஸ்தான் ஆயில் டேங்கர் லாரி தீவிபத்தில் பலி 175 ஆக அதிகரிப்பு
பாகிஸ்தானில் ஆயில் டேங்கர் லாரி தீப்பற்றிய விபத்தில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 175 ஆக உயர்ந்துள்ளது. பலர் தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருந்து லாகூர் நோக்கி கடந்த 25-ம் தேதி பெட்ரோல் டேங்கர் லாரி, பஞ்சாப் மாகாணத்தின் பஹவல்பூர் நகர் அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால், லாரியிலிருந்த பெட்ரோல் சாலையில் சிந்தி ஆறாக ஓடியது. இதையறிந்த, அப்பகுதியை சுற்றியுள்ள கிராம மக்கள் பெட்ரோலை பிடிக்க பாட்டில்கள் […]
தடைசெய்யப்பட்ட 6 முஸ்லிம் நாடுகள் விசா பெற அமெரிக்கா புதிய நிபந்தனை
சிரியா, லிபியா, உள்ளிட்ட 6 முஸ்லிம் நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழைய அதிபர் டிரம்ப் அரசு ‘விசா’ தடை விதித்தது. அதே போன்று அகதிகள் நுழையவும் தடை விதிக்கப்பட்டது. அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் இதற்கு அமெரிக்க கோர்ட்டுகள் தடை விதித்துள்ளன. இந்த நிலையில் தடை செய்யப்பட்ட 6 நாடுகளை சேர்ந்தவர்கள் ‘விசா’ பெற டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு புதிய நிபந்தனைகளையும், வழிகாட்டுதல் முறையையும் விதித்துள்ளது. அதன்படி தடை […]
பதவி விலக வலியுறுத்தி போராட்டம்: பிரேசில் அதிபர் மாளிகை மீது காரை மோதி தாக்குதல்
ஊழல் குற்றச்சாட்டு காரணமாக பிரேசில் அதிபர் மாளிகை மீது காரை வேகமாக மோதி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரேசில் நாட்டின் அதிபராக மைக்கேல் டெமர் பதவி வகித்து வருகிறார் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக இவர் பதவி விலக வலியுறுத்தி போராட்டங்கள் நடந்து வருகின்றன. தலைநகர் பிரேசிலியாவில் அதிபர் மாளிகை உள்ளது. இந்த நிலையில் நேற்று மாளிகையின் முன் பக்க மெயின் ‘கேட்’ மீது கார் மூலம் […]





