தமிழ் பாடசாலைகளின் குறைபாடுகள் தீர்க்கப்பட வேண்டும்: இராதாகிருஷ்ணன்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

தமிழ் பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகளை தீர்ப்பதற்கு நல்லாட்சி அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஹட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரியின் 125ஆவது ஆண்டு விழா நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய இராஜாங்க அமைச்சர், மலையகத்தின் தமிழ் கல்வி முன்னெடுப்புக்களில் பாரிய குறைபாடுகள் காணப்படுகின்றன. ஆசிரியர் பற்றாக்குறை தீர்க்க முடியாத பிரச்சினையாக இருக்கின்றது. எனவே, ஆசிரியர்களை தமிழ் பாடசாலைகளுக்கு உள்வாங்க ஜனாதிபதி உதவிகளை செய்ய வேண்டும்.

2016ஆம் ஆண்டு முதல் தமிழ் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பில் பல்வேறு கோரிக்கைகளை அரசாங்கத்திடம் முன்வைத்து வருகின்றோம். எனவே ஜனாதிபதியின் தலையீட்டுடன் இப்பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *