Other News

2025 வரை நல்லாட்சி அரசின் பயணத்தை எவராலும் நிறுத்தவே முடியாது! – அடித்துக் கூறுகின்றார் ராஜித

“நல்லாட்சி அரசு அதன் கோட்பாடுகளை முன்னோக்கிக் கொண்டுசெல்வதில் உறுதிபூண்டுள்ளது. எவரும் அச்சம்கொள்ளத் தேவையில்லை.” – இவ்வாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அத்துடன், இரண்டு பிரதான தேசியக் கட்சிகளும் இணைந்து அமைத்துக்கொண்ட தேசிய அரசு (நல்லாட்சி அரசு) 2020ஆம் ஆண்டுவரை தொடரும் எனவும், 2020ஆம் ஆண்டு தேர்தலின் பின்னர் 2025ஆம் ஆண்டுவரை ஒப்பந்தம் புதுப்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார். ஜப்பானிய வேலைத்திட்டத்தின்கீழ் கல்கமுவயில் அமைக்கப்படும் வைத்தியசாலையின் பணிகளை ஆரம்பித்துவைக்கும் […]

அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பான ராஜிதவின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது! – அருட்தந்தை சக்திவேல் தெரிவிப்பு  

தெற்கில் புரட்சியில் ஈடுபட்டவர்களை விடுதலைசெய்ததுபோல், அரசியல் கைதிகளையும் விடுவிக்கவேண்டும் எனத் தாம் அமைச்சரவை சந்திப்பில்  தெரிவித்தார் என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்திருக்கும் கருத்தை அரசியல் கைதிகளை விடுதலைசெய்வதற்கான தேசிய அமைப்பு வரவேற்றுள்ளது. இது தொடர்பாக கருத்து வெளியிட்ட அவ்வமைப்பின் ஏற்பாட்டாளர் அருட்தந்தை மா. சக்திவேல் கூறியவை வருமாறு:- “தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாஷைகள் மட்டுமல்ல, காணிப் பிரச்சினை, மீள்குடியேற்றம், காணாமற்போனோர் விடயங்கள் என்பவற்றில் தீர்க்கமான முடிவெடுக்க முடியாது. நல்லாட்சி […]

சு.கவின் மாநாட்டுக்கு மஹிந்த அணிக்கும் அழைப்பு!

“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 66ஆவது மாநாட்டு நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு மஹிந்த அணியான பொது எதிரணி உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படவுள்ளது”  என்று அக்கட்சியின் இளைஞர் அணியின் தலைவர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார். கடந்த வருடத்தைவிட சிறப்பாக நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் நாட்டுக்குத் தேவையான அதிமுக்கிய தீர்மானங்கள் பல பிரகடனப்படுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவை சரிசெய்துகொள்வதற்கும், கட்சியின் பாரம்பரியத்தையும் கட்டுக்கோப்பையும் பாதுகாத்துக்கொள்வதற்கும் பொது எதிரணியினர் உட்பட […]

சு.கவின் 66ஆவது மாநாட்டை கொழும்பில் நடத்த ஏற்பாடு! – அமைச்சர் அமரவீர அறிவிப்பு

“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 66ஆவது மாநாட்டை மிகவும் பயனுள்ளதாக நடத்துவதற்கான ஏற்பாட்டை கட்சியின் மத்திய குழு முன்னெடுத்துவருகின்றது”  என்று மீன்பிடி அமைச்சரும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 65ஆவது மாநாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் குருநாகலையில் கடந்த வருடம் சிறப்பாக நடைபெற்றது. இம்முறை 66ஆவது மாநாட்டை கொழும்பில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. செப்டெம்பர் மாதம் 2ஆம் […]

செல்வநாயகம் ஒத்துழைத்திருந்தால் பிரபாகரன்

ஐ.தே.கவின் 71ஆவது ஆண்டு விழாவிலும் மைத்திரி பிரதம அதிதி!

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 6ஆம் திகதி வரவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் 71ஆவது நிறைவுக் கொண்டாட்டத்துக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பிரதம அதிதியாக அழைப்பதற்கு முடிவெடுக்கப்பட்டிருப்பதாக சிறிகொத்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த செப்டெம்பர் மாதம் அக்கட்சியின் 70ஆவது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டம் பொரளை கெம்பல் மைதானத்தில் நடந்தபோதும் ஜனாதிபதி மைத்திரிபால அதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். கடந்த வாரம் நடைபெற்ற கட்சியின் நிறைவேற்றுக்குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது எனவும், […]

பின்லேடனை துப்பாக்கியால் 3 முறை சுட்டு கொன்றேன்: அமெரிக்க ராணுவ அதிகாரி தகவல்

அல்கொய்தா தலைவர் பின்லேடனை 3 முறை சுட்டு கொன்றதாக அமெரிக்க ராணுவ அதிகாரி ராபர்ட் ஓ நீல் கூறியுள்ளார். அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த அல்கொய்தா தலைவர் பின்லேடன் பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத் நகரில் ரகசியமாக தங்கி இருந்தது அமெரிக்க படைக்கு தெரியவந்தது. இதையடுத்து அமெரிக்க கமாண்டோ படையினர் ஹெலிகாப்டரில் சென்று அதிரடி தாக்குதல் நடத்தி பின்லேடனை கொன்றனர். 2011-ம் ஆண்டு மே மாதம் 2-ந்தேதி இந்த சம்பவம் நடந்தது. […]

கத்தாருக்கு விதித்த நிபந்தனைகளை தளர்த்திய அரபு நாடுகள்

கத்தாருக்கு விதித்த 13 நிபந்தனைகளில் 6 நிபந்தனைகளை கைவிட்டதாக சவுதி அரேபியா உள்ளிட்ட அரபு நாடுகள் அறிவித்துள்ளது. அரபு நாடுகளில் ஒன்றான கத்தாருக்கும் அதையொட்டியுள்ள சவுதி அரேபியா, ஐக்கிய அரசு எமிரேட், பக்ரைன், எகிப்து ஆகிய நாடுகளுக்கும் இடையே மோதல்போக்கு நிலவி வருகிறது. கத்தார் நாடு ஈரான் மற்றும் துருக்கிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. இது மற்ற நாடுகளுக்கு பிடிக்கவில்லை. எனவே கத்தாரை அச்சுறுத்தும் வகையில் அந்த நாட்டுக்கு பல்வேறு […]

வித்தியா கொலை விவகாரம்: ஊர்காவற்றுறை நீதவானுக்கு அழைப்பு

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை தொடர்பான சாட்சியப்பதிவிற்காக, ஊர்காவற்றுறை நீதவான் எம்.எம்.ரியாழுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ட்ரயல் அட் பார் விசாரணையின்போது, நீதிபதிகள் இவ் அறிவித்தலை விடுத்துள்ளனர். வித்தியா கொலை வழக்கு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வந்த நிலையில், நீதவான் ரியாழை எதிர்வரும் 24ஆம் திகதி மன்றில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு, ஊர்காவற்றுறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியான நிசாந்த சில்வாவையும் அன்றைய தினம் மன்றில் […]

சிறிலங்கா பிரதமரைச் சந்தித்தார் ஐ.நாவின் அரசியல் விவகாரச் செயலர்

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான செயலர் ஜெப்ரி பெல்ட்மன் இன்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். அலரி மாளிகையின் இன்று காலை இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இந்தச் சந்திப்பின் போது, சிறிலங்காவுக்கான ஐ.நாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி உனா மக்கோலியும், சிறிலங்காவின் சட்டம் , ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்கவும் உடன் இருந்தனர். சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமெரிக்கா சென்றிருந்த போது […]

அரசியலமைப்பு உருவாக்க விவகாரம் – இரண்டாக உடைந்தது கூட்டு எதிரணி

அரசியலமைப்பு உருவாக்க விவகாரத்தில், மகிந்த ராஜபக்ச ஆதரவு கூட்டு எதிரணி இரண்டாகப் பிளவுபட்டுள்ளது. இதையடுத்து, கூட்டு எதிரணியின் முக்கிய பங்காளிக் கட்சியான விமல் வீரவன்ச தலைமையிலான, தேசிய சுதந்திர முன்னணி அரசியலமைப்பு பேரவையில் இருந்து விலகியுள்ளது. தமது கட்சியைச் சேர்ந்த ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசியலமைப்பு பேரவையின் செயற்பாடுகளில் இருந்து வெளியேறுவதாக, சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம், விமல் வீரவன்ச நேற்று கடிதத்தைக் கையளித்தார். அதேவேளை,மகிந்த ராஜபக்ச தலைமையிலான […]