வித்தியா கொலை விவகாரம்: ஊர்காவற்றுறை நீதவானுக்கு அழைப்பு

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை தொடர்பான சாட்சியப்பதிவிற்காக, ஊர்காவற்றுறை நீதவான் எம்.எம்.ரியாழுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ட்ரயல் அட் பார் விசாரணையின்போது, நீதிபதிகள் இவ் அறிவித்தலை விடுத்துள்ளனர்.

வித்தியா கொலை வழக்கு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வந்த நிலையில், நீதவான் ரியாழை எதிர்வரும் 24ஆம் திகதி மன்றில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, ஊர்காவற்றுறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியான நிசாந்த சில்வாவையும் அன்றைய தினம் மன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்றைய சாட்சி விசாரணையில் குற்றப்புலனாய்வு பிரிவின் சாட்சியளித்ததையடுத்து, சாட்சி விசாரணைகள் எதிர்வரும் 24ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

About தமிழ்மாறன்

View all posts by தமிழ்மாறன் →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *