சு.கவின் மாநாட்டுக்கு மஹிந்த அணிக்கும் அழைப்பு!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 66ஆவது மாநாட்டு நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு மஹிந்த அணியான பொது எதிரணி உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படவுள்ளது”  என்று அக்கட்சியின் இளைஞர் அணியின் தலைவர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
கடந்த வருடத்தைவிட சிறப்பாக நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் நாட்டுக்குத் தேவையான அதிமுக்கிய தீர்மானங்கள் பல பிரகடனப்படுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவை சரிசெய்துகொள்வதற்கும், கட்சியின் பாரம்பரியத்தையும் கட்டுக்கோப்பையும் பாதுகாத்துக்கொள்வதற்கும் பொது எதிரணியினர் உட்பட சகலரும் இந்நிகழ்வில் ஓரணியில் திரளவேண்டும் எனவும் அவர் அறைகூவல் விடுத்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *