Other News

ஆஸ்திரேலியா: ஓரினச் சேர்க்கையாளர் திருமணத்துக்கு அங்கீகாரம் – தபால் ஓட்டு முறைக்கு மந்திரி

ஓரினச் சேர்க்கையாளர் திருமணத்துக்கு அங்கீகாரம் அளிப்பது தொடர்பாக தபால் ஓட்டு முறையை நடத்தலாம் என ஆஸ்திரேலியா நாட்டின் மூத்த மந்திரி தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் ஓரினச் சேர்க்கை திருமணத்துக்கு ஆதரவு பெருகி வருகிறது. இதைதொடர்ந்து, அந்த திருமணங்களை அரசு அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. பொதுமக்களின் இந்த கோரிக்கைக்கு மந்திரிகளில் சிலரும் ஆதரவு அளித்து வருகின்றனர். கடந்த ஆண்டு பொதுமக்களிடம் நடத்திய கருத்துக் கணிப்பில், ஓரினச் சேர்க்கையாளர் திருமணத்துக்கு […]

யாழ். துப்பாக்கிச் சூட்டுச்சம்பவம் நீதித்துறை மீதான தாக்குதல்: சிவஞானம்

நீதிபதி இளஞ்செழியன் மீது மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல் முயற்சியானது யாழ்ப்பாண மாவட்டத்தினதும், நீதித்துறை மீதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகவே பார்க்கப்படவேண்டும் என வட.மாகாணசபை அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “நல்லூர் கந்தசுவாமி ஆலய தென்மேற்கு வீதியில் வைத்து நேற்று (சனிக்கிழமை) மாலை யாழ்ப்பாண மாவட்ட மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் அவர்களை இலக்குவைத்து நடத்தப்பட்ட […]

யாழ். துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவருக்கு பொலிஸ் தலைமையகத்தில் அஞ்சலி!

யாழில் இடம் பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த நீதிபதி மா. இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலரின் உடல் தற்போது யாழ். பொலிஸ் தலைமையகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஏராளமான பொதுமக்கள் வருகைத்தருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் சிலாபத்தைச் சேர்ந்த 51 வயதாகிய ஹேமரத்ன என்பவர் உயிரிழந்திருந்தார். இவர் கடந்த 17 வருடங்களாக நீதிபதி இளஞ்செழியனின் நம்பிக்கைக்குரியவராகவும், அவரது மெய்ப்பாதுகாவலராகவும் பணியாற்றியிருந்தார் […]

சிறிலங்கா விடயத்தில் இந்தியா தவறிழைத்து விட்டது – சிவ்சங்கர் மேனன்

அண்டை நாடுகளைக் கைளும் விடயத்தில் இந்தியாவின் அணுகுமுறைகளில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றும், சிறிலங்கா விடயத்தில் இந்தியா தவறிழைத்து விட்டதாகவும், தெரிவித்துள்ளார் இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன். வெளிநாட்டு விவகாரங்களுக்கான இந்திய செய்தியாளர்களின் சங்கத்தில் நேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். “எமது அண்டை நாடுகளை கையாளும் முறையில் நாம் மாற்றங்களைச் செய்ய வேண்டிய தேவை உள்ளது. உங்களின் அண்டை நாடுகள், உங்களுக்கு மட்டுமே […]

ஜப்பானிய போர்க் கப்பலில் சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நிற்கும் ஜப்பானிய கடற்படையின் போர்க்கப்பல்களை, சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன மற்றும் பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்ன, சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன ஆகியோர் சென்று பார்வையிட்டனர். பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேரத்ன, ஜப்பானிய கடற்படையின் உலங்குவானூர்தி தாங்கி நாசகாரி கப்பலான இசுமோ மற்றும் சசகாமி ஆகிய போர்க்கப்பல்களுக்கு சென்று பார்வையிட்டார். இதன் போது சிறிலங்கா பாதுகாப்பு […]

துப்பாக்கி பிரயோகம்  நீதிபதி இளஞ்செழியன் மீதான இலக்கல்ல :  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் 

யாழ். நல்லூர் பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகம் நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படவில்லை என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். நீதிபதி இளஞ்செழியன் விசாரணை செய்யும் எந்த வழக்கு தொடர்பிலான விடயங்களும் இந்தச் சம்பவத்தின் பின் புலத்தில் இல்லை. விசாரணைகளின் மூலம் இந்த விடயம் உறுதியாகியுள்ளது. யாழ். நல்லூர் பகுதியில் வைத்து நேற்று மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் […]

இளஞ்செழியனுக்கு 17 வருடங்கள் நம்பிக்கைக்குரியவராக இருந்த மெய்ப்பாதுகாவலர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மீதான துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த அவரது மெய்ப்பாதுகாவலர்களில் ஒருவரான பொலிஸ் சார்ஜன்ட் சரத் ஹேமச்சந்திர (வயது – 51) இன்று அதிகாலை உயிரிழந்தார். அவர் ஆபத்தான கட்டத்தில் நேற்று மாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. இவரது பிஸ்டலைப் பறித்தே தாக்குதல்தாரி துப்பாக்கிச்சூடு நடத்தியிருந்தார். வலது வயிற்றுப்பகுதியால் உட்புகுந்த துப்பாக்கிச் சன்னம் இடது வயிற்றுப் பக்கத்தால் வெளியேறியுள்ளது. […]

நீதிபதி இளஞ்செழியன் இலக்குவைக்கப்பட்டமையை மிக வன்மையாகக் கண்டிக்கின்றது கூட்டமைப்பு!

யாழ்ப்பாணம் மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் பயணித்த வாகனத்தின் மீது யாழ்.நல்லூர் கோயில் பின் வீதியில் வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கின்றது எனக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- “யாழ். மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் வாகனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை தமிழ்த் தேசியக் […]

இலங்கை மீது ஐ.நா. உன்னிப்பான கவனம்! – சம்பந்தனிடன் எடுத்துரைத்தார் ஜெப்ரி பெல்ட்மன்

“இலங்கை அரசின் செயற்பாடுகளை ஐ.நா. செயலாளர் நாயகம் உட்பட்ட ஐ.நா. சமூகமானது உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருக்கின்றது.” – இவ்வாறு தெரிவித்தார் ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மன். “புதிய அரசமைப்பின் உள்ளடக்கமும் உருவாக்கும் நடைமுறைகளும் நீண்டகால அரசியல் தீர்வுக்கு மாத்திரமன்றி, நாட்டின் அபிவிருத்திக்கும் செழிப்புக்கும் மிக அத்தியாவசியமானதாகும்” எனவும் அவர் சுட்டிக்காட்டினார். இலங்கைக்கு விஜயம்செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் […]

மஹிந்த அணியைச் சேர்ந்த 11 பேர் அமைச்சுப் பதவிகளுடன் ஐ.தே.கவில் இணையத் தயாராம்!

“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் அரசில் இருந்து விலகி மஹிந்த அணியில் இணைந்தால் மஹிந்த அணியைச் சேர்ந்த 11 பேர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து அமைச்சுப் பதவிகளைப் பெறுவதற்குத் தயாராக இருக்கின்றனர். அது தொடர்பில் இரகசியப் பேச்சு நடைபெற்று வருகின்றது.” – இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் அணித் தலைவரும் முன்னாள் அமைச்சருமான சாந்த பண்டார சிங்கள ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் […]