Other News

நீதிபதி இளஞ்செழியன் மீதான தாகுத்தல்: மல்வத்து பீடமும் கடும் கண்டனம்!

யாழ்ப்பாணம் மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மீதான தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாக, பௌத்த மக்களின் முக்கிய பீடங்களில் ஒன்றான மல்வத்து பீடம் தெரிவித்துள்ளது. “இந்த ஆட்சியில் நீதித்துறை சுயாதீனமாகச் செயற்பட வேண்டும். ஆயுதங்களால் அதனை அச்சுறுத்தி அடிபணிய வைக்க முடியாது. இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் உடன் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். தாக்குதலாளிகள் சட்டத்தின் முன்நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்” என்று மல்வத்து பீடம் குறிப்பிட்டுள்ளது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பு!

சைட்டம் எனப்படும் மாலபே தனியார் வைத்திய கல்லூரியை பொதுவுடமையாக்குமாறு கோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று மீண்டும் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தில் குதித்துள்ளது. இன்று காலை 8 மணிமுதல் நாட்டின் அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படும். மாலபே தனியார் வைத்திய கல்லூரியை அரசுடமையாக்குமாறு கோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தொடர்ச்சியாக கடந்த மாதம் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்திருந்தது. எனினும், இம்மாத ஆரம்பத்தில் மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொள்வதாக அரச […]

டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளுக்கு போனில் மிரட்டல்: அய்யாக்கண்ணு பேட்டி

போராட்டத்தை கைவிடாவிட்டால் டெல்லியில் இரவு தூங்கும் போது லாரியை ஏற்றி கொலை செய்து விடுவோம் என்று தமிழக விவசாயிகளுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த தமிழக விவசாயிகள் 100-க்கும் மேற்பட்டோர் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் […]

என்.எல்.சி. தலைமை அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகையிட முயற்சி: வேல்முருகன் உள்பட 1000 பேர் கைது

26 நாட்கள் வேலை வழங்க வலியுறுத்தி என்.எல்.சி. தலைமை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் 1,000 பேரை போலீசார் கைது செய்தனர். நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். சுரங்கம் 1-ஏ பகுதியில் வேலை பார்க்கும் ஒப்பந்த தொழிலாளர்களின் வேலை நாட்களை 26-ல் இருந்து 19 நாட்களாக என்.எல்.சி. நிர்வாகம் குறைத்தது. இதனை […]

இந்தோனேசியாவில் போதை பொருள் கடத்தல்காரர்களை சுட்டுத்தள்ள அதிபர் உத்தரவு

இந்தோனேசியாவில் போதை பொருள் கடத்தல்காரர்களை சுட்டுத்தள்ளுங்கள் என்று சட்ட அமலாக்கல் பிரிவினருக்கு அதிபர் ஜோகோ விடோடோ உத்தரவிட்டார். இந்தோனேசியாவில் அந்த நாட்டின் அதிபர் ஜோகோ விடோடோ போதை பொருள் கடத்தல்காரர்களை ஒடுக்குவதற்கு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்த நிலையில், அங்கு நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவர் அரசியல் கட்சித்தலைவர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர், கைது செய்யும்போது எதிர்ப்பு தெரிவித்தால் போதை பொருள் கடத்தல்காரர்களை சுட்டுத்தள்ளுங்கள் என்று சட்ட […]

ஆப்கானிஸ்தான்: காபூலில் நடந்த கார் குண்டு வெடிப்பில் 24 பேர் பலி

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 24 பேர் பலியாகினர். ஆப்கானிஸ்தான் நாட்டின் காபூலின் மேற்குப் பகுதியில் ஷியா ஹசாரா பிரிவினர் அதிகம் வசித்து வருகின்றனர். இன்று காலை அந்த பகுதியில் பொதுமக்கள் வழக்கம்போல் தங்கள் பணிகளுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவன், வெடிகுண்டுகளை நிரப்பிய காரை பொதுமக்கள் மீது மோதச் செய்தான் இந்த திடீர் தாக்குதலில் சம்பவ […]

மெட்ரோ ரெயிலுக்காக சீனா பூமிக்கு அடியில் 31 மாடி ரெயில் நிலையம் கட்டுகிறது

சீனாவின் சாங்கிங் மாகாணத்தில் மெட்ரோ சுரங்க ரெயில் நிலையத்தில் பூமிக்கு அடியில் 94 மீட்டர் உயரத்தில் ரெயில் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. அங்கு 31 அடிக்கு மாடிகள் கட்டப்படுகிறது. ரெயில் போக்குவரத்தில் சீனா அதிவேகமாக முன்னேறி வருகிறது. புல்லட் ரெயில், சுரங்க பாதை ரெயில், பறக்கும் ரெயில் என சாதனை படைத்து வருகிறது. இந்த நிலையில் மெட்ரோ சுரங்க பாதை ரெயிலில் பூமிக்கு அடியில் அதிக ஆழத்தில் பல அடுக்குமாடி […]

யாழ். துப்பாக்கிச் சூடு: சந்தேக நபரை பிடிக்க இரு விசேட குழுக்கள்

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாக கருதப்படும் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில், சிவில் உடையுடன் கூடிய இரண்டு விசேட விசாரணைக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் 30 இற்கும் மேற்பட்டவர்களிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாகவும், 2 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும், சூப்பாக்கிச் சூட்டுடன் […]

நீதிபதியை இலக்கு வைத்த துப்பாக்கிச்சூடு: ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறார் சபூர்தின்

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்டதாக கருதப்படும் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் சிரேஸ்ட சட்டத்தரணி எம்.எம்.சபூர்தின் தெரிவித்தார். குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைக் கண்டித்து இன்று (திங்கட்கிழமை) மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்டனர். இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “சனிக்கிழமை மாலை நல்லூரில் நீதவான் இளஞ்செழியனை […]

அர்ஜூன் அலோசியசின் தொடர்பாடல் சாதனங்களை புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்க உத்தரவு

மத்திய வங்கி முறி விசாரணை தொடர்பில் அர்ஜூன் அலோசியசின் கையடக்க தொலைபேசி மற்றும் மடிகணிணி உள்ளிட்ட தொடர்பாடல் உபகரணங்களை மத்திய புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் திறைசேரி முறி விநியோகம் தொடர்பிலான விசாரணை இன்று நடைபெற்றது. இதன் போது வழங்கப்பட்ட சாட்சிக்கு அமைவாகவே ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பிலான விசாரணைகள் முடியும் வரை, 2015 தொடக்கம் […]