Other News

பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு தொடர்ந்தும் உதவுவோம்: கனேடிய பிரதமர்

போரினால் பல துன்பங்களுக்கு முகம் கொடுத்த இலங்கைத் தமிழர்களுக்கு தமது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதாக கனேடிய பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடியா குறிப்பிட்டுள்ளார். கறுப்பு ஜூலையை முன்னிட்டு அவர் விடுத்துள்ள செய்தியின் மூலமாகவே இதனைக் கூறியுள்ளார். மேலும், இலங்கையில் பொறுப்புக் கூறலானது அவசியம் என ஜஸ்ட்டின் வலியுருத்தியுள்ளதோடு, பாதிக்கப்பட்ட மக்களின் துயர்நீக்க தொடர்ந்தும் கனடா தமது உதவிகளை வழங்கும் எனவும் தெரிவித்துள்ளார். 1983ஆம் ஆண்டு ஜுலையில் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட […]

இராணுவத்தை சர்வதேசத்திடம் காட்டிக்கொடுக்கவே காணாமல்போனோர் சட்டமூலம்

இராணுவத்தையும், போர் வெற்றி வீரர்களையும் சர்வதேசத்திடம் காட்டிக்கொடுப்பதற்காகவே காணாமால்போனோர் அலுவலகம் உருவாக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். மல்வத்து பீடம் மற்றும் மாகாநாயகர்களுக்கு அவர் இன்று அனுப்பியுள்ள அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பமிட்டுள்ள காணாமல்போனர் சட்டமூலம் தொடர்பில் மல்வத்து பீடம் மற்றும் மாகாநாயக்க தேரர்களின் கவனம் செலுத்த வேண்டிய ஆறு காரணிகளாவது உள்ளன. சாட்சிகளைப் பெற்றுக்கொண்டு நீதிமன்றம் செல்ல முடியும், சர்வதேச ரீதயில்நிதியை பெற்றுக்கொள்ள […]

மட்டக்களப்பில் அதிரடிப் படையினர் துப்பாக்கி சூடு! ஒருவர் மரணம்

மட்டக்களப்பு – கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முந்தல்குமாரவேலியார் கிராமம் பகுதியில் விசேட அதிரடிப் படையினர் துப்பாக்கி சூடு நடத்திய போது, தப்பிச் செல்ல முற்பட்ட ஒருவர் ஆற்றில் குதித்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மணல் ஏற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவர்களை கைது செய்ய விசேட அதிரடிப் படையினர் சென்று எச்சரிக்கை விடுத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட போது இரு இளைஞர்கள் ஆற்றில் பாய்ந்துள்ளனர். குறித்த இரண்டு இளைஞர்களும் சகோதரர்கள் என பொலிஸார் […]

இளஞ்செழியன் இலக்குவைக்கப்பட்டமைக்கு விக்கி கடும் கண்டனம்! – உயிரிழந்த மெய்ப்பாதுகாவலருக்கு ஆழ்ந்த இரங்கல்

“யாழ்.நல்லூர் பகுதியில் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை மிக வன்மையாகக் கண்டிக்கின்றேன். இந்தத் தாக்குதல் சம்பவத்தில் உயிர்நீத்த பொலிஸ் சார்ஜன்ட் சரத் ஹேமச்சந்திரவின் மறைவு அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.” – இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு விக்னேஸ்வரன் கூறியுள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- கடமையில் ஈடுபட்டிருந்தபோது உயிர் […]

இளஞ்செழியன் உட்பட அனைத்து நீதிபதிகளினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துக! – பொலிஸ்மா அதிபருக்கு ஜனாதிபதி பணிப்புரை 

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் பயணம்செய்தவேளை நேற்றுமுன்தினம் மாலை  நல்லூர் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தை வன்மையாகக் கண்டித்துள்ளார்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. அந்தச்  சம்பவத்தில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரி சரத் ஹேமச்சந்திரவின் மறைவுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவத்தையடுத்து நீதிபதி இளஞ்செழியனின் பாதுகாப்பு குறித்து கவனஞ்செலுத்தியுள்ள ஜனாதிபதி, அனைத்து நீதிபதிகளினதும் பாதுகாப்பு தொடர்பில் விசேட நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துமாறு பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். விசேட […]

மஹிந்த அணியின் அரச எதிர்ப்புத் தினமன்று தேசிய அரசு பிளவடையும் சாத்தியம்!

தேசிய அரசிலிருந்து விலகி  நாடாளுமன்றில் சுயாதீனமாக இயங்கப்போவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 18 உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் அறிவித்திருந்த நிலையில், இவர்களில் சிலர் கடந்த வாரம் கூட்டு எதிரணியுடன் இரகசிய சந்திப்பொன்றை நடத்தியுள்ளனர் எனத் தெரியவருகின்றது. தேசிய அரசை இரண்டாக பிளவுப்படுத்தும் நோக்கில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பலவழிகளிலும் நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றார். மக்கள் மத்தியிலும், நாட்டில் தொழிற்சங்கங்கள் மற்றும் சில அரச மற்றும் தனியார் தரப்பினருடன் அரசுக்கு ஏற்பட்டுள்ள முரண்பாடு […]

சம்பந்தன் – விக்கி சந்திப்பு! – கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுடனான பேச்சின் பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கை எனத் தீர்மானம் 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் வடக்கு மாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனுக்குமிடையிலான சந்திப்பு கொழும்பிலுள்ள ஜனாதிபதி சட்டத்தரணி கனகஈஸ்வரனின் இல்லத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வடக்கு மாகாண சபையின் நிலைமைகள் தொடர்பில் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுடன் சந்தித்துக் கலந்துரையாடிய பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது என இணக்கம் காணப்பட்டுள்ளது. அத்துடன், ஊழல், மோசடிகள் குறித்து தெரிவுக்குழு அமைக்கப்படவேண்டும் எனக் […]

இளஞ்செழியனுடன் ஜனாதிபதி தொலைபேசியில் உரையாடல்

யாழ்ப்பாண பிரதான நீதவான் நீதிமன்றின் நீதிபதி இளஞ்செழியனுடன் தொடர்பு கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இடம்பெற்ற சம்பவத்திற்கு கவலை வெளியிட்டுள்ளார். யாழ். நல்லூர் பின்வீதியில் நேற்றைய தினம் நீதிபதி இளஞ்செழியனை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்த நீதிபதியின் மெய்ப்பாதுகாவலரின் சடலம் தற்பொழுது சிலாபத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றது. சடலம் மாங்குளம் பகுதியில் கொண்டு செல்லப்பட்ட நிலையில், நீதிபதி இளஞ்செழியனுக்கு தொலைபேசி மூலம் அழைப்பை ஏற்படுத்திய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, […]

நேரடி பேச்சுவார்த்தை மூலம் பதற்றத்தை தணிக்க வேண்டும்: இந்தியா, சீனாவுக்கு அமெரிக்கா வேண்டுகோள்

இந்தியாவும் சீனாவும் நேரடி பேச்சுவார்த்தை மூலம் எல்லைப் பதற்றத்தை தணிக்க வேண்டும் என அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது. சிக்கிம் எல்லை அருகே இந்தியா-சீனா-பூடான் நாடுகள் சந்திக்கும் முச்சந்திப்பான டோக்லாம் பகுதியில் சீன ராணுவம் மேற்கொண்ட சாலைப் பணிகளை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளுக்கு ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு இந்திய ராணுவம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு […]

ஜெருசலேமில் தொடரும் வன்முறை சம்பவங்கள்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டம் நாளை கூடுகிறது

இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையில் நடந்து வரும் வன்முறை சம்பவங்கள் குறித்து, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் ஆலோசனை கூட்டம் நாளை நடைபெறுகிறது. இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே நீண்ட நெடுங்காலமாக பகை நிலவி வருகிறது. ஆக்கிரமிப்பு பாலஸ்தீன பகுதிகளில், குறிப்பாக கிழக்கு ஜெருசலேம் உள்ளிட்ட பகுதிகளில் இஸ்ரேல் வலுக்கட்டாயமாக குடியிருப்புகளை அமைத்து வருகிறது. இதை தடுத்து நிறுத்தக்கோரி, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கடந்த டிசம்பர் மாதம் ஓட்டெடுப்பு மூலம் தீர்மானம் […]