Other News

வவுனியா, இரட்டைப் பெரியகுளத்தில் விசமிகளால் மயானத்திற்கு தீ வைப்பு!

வவுனியா இரட்டைப் பெரியகுள மயானத்திற்கு விசமிகளால் இன்று (செவ்வாய்க்கிழமை) தீ வைக்கப்பட்டுள்ளது. வவுனியா ஏ9 வீதிக்கருகில் அமைந்துள்ள இரட்டைப் பெரியகுள மயானத்திற்கே இன்று மதியம் தீ வைக்கப்பட்டதில் மயானம் முழுவதும் எரிந்து நாசமாகியுள்ளது. இந்நிலையில் இதனை அவதானித்த இரட்டைப் பெரியகுளப் பிரிவுப் பொலிஸார் வவுனியா நகரசபைத் தீயணைப்பு பிரிவினருக்கு தகவல் அளித்துள்ளனர். இதனை அடுத்து உடன் விரைந்த நகரசபை தீயணைப்புப் பிரிவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயினை அருகில் இருந்த […]

மலையகத்தில் வைத்திய சேவைகள் முடக்கம்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று காலை 8 மணி முதல் மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளதாள் மலையகத்தில் வைத்திய சேவைகள் முடக்கம். வைத்திய பீட மாணவ செயற்குழுவின் ஏற்பாட்டாளர் ரயன் ஜயலத்தை கைது செய்வதற்கு முற்பட்ட சந்தர்ப்பத்தில் ஏற்பட்ட நிலை தொடர்பில் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தும், சைட்டம் நிறுவனத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் மலையகத்தில் உள்ள சில வைத்தியசாலைகளில் சில வைத்தியர்கள் கடமையில் ஈடுப்பட்டிருந்தாலும், சில […]

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீதுதான் துப்பாக்கிச் சூட்டை கண்டித்து வட, கிழக்கில் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள்

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைக் கண்டித்து வடக்கு,கிழக்கில் இன்று பல்வேறு தரப்பாலும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் கிளிநொச்சி டிப்போச்சந்தி பசுமை பூங்காவில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழு முன்னெடுக்கப்பட்டுள்ளது. மன்னாரிலும் ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் இந்த […]

இளஞ்செழியன் மீதான தாக்குதல் நீதித்துறைக்கு விடுக்கப்பட்ட சவால் : இ.தொ.கா. கண்டனம்

யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மீதான துப்பாக்கி சூட்டுச்சம்பவம் இலங்கையில் நீதித்துறைக்கு சவால் விடும் நோக்கில் அமைந்துள்ளதாக ஊவா மாகாண அமைச்சரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவருமான செந்தில் தொண்டமான் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தற்போது நாட்டில் நல்லாட்சி இடம்பெற்று வருகின்றது. அதேநேரம் வடக்கில் யுத்த சூழ்நிலை இல்லாதொழித்து மக்கள் எவ்வித அச்சசும் இன்றி நிம்மதியாக வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறான சூழ்நிலையில் நீதிபதி […]

உயிரிழந்த மெய்ப்பாதுகாவலருக்கு யாழ். பல்கலையில் அஞ்சலி!

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்குவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டின்போது நீதிபதியின் உயிரைப் பாதுகாத்து தன்னுயிரைத் துறந்த மெய்ப்பாதுகாவலரான பொலிஸ் அதிகாரி சரத் ஹேமச்சந்திரவுக்கு நேற்று யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ்.பல்கலைக்கழத்தில் அனைத்துப்பீட மாணவர்களும் இணைந்து அஞ்சலி செலுத்தினார்கள். அன்னாரின் உருவப்படம் வைக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன், மெழுகுவர்த்திகளும் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

வடக்கு, கிழக்கில் இன்று கண்டனப் பேரணிகள்!

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தை கண்டித்து, வடக்கு கிழக்கில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு கண்டனப் பேரணிகள் நடைபெறவிருக்கின்றன. இந்தக் கண்டனப் பேரணிகளை வடக்கு, கிழக்கு ஒருங்கமைப்புக் குழு ஏற்பாடு செய்துள்ளது. அந்தக் குழு அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- “யாழ்ப்பாணம் நல்லூர்ப்பகுதியில் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி அவர்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை, மிக வன்மையாகக் கண்டிக்கின்றோம். இந்தச் சம்பவமானது […]

நீதிபதி இளஞ்செழியன் மீதான தாக்குதலுக்கு எதிராக வடக்கு முழுவதும் போராட்டங்கள்!

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனை இலக்குவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வடக்கு மாகாணம் முழுவதும் நேற்றுப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. வடக்கு மாகாண தனியார் பஸ் உரிமையாளர்கள் நேற்றுப் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தனியார் பஸ் சேவைகள் வடக்கில் நேற்று இடம்பெறவில்லை. அதேவேளை, வடக்கு மாகாணத்துக்கு உட்பட்ட திணைக்களங்கள் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் கவனயீர்ப்புப் போராட்டங்கள் நேற்று முன்னெடுக்கப்பட்டன. திணைக்களங்கள் மற்றும் […]

இம்மாத இறுதிக்குள் கேப்பாப்பிலவு காணிகள் விடுவிக்கப்பட வேண்டும்! – ஜனாதிபதிக்கு சம்பந்தன் அவசர கடிதம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்பிலவில் காணிகள் விடுவிக்கப்படும் என்று ஒரு மாதத்துக்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய வாக்குறுதியை மீளவும் நினைவூட்டிய எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், அந்தக் காணிகள் மாத இறுதிக்குள் விடுவிப்பதற்கு உடன் நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைத்துள்ள அவசர கடிதத்திலேயே அவர் மேற்படி கோரிக்கையை முன்வைத்துள்ளார். அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:- “கடந்த மே மாதம் 18ஆம் திகதி நானும் நாடாளுமன்ற உறுப்பினர் […]

காணாமல்போனோர் குறித்தும் ஜனாதிபதிக்கு சம்பந்தன் கடிதம்!

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயம் தொடர்பிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அவசர கடிதம் அனுப்பிவைத்துள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- “காணாமல்போனவர்களுடைய விடயம் மிகவும் பாரதூரமான ஒரு விடயம் என்பதையும், இப்பிரச்சினைக்கான தீர்வைக் கோரி வடக்கு, கிழக்கில் காணாமல்போனவர்களின் குடும்ப உறவினர்களால் பல மாதகாலமாகப் போராட்டங்கள் நடாத்தப்பட்டு வருவதையும் தாங்கள் அறிவீர்கள். இந்தக் குடும்பங்களில் அதிகம் பேர் தமது உறவினர்களைப் பாதுகாப்புப் படையினரிடம் கையளித்தவர்கள் அல்லது தமது உறவினர்கள் பாதுகாப்புப் […]

நல்லூர் சம்பவம் தொடர்பில் அரசு விழிப்பாகவே இருக்க வேண்டும்! – மஹிந்த கூறுகின்றார் 

யாழ்.நல்லூரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில் அரசு ஆழகாக சிந்தித்துச்செயற்படவேண்டும் எனக் கூறியுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, விடுதலைப்புலிகள் அமைப்பு உருவாகும் காலப்பகுதியில் இவ்வாறான சம்பவங்களே வடக்கில் இடம்பெற்றன எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். அம்பாந்தோட்டை, வீரகெட்டிய பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர், நல்லூர் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் குறித்து ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:- “யாழ்ப்பாணத்தில் பொலிஸ்அதிகாரிகள் இருவர் […]