வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவை பதவி விலகுமாறு ஜனாதிபதி மைத்திரி மற்றும் பிரதமர் ரணில் ஆகியோர் அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிணை முறி விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அர்ஜூன் அலோசியஸூடன் ரவி கருணாநாயக்க தொடர்புகளை பேணி வந்துள்ளதாகவும், சில வரப்பிரசாதங்களை பெற்றுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. முறிகள் விநியோகம் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ரவி கருணாநாயக்கவிடம் […]
Other News
கிழக்கு மாகாண சபையை தமிழ் மக்கள் கைப்பற்றவேண்டும்: கருணா
அனைத்து தமிழ் மக்களும் அணிதிரண்டு கிழக்கு மாகாண சபையைக் கைப்பற்றவேண்டும் என தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் கருணா தெரிவித்தார். தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னணிக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் நேற்று (சனிக்கிழமை) மட்டக்களப்பு கல்லடியில் உள்ள கட்சித் தலைமையத்தில் இடம்பெற்றது. இதன் போது ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே கருணா இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”தமிழ் மக்கள் அரசியல் விழிப்படையவேண்டும். எங்களுடைய […]
பளை பிரதேசக் காடுகளில் ஆபத்தான வெடிபொருட்கள்!
கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவிலுள்ள காடுகளில் ஆபத்தான வெடிபொருட்கள் காணப்படுவதாக வன வளப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தங்களது பிரதேச எல்லைக்குட்பட்ட காடுகளில் பரிசோதனைக்காகச் சென்ற போதே அங்கு ஆபத்தான வெடிபொருட்கள் காணப்படுவதனை அவதானித்துள்ளனர். குறித்த பகுதிகளில் வெடிக்காத நிலையில் காணப்படும் வெடிபொருட்கள் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் எவ்வேளையிலும் ஆபத்தை ஏற்படுத்தலாம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே உரிய தரப்பினர் இவற்றை அடையாளம் கண்டு, அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் […]
யுத்தம் முடிவடைந்தும் மக்கள் பின்தங்கிய நிலையிலேயே உள்ளனர்: மகேஸ்வரன்
மட்டு.மாவட்டத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் எவ்வித அபிருத்தியும் அடையாது இன்னமும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது என ஜக்கிய தேசிய கட்சி மட்டு.அமைப்பாளர் வி.மகேஸ்வரன் தெரிவித்தார். ஜக்கிய தேசிய கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைமைக் காரியாலயம் கல்லடியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”இந்த மாவட்டத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரதேசங்கள் எவ்வித அபிருத்தியும் அடையாது […]
ஹஜ் யாத்திரிகர்கள் விடுமுறை பெறுவதில் இருந்த சிக்கலுக்கு தீர்வு: நஸீர் அஹமட்
கிழக்கு மாகாண ஆசிரியர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் ஹஜ் யாத்திரை செல்வதற்காக விடுமுறை பெறுவதில் இருந்த சிக்கலுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்தார். இது தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவுடன் தான் பிரத்தியேகமான பேச்சுவார்த்தை நடத்தியதன் பயனாக இந்த விவகாரத்திற்கு சுமுகமான தீர்வைக் காண ஆளுநர் உறுதியளித்துள்ளதாக முதலமைச்சர் மேலும் தெரிவித்தார். கிழக்கு மாகாண ஆசிரியர்கள் மற்றும் […]
நீதியின் அடிப்படையிலேயே உரிமைகளைப் பெற வேண்டும்: இரா.சம்பந்தன்
தமிழர்கள் ஆகிய நாம் அநீதியாக எதையும் கேட்காது நீதியின் அடிப்படையில் எமது உரிமைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ். ரில்கோ விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற தமிழாராய்ச்சி மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “நாம் அனைவரும் தமிழர்கள் என்ற வகையில் ஒரு குடும்பத்தினைச் […]
மக்கள் சுதந்திரமாக செயற்படும் நிலைமையினை நல்லாட்சியே உருவாக்கியது: ரணில்
கடந்த காலங்களைப் போல் அல்லாது தற்போது மக்கள் சுதந்திரமாக செயல்படும் நிலையை உருவாக்கியது நல்லாட்சி அரசாங்கமே என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஹற்றன் நகரில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் பிரவேசத்தின் 40 ஆண்டு நாடாளுமன்ற நிறைவையொட்டி இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”இந்த நாட்டில் நாம் அனைவரும் ஒன்றினணந்து நாட்டின் ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேனவை […]
மேற்குலகின் தேவைப்பாடு சமஷ்டியே! – தனிநாட்டைக் கொடுக்கவே புதிய அரசமைப்பு என்கிறார் விமல்
“நாட்டை இரண்டாகப் பிரித்து சமஷ்டி அடிப்படையில் விடுதலைப்புலிகளுக்குத் தனிநாட்டைக் கொடுக்கும் ஒரேயொரு நோக்கத்துக்காகத்தான் அரசமைப்பு தயாரிக்கப்படுகின்றது. மேற்கு நாடுகளின் தேவை இதுதான்.” – இவ்வாறு மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:- “புதிய அரசமைப்பை உருவாக்கும் அரசமைப்புச் சபையிலிருந்து எமது கட்சிகளின் ஐந்து உறுப்பினர்களும் விலகிவிட்டோம். அதேபோல் வழிநடத்தல் குழுவிலும் நாம் உறுப்பினர்களாக இல்லை. உப குழுக்களிலும் எமது உறுப்பினர்கள் […]
கோட்டாவை கைதுசெய்து வீண் பாவம் தேடாதீர்கள்! – அரசிடம் கோருகிறது மஹிந்த தரப்பு
புலிப் பயங்கரவாதத்தில் இருந்து நாட்டைக் காத்த பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபயவைக் கைதுசெய்து வீண் பாவத்தைத் தேடிக்கொள்ளாதீர்கள் என்று மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- “இந்த அரசுக்கும் புலம்பெயர் தமிழர்களுக்கும் புலிகளுக்கும் சர்வதேச சக்திகளுக்கும் எதிரியாகத் திகழ்பவர் கோட்டாபய. அவர் புலிகளைத் தோற்கடித்தமைதான் இதற்குக் காரணம். இவரை […]
ஞாபகமறதி நோய் குணமாகும்வரை ரவியை வெளிநாடு செல்லவிடாதீர்! – ஜனாதிபதியிடம் கம்மன்பில வேண்டுகோள்
தனக்கு எதுவுமே ஞாபகமில்லை என சகட்டுமேனிக்கு சாதித்துவரும் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு ஏற்பட்டிருக்கும் ‘டிமென்ஷியா’ எனும் ஞாபகமறதி நோய் குணமாகும்வரை அவரை வெளிநாடுகளில் நடைபெறும் மாநாடுகளுக்கோ அல்லது ஏனைய விவகாரங்களுக்கோ அனுப்பவேண்டாம் என்று புதிய ஹெல உறுமய கட்சியின் தலைவரும் மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் ஜனாதிபதிக்கு தெரிவித்துள்ள மேலதிக விவரங்கள் வருமாறு:- “அர்ஜுன் […]





