மன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாப்பாமோட்டை பிரதேச காட்டுப்பகுதியில் இருந்து இன்று (வெள்ளிக்கிழமை) காலை சக்தி வாய்ந்த வெடி பொருட்கள் சிலவற்றை பாதுகாப்புத்தரப்பினர் மீட்டுள்ளனர். அடம்பன் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் கிராம அலுவலகர் ஊடாக பாப்பாமோட்டை காட்டுப்பகுதியில் வெடிக்காத நிலையில் உள்ள வெடி பொருட்கள் தொடர்பில் மன்னார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த நிலையில் மன்னார் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைவாக குறித்த வெடி பொருட்கள் […]
Other News
காணாமல் ஆக்கப்பட்டோருக்கு தீர்வை வழங்க ரோஹித்த தயார்!
வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் பெயர் விபரங்களை சத்தியக்கடதாசி ஒன்றின் மூலம் தம்மிடம் ஒப்படைக்குமாறும், அதன் பின்னர் உரிய அதிகாரிகளிடம் கலந்துரையாடி தீர்வை பெற்றுத்தருவதாகவும் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார். தமிழர் தாயகத்தில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால், கிழக்கு ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் 156 நாட்களை கடந்துள்ளது. எனினும், தமது பிரச்சினைகளுக்கு இதுவரை தீர்வை பெற்றுக்கொடுக்காத நிலையில், இன்றைய தினம் கிழக்கு […]
வடக்கு – கிழக்கு மாகாணங்கள் மீள இணைக்கப்படாவிட்டால தமிழர்களின் தனித்துவம் இல்லாமல் போய்விடும்
வடக்கு – கிழக்கு மாகாணங்கள் மீள இணைக்கப்படாவிட்டால, இன்னும் 20 வருடங்களில் தமிழர்களின் தனித்துவம் இல்லாமல் போய்விடுமென வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு கருத்துத் தெரிவித்துள்ள வடக்கு முதல்வர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கடந்த 1949ஆம் ஆண்டை விட தற்போது அங்கு வாழும் சிங்கள மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதென முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில, புதிய அரசியலமைப்பில் தமிழர்களின் சுயாட்சி ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால் தனித்துவம் அற்றுப்போய்விடும் என அவர் […]
சீன கடற்படையின் பாரிய மிதக்கும் மருத்துவமனை சிறிலங்கா வருகிறது
சீன கடற்படையின் மிக நவீனமான மருத்துவமனைக் கப்பலான, ஆர்க் பீ்ஸ் நல்லெண்ணப் பயணமாக நாளை மறுநாள் சிறிலங்காவுக்கு வரவுள்ளது. இந்தக் கப்பல் எதிர்வரும் 9ஆம் நாள் வரை கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்கும் என்று சீன தூதரகம் அறிவித்துள்ளது. எதிர்வரும் 8ஆம் நாள், இந்த மிதக்கும் மருத்துவமனையில் இலங்கையர்களுக்கு இலவச மருத்துவ உதவிகள் வழங்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்க் பீ்ஸ் கப்பல், சீனாவினால் கட்டப்பட்ட மிகப் பெரிய மருத்துவமனைக் கப்பல் என்பது […]
படுகொலைசெய்யப்பட்ட அரசியல் கைதிகளுக்காக 8ஆம் திகதி வடக்கில் நினைவேந்தல் நிகழ்வுகள்!
இலங்கை சிறைச்சாலைகளில் படுகொலைசெய்யப்பட்ட அரசியல் கைதிகளை நினைவுகூரும் வகையில் வடக்கில் எதிர்வரும் 8ஆம் திகதி நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. இதற்குரிய ஏற்பாடுகளை அரசியல் கைதிகளை விடுதலைசெய்வதற்கான தேசிய அமைப்பு செய்துள்ளது. இது குறித்து அவ்வமைப்பின் ஏற்பாட்டாளர் அருட்தந்தை மா.சக்திவேல் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:- “அரசியல் கைதிகளான நிமலருபன், டில்ருக்ஷன் ஆகிய இருவரும் அநுராதபுரம் சிறைச்சாலையில் தாக்குதலுக்குள்ளானவாறு 2012ஆம் ஆண்டு கொல்லப்பட்டனர். இவர்களுடைய 5ஆம் ஆண்டு நினைவேந்தலும், இதுவரை கொல்லப்பட்ட […]
மைத்திரி – ரணில் தலைமையிலான நல்லாட்சியைக் கவிழ்க்க தென்னிலங்கையில் சதி! -கூட்டமைப்பு குற்றச்சாட்டு
“தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்சினைகள் குறித்தும் மைத்திரி ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசுடன் நாம் தொடர்ந்து பேசிவருகின்றோம். இந்நிலையில், இந்த ஆட்சியைக் கவிழ்க்க தென்னிலங்கையில் சதி முயற்சியில் சிலர் ஈடுபடுகின்றனர்.” – இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள்முதல் அரசியல் பிரச்சினைகள்வரை அனைத்துப் பிரச்சினைகள் குறித்தும், […]
ஆணைக்குழுவுக்கு ரவி தரும் விளக்கங்களின் பின்னரே அவர் பற்றிய முடிவை எடுக்கும் ஐ.தே.க.!
பிணைமுறி மோசடி விசாரணை ஆணைக்குழுவில் முன்னாள் நிதியமைச்சரும் தற்போதைய வெளிவிவகார அமைச்சருமான ரவி கருணாநாயக்கவின் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு அவர் அளிக்கப்போகும் பதில்களின் அடிப்படையிலேயே அவர் பற்றிய முடிவை ஐக்கிய தேசியக் கட்சி எடுக்குமென அக்கட்சியின் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் இது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடிய பின்பே இந்த முடிவெடுக்கப்பட்டிருப்பதாகவும் அவ்வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஐ.தே.க. […]
கூட்டு அரசைத் தொடர்வதே பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு! – அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா
“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து அமைச்சர்கள் விலகினால் தனிக் கட்சியொன்று ஆட்சியமைக்க நேரிடலாம். அப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைத்தான் பெறவேண்டியேற்படும். அப்படி நடந்தால் ஏற்படும் ஆபத்துக்களுக்கு பிரச்சினைகளுக்கு எம்மால் இலகுவில் முகங்கொடுக்கமுடியாது. ஆகவே, கூட்டு அரசுதான் எல்லாப் பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு.” – இவ்வாறு அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “நாடாளுமன்றில் இரண்டு பிரதான கட்சிகளுக்கும் தலா 82 என்ற அடிப்படையில்தான் ஆசனங்கள் உள்ளன. […]
ரணிலை வெற்றிபெற வைக்க ஐ.தே.க. அமைப்பாளர்களுக்கு தலா 50 இலட்சம் ரூபா பணம்! – மஹிந்த அணி தெரிவிப்பு
2015 நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தோல்வியைத் தவிர்த்து ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்குவதற்கு அந்தக் கட்சியின் அமைப்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் 50 இலட்சம் ரூபா பணம் வழங்கப்பட்டது என்றும், அந்தப் பணம் மத்திய வங்கிப் பிணைமுறி மோசடி மூலம் பெறப்பட்டது என்றும் மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:- “பிரதமரின் திருட்டைத் தேடுவதற்காக ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை அமைத்துள்ள அதிசயமொன்று இந்த […]
அரசை வீழ்த்த மஹிந்த அணி சதித் திட்டம்! – சஜித் தெரிவிப்பு
“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவரும் சதி நடவடிக்கைகளை முறியடிப்பதற்காகவே எரிபொருள் விநியோகம் அத்தியாவசிய சேவையாக மாற்றப்பட்டுள்ளது” என்று அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். இது தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு அவர் மேலும் கூறியதாவது:- “நாம் படையினரை அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே பயன்படுத்துகிறோம். ஆனால், நாம் அவர்களைக் கூலித் தொழிலாளிகள்போல் பயன்படுத்துகிறோம் என்று பஸில் ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார். அவர்களின் ஆட்சியில் படையினர் எவ்வளவு கேவலமாக […]





