Other News

விக்கிக்குக் கீழ் அமைச்சராக இருப்பதற்கு விரும்பவில்லை! – பதவி விலகிய சத்தியலிங்கம் தெரிவிப்பு 

வடக்கு மாகாண சுகாதா அமைச்சர் ப.சத்தியலிங்கம் பதவி விலகியுள்ளார். அரசியல் உள்நோக்கத்துடனேயே அமைச்சரவையிலிருந்து தன்னை வெளியேற்ற வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எடுத்துள்ளார் என்பதைத் தன்னால் புரிந்துகொள்ள முடிவதால் அவருக்குக் கீழ் ஓர் அமைச்சராக இருக்க விரும்பவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். “கட்சியின் தீர்மானத்துக்கு கட்டுப்பட்டு நான் எனது பதவியிலிருந்து விலகுகின்றேன்” என்று தெரிவித்து வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு தனது பதவி விலகல் கடிதத்தை அவர் […]

கமல்ஹாசனின் அரசு மீதான ஊழல் குறித்த விமர்சனத்தை நான் வரவேற்கிறேன்

அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதால் தனது படங்களுக்கு வரிவிலக்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதாக தயாரிப்பாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

டாடா ஸ்டீல் நிர்வாக இயக்குநரின் ஆண்டு சம்பளம்

டாடா ஸ்டீல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் (இந்தியா மற்றும் தென் கிழக்கு ஆசியா) டி.வி. நரேந்திரனின் கடந்த நிதி ஆண்டு சம்பளம் ரூ.8.17 கோடியாக இருக்கிறது.

ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக ரூ.3 லட்சம் கோடி நஷ்டஈடு தர தயார்: இங்கிலாந்து அறிவிப்பு

ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவதற்கு நஷ்ட ஈடாக ரூ.3 லட்சம் கோடி தர தயாராக இருப்பதாக இங்கிலாந்து அறிவித்துள்ளது. ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக இங்கிலாந்து மக்கள் பொது வாக்கெடுப்பு மூலம் விருப்பம் தெரிவித்தனர். அதை தொடர்ந்து ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவதாக இங்கிலாந்து பிரதமர் தெரசா மே அறிவித்தார். அதற்கான காலகெடு முடிவடையும் நிலையில் உள்ளது. எனவே, அது குறித்த பேச்சுவார்த்தை தொடங்கி நடந்து வருகிறது. இந்த நிலையில் […]

ஐக்கிய நாடுகள் சபையின் புதிய பொருளாதார தடைகள்: வடகொரியா கடும் கண்டனம்

வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்கா தாக்கல் செய்த பொருளாதார தடைக்கான தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதற்கு வடகொரியா கண்டனம் தெரிவித்துள்ளது. உலக நாடுகளின் எதிர்ப்புகள் மற்றும் ஐ.நா சபையின் கட்டுப்பாடுகளை மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகின்றது. குறிப்பாக கடந்த மாதத்தில் மட்டும் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை இரண்டு முறை பரிசோதித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், வடகொரியா […]

வடக்கின் அமைச்சுக்கள் தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் முதலமைச்சரிடம்!

வட.மாகாண சபையின் அமைச்சுப் பதவிகள் குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பிலேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் முதலமைச்சரின் இல்லத்தில் இடம்பெற்ற மேற்படி கலந்துரையாடலில் 3 முக்கிமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருந்தன. இவ்வாறான சந்திப்புக்கள் தொடரும் எனவும் புதிய அரசியலமைப்புத் தொடர்பாக விரைவில் சந்தித்துப் போசுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் […]

எஞ்சியுள்ள முன்னாள் போராளிகளையும் அழிக்க அரசாங்கம் புதிய சதி: சிறிதரன்

வாள்வெட்டுச்சம்பவங்களுடன் தொடர்பு படுத்தி அவர்களைக் கைது செய்வதன் மூலம் எஞ்சியுள்ள முன்னாள் போராளிகளையும் அழிக்க அரசாங்கம் புதிய சதியினை முன்னெடுத்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் நேற்றையதினம் (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “அரசாங்கம் 12 ஆயிரத்திற்கு மேற்பட்ட போராளிகளுக்கு புனர்வாழ்வளித்து சமூகத்துடன் இணைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. ஆனால் இன்று வன்முறைச்சம்பவங்களுடன் தொடர்புபடுத்தி அவர்களைக் கைது செய்வதன் […]

யாழில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேசிய மாநாடு!

தமிழர் விடுதலைக்கூட்டணியின் தேசிய மாநாடு நீராவியடி இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்றுள்ளது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்த சங்கரியின் தலைமையில் மேற்படி மாநாடு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் வட.மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா, வட.மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் மற்றும் சிறீ ரெலோ கட்சியின் தலைவர் உதயராசா உட்பட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

வடக்கு இளைஞர்களின் செயற்பாடுகள் வேதனையளிக்கின்றன: விக்னேஸ்வரன்

வடக்கில் தற்போதைய இளைய தலைமுறையினரின் செயற்பாடுகள் வேதனையளிப்பதாக, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வல்வெட்டி பிரதேசத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “வடக்கு இளைஞர்களின் சீரழிவிற்கு வெளிநாடுகளில் இருந்து கிடைக்கப் பெறுகின்ற பண உதவிகள் முறையற்ற விதத்தில் செலவு செய்யப்படுவதே பிரதான காரணமாக அமைந்துள்ளது. கடந்த காலங்களில் வடக்கில் மாணவர்கள் […]

இலங்கையை ஒருபோதும் பாதுகாப்புத்தளமாக சீனா பயன்படுத்தாது: சீன தூதுவர்

இலங்கையை தாம் ஒருபோதும் பாதுகாப்புத் தளமாக பயன்படுத்தப் போவதில்லை என இலங்கைக்கான சீன தூதுவர் Yi Xianliang தெரிவித்துள்ளார். கொழும்பு துறைமுகத்தில் நேற்றையதினம் (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் அபிவிருத்திக்காக சீனா தனது உதவிகளைத் தொடர்ந்து வழங்கும் என்று குறிப்பிட்ட அவர், கடந்த காலங்களில் சீனா இலங்கையில் எத்தகைய நடவடிக்கைகளை முன்னெடுத்தது என்பதை அவதானித்தால் இதனை அறிய முடியும் என்றும் கூறினார். இலங்கையில் சீன […]